Author: Thana
பிரான்சில் இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான உலக இராணுவ டிரையத்லான் செம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் முப்படையை வீரர்களில் சேர்ந்த ஏழு வீரர்கள் பிரான்சில் காணாமல் போயுள்ளனர். அதன்படி, நிகழ்விற்காக பிரான்ஸ் சென்ற 13பேர் கொண்ட தூதுக்குழுவின் தலைவரிடமிருந்து இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், கடற்படையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இலங்கை விமானப்படையின் இரண்டு அதிகாரிகள், தமது கடவுச்சீட்டுகளை திருடி, குழுவிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலி, நெலுவ தெல்லாவ, மியானாவடுர பிரதேசத்தில் ஒரே வீட்டில் தங்கியிருந்த பல குடும்பங்களைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நெலுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 01 வயது, 03 மாதங்கள், 10 மற்றும் 13 வயதுடைய நான்கு சிறுவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இவர்களின் பெற்றோர்கள் நெலுவ பிரதேசத்திலுள்ள தோட்டங்களில் தற்காலிகமாக தொழில் செய்வதற்காக மியானதுர பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கி தங்கியிருந்த நிலையில் நேற்றிரவு முதல் பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் 119 இற்கு அறிவித்துள்ளது. காணாமல் போன சிறுவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை
பாவனைக்கு உதவாத பழுதடைந்த 300 கிலோகிராம் கருவாடும், கருவாடு விற்பனைக்காக கொண்டு செல்வதற்கான லொறி ஒன்றினையும் கைப்பற்றியுள்ளதாக ஹாலிஎல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. ஹாலிஎல நகர் பகுதி மற்றும் சந்தைகளில் பாவனைக்கு உதவாத கருவாட்டினை விற்பனை செய்வதாக சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் குறித்த களஞ்சியசாலையை பரிசோதித்த சுகாதார அதிகாரிகள் பாவனைக்கு உதவாத 300 கிலோகிராமிற்கும் அதிகமான கருவாட்டினை மீட்டுள்ளனர். குறித்த வியாபாரியான சந்தேக நபரை நாளைய தினம் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் குறித்த களஞ்சியசாலை சுகாதார அதிகாரிகளினால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சுற்றிவளைப்பு ஹாலிஎல சுகாதார வைத்திய அதிகாரிகள் ஆர்.எம்.பீ.பீ.விஜேசோம மற்றும் பிரசாத் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ராமு தனராஜா
ஹாலிஎலயில் வேன் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 11பேர் பதுளை வைத்தியசாலையில் அனுமதி.
நேற்று இரவு தோவ விகாரைக்கு பதுளையில் இருந்து சென்ற நடன குழுவினர் மீண்டும் பதுளை பகுதிக்கு இன்று அதிகாலை திரும்பும் வேளையில் பதுளை பண்டாரவளை வீதியில் ஹாலிஎல பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பாரிய மரம் ஒன்றில் மோதி வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணித்த 11 பேர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுள் 8 பெண்களும் 3 ஆண்களுமாக 20 வயதுக்கு குறைந்தவர்களே வேனில் பயணித்ததாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் 7 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியாத போதிலும் மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா
அவுஸ்ரேலியா- விக்டோரியா- எல்லை வீதி, அருள்மிகு ஸ்ரீ சிவாவிஷ்ணு திருக்கோயில் அகிலத்தை ஆட்டுவிக்கும் ஐயன் சிவனாரும், காத்து அருளுகின்ற தேவன் திருமாலும் இருந்தருளும் திருக்கோயில் சைவ மென்றும் வைஷ்ணவமென்றும் பேதமற்ற பெருங்கோயில் அவுஸ்ரேலியா நாட்டிலுள்ள எங்கள் சிவாவிஷ்ணு திருக்கோயில் அவுஸ்ரேலியா பெருந்தீவில் அமைந்திட்ட பெருங்கோயில் அமைதி யெங்கும் நிலவிடவே அருளுகின்ற இறைகோயில் கேட்டவரம் தந்துலகை ஆட்கொள்ளும் அருள் கோயில் அவுஸ்ரேலியா நாட்டிலுள்ள எங்கள் சிவாவிஷ்ணு திருக்கோயில் பெருங்கடல் சூழவுள்ள தென்னாட்டிலுள்ள கோயில் திக்கெங்கும் திருவருள் பொழியும் இறைவர் உறை கோயில் கேட்டவரம் தந்துலகை வாழவைக்கும் திருக்கோயில் அவுஸ்ரேலியா நாட்டிலுள்ள எங்கள் சிவாவிஷ்ணு திருக்கோயில் தென்கோடி கண்டமதில் நிலை பெற்ற பெருங்கோயில் அனைத்துலக மக்களுக்கும் அமைதி தரும் இறை கோயில் உலகிற்கு அமைதிதர எழுந்திட்ட இறைவர் உறை கோயில் அவுஸ்ரேலியா நாட்டிலுள்ள எங்கள் சிவாவிஷ்ணு திருக்கோயில் உமையம்மை உடன் கொண்ட சிவனுறையும் திருக்கோயில் காக்கும் கடமை கொண்ட திருமாலும் இருந்தருளும் பெருங்கோயில் அதர்மத்தை…
50 கிலோ கிராம் சீமெந்து பொதியின் விலை 150 ரூபாயால் குறைக்கப்படவுள்ளது. நள்ளிரவில் இருந்து 50 கிலோ கிராம் சீமெந்து பொதியின் 2 ஆயிரத்து 600 என்று அறிவிக்கப்பட்டது.
வவுனியா – பறயனாலங்குளம் பகுதியில் திருமணமான பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பூவரசங்குளம் – நீலியாமோட்டை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே சுட்டுக்கொல்லப்பட்டார். அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே தாக்குதல் நடத்தியுள்ளார். உயிரிழந்த பெண் திருமணமாகி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நீலியமோட்டை பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார். திருமணத்திற்கு முன்னர் அந்தப் பெண்ணை சந்தேக நபர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். திருமணத்தின் பின்னரும் அவர் அந்த பெண்ணுக்கு இடையூறுகளை செய்து வந்ததாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். இன்று அதிகாலை அவர் அந்தப் பெண்ணை சுட்டுக் கொன்றார் என பொலிஸ் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இந்த கொலையின் பின்னர், சந்தேக நபர் நீலியமோட்டை கோவிலுக்கு அருகில் வந்து தன்னைத்தானே சுட்டு, அவரும் உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக வலுவடைந்த Mocha என்ற பாரிய சூறாவளியானது நேற்று, வட அகலாங்கு 15.10 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 88.80 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்தது. அது வடக்கு – வடகிழக்கு திசையில் மேலும் வலுவடைந்து கொண்டு நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியானது மே 14ஆம் திகதி நண்பகலளவில் தென்கிழக்கு பங்களாதேஷ் மற்றும் வடக்கு மியான்மார் கரைகளை கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் சிலாபத்திலிருந்து புத்தளம், மன்னார், காங்கேசந்துறை மற்றும்முல்லைத்தீவு ஊடாகதிருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் நடவடிக்கைகளில்ஈடுபடுவது ஆபத்தானதாகும். எனவே, மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். இதேவேளை, மேல்,சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி…
கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளினால் கடும் காயம் விளைவிக்கும் வகையில் குடும்பத் தலைவர் மீது தாக்குதல் நடத்தி அதனை காணொளியாக்கி டிக் டொக் செயலில் பதிவிட்ட வடமராட்சி நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த 8 பேர் கடந்த 10 நாட்களாக தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டனர். காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை நேற்று (12) இரவு முன்னெடுத்தனர். நீண்ட நாள் முரண்பாடு காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்னர் 54 வயதுடைய குடும்பத் தலைவர் மீது கும்பல் ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவத்தில் படுகாயடைந்த அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். தாக்குதல் நடத்தும் காணொளி பதிவை தாக்குதல் நடத்துவர்களின் முகங்களை மறைத்து டிக் டொக் (Tik tok) செயலில் வெளியிடப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தோர் தலைமறைவாகியிருந்தனர்.…
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சிறுமி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவரை மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். இன்று காலை 7 மணியளவில் கைவேலிப்பகுதியில் 10 வயதுடைய சிறுமி தனியார் வகுப்பிற்காக தாயாரினால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் சிறுமியினை அழைத்து கையினை பிடித்துக்கொண்டு முகத்தினை துணியால் பொத்திப்பிடித்த போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். வீதியால் சென்ற மக்கள் இதனை அவதானித்து சத்தமிட்ட போது இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளார்கள். இதன் பின் சிறுமி வழங்கிய தகவலின் படி குறித்த பகுதியினை 23 வயதுடைய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். பாதிக்கப்பட்ட சிறுமியினையும் அவரது தாயாரினையும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு சென்று அங்கு சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய சிறுமி மருத்துவமனையில் தங்க…