Author: Thana
பாடசாலை மட்ட குத்துச்சண்டை போட்டியில் நு/பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தி 04 குத்துச்சண்டை வீரர்கள் அரையிறுதி போட்டிக்கு தெரிவு
அகில இலங்கை பாடசாலை மட்ட எல்.வி.ஜயவீர கிண்ணத்துக்கான குத்துச்சண்டை கந்தலாய் நகர சபை மண்டபத்தில் இம்மாதம் 9ம் திகதி முதல் 13ம் திகதி வரை நடைபெற்று வருகிறது. இதில் நாடெங்கிலும் உள்ள சுமார் 100 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 400 பாடசாலை மாணவர்கள் பங்குபற்றி வருகின்றனர். இப்போட்டியில் நு/பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தி 7 மாணவர்கள் வெவ்வேறு வயதுபிரிவிலும் எடைப்பிரிவிலும் பங்குபற்றும் நிலையில் அவர்களில் 4 குத்துச்சண்டை வீரர்கள் அரையிறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ள நிலையில் அவர்கள் பெற்ற பெறுபேறுகள் பின்வருமாறு.. எஸ். திலக்சன் (தரம்-11, ஜூனியர் வயது பிரிவு,50-52 எடைப்பிரிவு )-இறுதிபோட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 02.சி.யுவேந்திரன்,(ஜூனியர் வயது பிரிவு,54-57 எடைப்பிரிவு) என்ற போட்டியாளர் டொம்பகொட, சீலரத்ன மகா வித்தியாலயத்தின் டி.என்.யசுர என்ற மாணவனுடன் அரையிறுதி போட்டியில் போட்டியிட்டு 3ம் இடத்தைப்பெற்று வெண்கலப் பதக்கத்தையும் .பி.அபினாஸ் (தரம் 12-சீனியர் வயது பிரிவு,46-48 எடை பிரிவு) கம்பஹா, பண்டாரநாயக்க மத்திய கல்லூரி மாணவன்…
உரத்திற்கான வவுச்சர்கள் மே மாத இறுதிக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த வவுச்சர்கள் இன்று அச்சிடுவதற்காக அரசாங்க அச்சகத்திற்கு வழங்கப்படும். அவற்றை 10 நாட்களுக்குள் அச்சடித்து முடிக்க முடியும். இந்த வவுச்சர்களை குறிப்பாக பண்டி உரம் கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்தவும். அத்துடன் இந்த வவுச்சர் ஊடாக விருப்பமான உர வகைகளை கொள்வனவு செய்ய முடியும் என்றும் கூறினார். மேலும், இம்முறை சிறுபோக பயிர்ச்செய்கைக்கு தரமான விதைகளைப் பயன்படுத்துமாறும், அதனூடாக அதிக விளைச்சலை பெற முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதேபோன்று, விளைச்சலுக்கு தேவையான கலைக்கொல்லிகள் மற்றும் கிருமி நாசினிகள், தனியார் நிறுவனங்களினால் இறக்குமதி செய்யப்படும். அவற்றை குறைந்த விலையில் வழங்க அந் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்தின்…
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை…
வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம், சிலாபம், முன்னேஸ்வரம் குருணாகல் வீதி, அருள்மிகு நல்ல விநாயகர் திருக்கோயில் தலை தாழா நிலை தந்து தாங்கிநிற்கும் விநாயகரே திடங்கொண்ட மனம் தந்து எமக்கருள வேண்டுகிறோம் துன்பங்கள் அண்டாமல் துடைத்தெறிய வேண்டும் முன்னேஸ்வரப் பதியமர்ந்த நல்ல விநாயகப் பெருமானே குற்றங்கள் பொறுத்து நலம் வழங்கும் விநாயகரே குவலயத்தில் அமைதியையே அருளிடவே வேண்டுகிறோம் இன்பநிலை தந்தெம்மை அரவணைக்க வேண்டும் முன்னேஸ்வரப் பதியமர்ந்த நல்ல விநாயகப் பெருமானே ஆற்றலுடன் முன்செல்ல அருளளிக்கும் விநாயகரே ஆதரவு தந்தெம்மை வாழவைக்க வேண்டுகிறோம் நிம்மதியை நாமென்றும் அனுபவிக்க வேண்டும் முன்னேஸ்வரப் பதியமர்ந்த நல்ல விநாயகப் பெருமானே எங்கும் என்றும் எமைக்காக்கும் எங்கள் விநாயகரே ஏற்றமிகு வாழ்வு தந்து எமை உயர்த்த வேண்டுகிறோம் எதிர்காலம் வளம் பெற்று சிறப்படைய வேண்டும் முன்னேஸ்வரப் பதியமர்ந்த நல்ல விநாயகப் பெருமானே என்றும் உடனிருந்து எமக்கருளும் விநாயகரே எதிர்த்து வரும் தீமைகளைத் தடுத்திடவே வேண்டுகிறோம் பயமில்லா நல்ல வாழ்வைப்…
கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை இன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் முன்னிலையாக வந்த இம்ரான் கானை ரேஞ்சர் படையினர் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.இதையடுத்து, இரவு முழுவதும் இரகசிய இடத்தில் வைத்து முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் என்.ஏ.பி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அதன் பின்னர், காவல் தலைமையகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மூடிய அறைக்குள் இம்ரான் கான் முன்னிலைப்படுத்தப்பட்டார்.இந்தநிலையில், அவரை இன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 200 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.இதற்கமைய, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இந்த விலை குறைப்பு அமுலாகும் எனவும் வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, சீமெந்து விலை அடுத்தவாரம் குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சந்தையில், சீமெந்து மூடை ஒன்று, 2,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.எவ்வாறிருப்பினும், அடுத்தவாரம், சீமெந்து மூடை ஒன்றின் விலையை, குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க எதிர்பார்ப்பதாக, சீமெந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, வீட்டுக்கடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், சீமெந்துக்கான கேள்வி தற்போது 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இதன் காரணமாக, நாட்டின் முன்னணி சீமெந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று, தமது நான்கு தொழிற்சாலைகளில், மூன்றை மூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.எதிர்வரும் 29ஆம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெறவுள்ளதால் இவ்வாறு 27ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை மாற்றத்தை தடுப்பதற்குப் பதிலாக அதனை தாமதப்படுத்தல் மாத்திரமே இதுவரை நடந்துள்ளது- சுற்றுச்சூழல் முன்னோடி பதக்கம் வழங்கும் விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு. உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் எனவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளிப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் இன்று உலகிற்கு சவாலாக உள்ள போதிலும் அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான நிலையமொன்று கிடையாது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஏனைய நாடுகளை இணைத்து அதற்கான பணிகளை செய்ய இலங்கை தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். காலநிலை மாற்றத்தை தடுத்து நிறுத்துவதற்கு ப் பதிலாக அதனை தாமதப்படுத்துவதே இதுவரை நடந்துள்ளது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (11) பிற்பகல் நடைபெற்ற 10ஆவது சுற்றாடல் ஜனாதிபதி பதக்க விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிறந்த…
இரண்டாம் இணைப்பு கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடம் ஒன்றை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் குறித்த இடத்தை அகழ்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முதலாம் இணைப்பு கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் காணாமல் போயுள்ள நிலையில், குறித்த பகுதிக்கு திடீரென பொலிஸார் விரைந்துள்ளனர். குறித்த பகுதி தற்போது பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் அவ்விடத்தில் சடலம் ஒன்று இருப்பதாக சந்தேகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியில் Fathima Munawwara என்ற இளம் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயுள்ள நிலையில், பொலிஸாரின் இந்த செயற்பாடு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, சிசிடிவி காணொளி பெறப்பட்ட பள்ளிவாசலில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் பொலிஸார் இவ்வாறு முற்றுகையிட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பொலிஸாரின் இந்த…
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் அமைச்சரவையிலும் வலியுறுத்தவுள்ளேன் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (12.05.2023) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அண்மையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காலாவதியான மருந்து பாவனையாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது குணமடைந்து வருகின்றனர். ஜனாதிபதி, நிதி அமைச்சர், சுகாதார அமைச்சர் ஆகியோருடன் இது சம்பந்தமாக அமைச்சரவையில் பேச்சு நடத்தவுள்ளேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை நான் மேற்கொள்வேன். நுவரெலியாவில் வறுமை வீதம் அதிகரித்துள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம்…