Author: Thana

மடுகஸ்தலாவ ரபர்வத்தை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவர் ஒருவர் மெதவெலகம பகுதியில் தனது நண்பரின் வீட்டுக்கு மாணவர்களுடன் சேர்ந்து படிப்பதற்காக தனது மெதவெலகம பகுதியில் உள்ள நண்பரின் வீட்டுக்கு சென்று படுத்துக் கொண்டு இருந்த போது நேற்று இரவு 10 மணியளவில் சிறுநீர் கழிப்பதற்கு சென்ற போது வீட்டு மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த நிலையில் உடன் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட போது அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.30 மணியளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவன் பசறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இம்முறை தரம் 11ல் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளார் என்பதுடன் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு…

Read More

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஸ்மடுவ பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தன் கைவசம் வைத்திருப்பதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் ஸ்தானத்திற்கு விரைந்து சந்தேகத்திற்கு இடமான நபர்களை சோதனைக்கு உட்படுத்திய போது அவர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சா ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் 19,25,26,35 வயதுடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர்களை இன்றைய தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். ராமு தனராஜா

Read More

ரத்மலானை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதை அடுத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹோட்டலின் உரிமையாளர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Read More

தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தை ஜூலை 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, உள்ளூர் பெரியவர்களுக்கு 200 ரூபாவும், சிறுவர்களுக்கான நுழைவுக் கட்டணமாக 30 ரூபாவும், வசூலிக்கப்படுகிறது. முன்பு பெரியவர்களுக்கு 100 ரூபாவும், சிறுவர்களுக்கு 20 ரூபாவும் கட்டணம் விதிக்கப்பட்டது. தாவரவியல் பூங்காவிற்கு வெளிநாட்டு பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் 3,000 ரூபாவாகவும் வெளிநாட்டு சிறுவர்களுக்கு 1,500 ரூபாவாகவும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்பு வெளிநாட்டு பெரியவர்களுக்கு 2,000 ரூபாவும், சிறுவர்களுக்கு 1,000 ரூபாவும் வசூலிக்கப்பட்டது.

Read More

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)

Read More

ஹோல்புரூக் தேசிய பாடசாலையின் பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தவருடம் சாதாரண தர பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல் கருத்தரங்கு 17.05.2023 அன்று இடம்பெற்றது. வளவளராக பேராதனிய பல்கலை கழக பொறியற் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ் .கே .நவரட்ணராஜா கலந்துகொண்டார். குறித்த கருத்தரங்கானது இணைய தொழிநுட்ப ஊடகம் சாதனம் மூலம் நடைப்பெற்றது.

Read More

நடிகர் சரத்பாபு, தனது 71வது வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நல குறைவாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அன்னார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நடிகர் சரத்பாபுவின் மறைவிற்கு இந்திய திரையுலக பிரபல்யங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read More

நடிகர் சரத்தபாபு காலமானார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக கடந்த 05ம் திகதி அவர் இறந்ததாக சமூக வலைத்தளங்களில் போலியான செய்தி வெளிவந்திருந்த நிலையில் இன்று அவர் இறந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

அவிசாவளை பிரதேசத்தில் தனது மூன்று வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்ததாக கூறப்படும் தந்தையொருவர் இன்று (22) கைது செய்யப்பட்டதாக அவிசாவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். அவிசாவளை, தல்துவ தோட்டத்தைச் சேர்ந்த சந்தேக நபர், குழந்தையைத் தரையில் அடித்துவிட்டு, தனது மனைவிக்கு முன்னால் விஷம் அருந்தியுள்ளார். இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்தேக நபர் அடிப்படை சிகிச்சைகளை பெற்றுக்கொண்டு வைத்தியசாலையிலிருந்து தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். காயமடைந்த குழந்தையின் தலை பிளந்து காதுகளில் இருந்து இரத்தம் வெளியேறியதால், உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அவிசாவளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Read More

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.22.05.2023. நேற்றைய தினம் 21.05.2023. அன்று ஹட்டன் வனத்துறை காரியாலய அதிகாரி ஏற்பாடு செய்த மர கன்றுகள் நாட்டும் நிகழ்வு நோட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள எபடின் கிராமத்தில் இடம் பெற்றது. நிகழ்வில் கிராம மக்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சார்பில் இளைஞர்கள் மற்றும் ஹட்டன் வன காரியாலய அதிகாரிகள் கலந்து கொண்டனர். வன பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஹட்டன் வன காரியாலய அதிகாரிகளான வி.ஜே.கே.ருக் ஷான், திருமதி.ஹன்சிகா பண்டார,நுவான் பிரியதர்ஷன,நிஷாந்த சம்பத், சுரேஷ் ஜயதுங்க,,திலினி ஹர்ஷினி, மற்றும் பி.டி.பியதுங்க ஆகியோர் கலந்து கொண்டு மரக் கன்றுகள் நாட்டினர். நாட்டின் தேவைகேற்ப்ப நீர் ஊற்றுகள் பெருக்கவும் அதிக அளவில் மழை வீழ்ச்சி பெற்று கொள்ள மக்கள் பாவனையில் இல்லாமல் உள்ள இடங்களை இனம் கண்டு மத்திய மலைநாட்டில் இவ்வாறான மரக்கன்றுகள் நடுகை மேற்கொண்டு வருவதாக ஹட்டன் வன காரியாலய அதிகாரி தெரிவித்தார்.

Read More