Author: Thana
கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு வழங்கும் நோக்கில்இ அம்மாவட்டத்தில் உள்ள 55 பட்டதாரிகளுக்குஇ மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் நேற்று (23) ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக முதற் கட்டமாக இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்போது உரையாற்றிய ஆளுநர் செந்தில் தொண்டமான்… ‘நாட்டில் தற்போதைய பொருளாதார சிக்கல் காரணமாக போக்குவரத்துக் கட்டணம் அதிகரித்துள்ளது. அதற்கிணங்கஇ அருகிலுள்ள பாடசாலைகளில் வெற்றிடங்கள் காணப்படுமாயின் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன்இ நியமனம் பெறும் ஒவ்வொரு ஆசிரியரும் அடுத்த வருடத்தினுள் 10 பட்டதாரி ஆசிரியர்களை உருவாக்குவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்’ எனக் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயகஇ ஆளுநரின் தனிப்பட்ட செயலாளர் உட்பட அரசாங்க அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.
செக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் ஹெலிஸ்கா ஷிகோவா (Eliška Žigová) இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உயர்மட்ட குழுவினருடன் இன்று சிநேகபூர்வ கலந்துரையாடலொன்றை நடத்தினார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயமான சௌமிய பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இதொகாவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன் மற்றும் இதொகாவின் உயர்மட்டப் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இச்சந்திப்பில் மலையகம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் பொருளாதார மேம்பாடு குறித்து பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
திம்புள்ளை பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ட்ரைகன் தோட்டத்தில் குழியொன்றினுள் சந்தேகத்திற்கிடமான முறையில் விலங்கொன்றின் உறுமல் சத்தத்தையடுத்து, பொதுமகன் ஒருவர் குழியினுள் இறங்கி பார்வையிட முயற்சித்துள்ளார். இதன்போது குழியினுள் பதுங்கியிருந்த சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகி கொட்டகலை வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானவர் 46 வயதுடைய மாரிமுத்து புஸ்பராஜ் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இவர் பூண்டுலோயாவைச் சேர்ந்தவர் என்றும் திருமண நிகழ்வொன்றிற்காகவே கொட்டகலை வந்துள்ளார். இதுவரையில் சிறுத்தை மீட்கப்படவில்லையெனவும் பொதுமக்கள் அச்சத்துடன் காணப்படுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். – கௌசல்யா
கொழும்பில் பிரபல வர்த்தகப் பெண்ணும் சின்னத்திரை தயாரிப்பாளருமான சுதர்மா ஜயவர்தன என்ற சுதர்மா நெத்திகுமாரவின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த ஆர்.ராஜகுமாரியின் மரணம் பொலிஸ் காவலில் இறந்த சந்தேக நபர்களின் நீண்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட மற்றுமொரு மர்ம மரணமாகும். பொலிஸ் தாக்குதலில் இறந்தாரா? இது இன்னும் மர்மமாகவே உள்ளது. இது தொடர்பான மருத்துவ அறிக்கைகள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் இது தொடர்பான மேலதிக தகவல்கள் இன்று (24) நீதிமன்றத்தில் தெரியவரும். இந்த வழக்கு இன்று கொழும்பு அளுத்கடை நீதிமன்ற இலக்கம் 04 நீதவான் ஹர்ஷன கெகுனாவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் சார்பில், உயிரிழந்த பெண்ணின் சார்பில் அதன் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஆஜராகவுள்ளது. ராஜகுமாரிக்கு என்ன ஆனது? பொலிஸ் காவலில் இறந்த ஆர்.ராஜகுமாரியின் கணவர் செல்லதூர் யேசுராஜ்யா. பதுளை, தெமோதர பிரதேசம் இவர்களது வசிப்பிடமாகும். தொழிலாக அம்பாறை பிரதேசத்தில் உக்வத்தையில்…
வீட்டுப் பாவனையாளர்களுக்கான மின்சாரக் கட்டணம் 23 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் இதன் பயனை 1,744,000 குடும்பங்கள் அடைவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி, தற்போதுள்ள யூனிட் விலை 0-30 யூனிட் வகைக்கு 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் யூனிட் விலை 25 ரூபாவாக மாற்ற புதிய திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை 400 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக குறைக்க முன்மொழியப்பட்டதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். 31 முதல் 60 யூனிட் வரை பயன்படுத்தும் 10,692 மத வழிபாட்டுத் தலங்களுக்கு 7% மின்சாரக் கட்டணம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 0-30 யூனிட்களை பயன்படுத்தும் 15,646 மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணம் ஜூலை மாதத்தில் 23% குறைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஹோட்டல்களுக்கு 29% முதல் 40% வரை மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சிறுத்தை தாக்குதலில் படுகாயமுற்ற தோட்டத் தொழிலாளி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்தியர் எஸ்.ஏ.கே.ஜயசூரிய தெரிவித்துள்ளார். பிரிட்வெல் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த போதே புதன்கிழமை (24) தோட்டத் தொழிலாளி சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அவருடைய முகத்தில் கடுங்காயம் ஏற்பட்டுள்ளது. கையையும் கடித்து காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளது. அந்தச் சிறுத்தை காட்டுக்கு விரட்டியடிக்குமாறு நல்லத்தண்ணி வனசீவராசிகள் அலுவல உத்தியோகத்தர்களுக்கு தெரிவித்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இன்று காலை வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்விலை 297.23 ரூபாயாகவும் விற்பனை விலை 311.23 ரூபாயாகவும் குறைந்துள்ளது. மத்திய வங்கியினால் கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி டொலரின் பெறுமதி 362.66 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சதொச நிறுவனம் மேலும் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உடன் அமுலாகும் வகையில் குறைத்துள்ளது. இதன்படி, LSLபால் மா(400 கிராம்) ரூ.50 குறைந்து ரூ.1,030 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காய்ந்த மிளகாய் 1 கிலோ ரூ.45 குறைந்து ரூ.1,350 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிவப்பு பருப்பு ரூ.10 குறைந்து ரூ.325 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த விற்பனை சோயா மீட் 1 கிலோ 10 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.660 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரிய வெங்காயம் 1 கிலோவுக்கு 6 ரூபாய் குறைந்து ரூ.129 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளை சீனி 1 கிலோ 4 ரூபாய் குறைந்து 239 ரூபாவாக உள்ளது.
அதிக வருமானம் பெறுவோர் சமுர்த்தி உள்ளிட்ட நலன்புரி உதவிகளைப் பெறுவோர் கட்டமைப்பில் தன்னிச்சையாக இருந்து நீக்கப்படுவர். மிகவும் ஏழ்மையில் உள்ள குடும்பத்திற்கு மாதம் 15,000 ரூபாய் உதவி. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள், சமுர்த்தி மற்றும் முதியோர் உதவித்திட்டம் உட்பட தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படும் நலன்புரி உதவிகளை ஜூலை முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. நலன்புரி பயனாளிகள் தமது கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிக் கணக்குகள் இல்லாத பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பிக்கத் தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி. விஜயரத்ன சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு தயாரிக்கும் ‘101 கதை’ கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து…
பண்டாரவளை ஓபதெல்ல வித்தியாலயத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி மாணவர்கள் உள்ளடங்களாக 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.
பண்டாரவளை ஓபதெல்ல வித்தியாலயத்தில் 11 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் 6 பாடசாலை மாணவர்களும் 5 பெற்றோரும் அடங்குவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்