Author: Thana
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியா செல்வதற்கு முயன்ற 6 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் உட்பட 6 பேர் இந்தியா செல்ல முயன்றுள்ளனர். அப்போது அவர்களை நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மன்னார், எருக்குழும்பிட்டி கடற்பகுதியில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 06 பேருடன் டிங்கி படகு ஒன்றை கைப்பற்றினர்.
கொவிட்-19 பெருந் தொற்று பரவல் காரணமாக பிரகடணப்படுத்தப்பட்ட சர்வதேச அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவர உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது. மூன்று ஆண்டுகளின் பின்னர் இந்த அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொவிட்-19 தொற்று மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை குறைடைந்ததை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த அமைப்பு கூறுகிறது. கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதும், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவதும் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், கடந்த சில மாதங்களில், கொவிட் வைரஸை எதிர்கொள்வதற்கான குறிப்பிடத்தக்க நோய் எதிர்ப்பு சக்தி உலக மக்களிடையே உருவாகியுள்ளது அவதானிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகின்றது. கடந்த 03 ஆண்டுகளில் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வந்தமையினால், உலக சுகாதார ஸ்தாபனம் கொவிட் தொற்றுநோயை அவசர நிலைமையாக அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், கொவிட் -19 இன் தற்போதைய…
ஹப்புத்தளை பத்கொட பகுதியில், இன்று அதிகாலை எரிபொருள் ஏற்றி சென்ற பௌசர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 1.45மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இருந்து, 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன் ஹப்புத்தளை நோக்கிப் பயணித்த குறித்த எரிபொருள் பௌசர், வீதியை விட்டுவிலகிச் சென்று அருகில் உள்ள வீடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, காயமடைந்த குறித்த வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த விபத்தினால், குறித்த வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், வீட்டிலுள்ளவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ் விபத்தால் டீசல் கொள்கலனில் கசிவு ஏற்பட்டதை அடுத்து, அதிலிருந்து டீசல் வெளியேறுவதாகவும், குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவானோர் அதனை நிரப்பிச் செல்வதை அவதானிக்க முடிவதாகவும் கூறப்படுகிறது. மேலதிக விசாரணைகளை ஹப்புத்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
மே 06ஆம் திகதியிலிருந்து தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பேருவளையிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி மற்றும் செல்லகந்த கிராம சேவையாளர் பிரிவுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையினர் வெள்ளிக்கிழமை (5) உடனடி உதவிகளை மேற்கொண்டனர். மாவட்டச் செயலக ஊழியர்களுடன், 03 அதிகாரிகள் மற்றும் 23 சிப்பாய்கள் வெள்ளத்தால் சிக்கித் தவித்த 20க்கும் மேற்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர். மேலும் பத்து நபர்களுக்கு நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலில் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, 14 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஜேஎன்ஆர்என்கே ஜெயமான்ன ஆர்டபிள்யூபீ, 141 வது காலாட் பிரிகேட் தளபதி எல்ஜிபி காரியவசம் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, ஆகியோர் அவசரகால மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர். மேலும், 2 வது…
இராணுவ பொலிஸ் படையணி தனது 33 வது ஆண்டு நிறைவை 2023 ஏப்ரல் 19-28 வரை பொல்ஹெங்கொட இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் கொண்டாடியது. இராணுவ சம்பிரதாயங்களுக்கமைவாக இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அனில் எல் இளங்ககோன் அவர்களுக்கு பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், இராணுவ சம்பிரதாயங்களின்படி அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அன்றைய பிரதம அதிதியான மேஜர் ஜெனரல் அனில் எல் இளங்ககோன் அவர்களை, ஒழுக்க பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா அவர்களினால் படையணி தலைமையகத்திற்கு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். இராணுவ பொலிஸ் படையணி பேரவை உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள்,சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். தலைமையக வளாகத்தில் மரக்கன்று நடுதல், குழு புகைப்படம் எடுத்தல் என்பவற்றில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் இணைந்து கொண்டார். இராணுவ பொலிஸ் படையணி தலையைகத்தின் கோப்ரல் உணவகத்தில்…
ஜூன் மாதம் முதல் எரிபொருள் விற்பனைக்கான விலை வரம்பை அறிவிக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்குக் காரணம், மே மாத இறுதியில் இருந்து, சீன சினோபேக் மற்றும் அமெரிக்க ஷெல் நிறுவனங்கள் இந்த நாட்டில் எரிபொருளை விநியோகிக்கத் தொடங்கின. அந்த நிறுவனங்கள் சந்தைக்குள் நுழைந்ததன் மூலம் இலங்கையில் எரிபொருள் விநியோகம் நான்கு நிறுவனங்களின் கீழ் நடைபெறுகிறது. அந்த நிறுவனங்கள் சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், சிலோன் இந்தியன் ஆயில் கம்பெனி, சினோஃபாக் மற்றும் ஷெல். இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடவுள்ளதாக அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம் முதலில் அறிவித்திருந்த போதிலும், தற்போது அந்த நிறுவனம் தயக்கம் காட்டி வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நான்கு நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய முரண்பாடுகளைக் குறைப்பதற்காக எரிபொருளின் விற்பனை விலை வரம்பை அறிவிக்குமாறு ஷெல் நிறுவனம் அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. அதனை மையமாக வைத்து டீசல், பெற்றோல்,…
மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாப்பாகடவெவ மஹியங்கனை பகுதியில் கடந்த 3ம் திகதி வீட்டில் இருந்து நான்கு லட்சம் ரூபாய் பணத்துடன் மாடு பிடிப்பதற்காக ரிதிமாலியெத்த பிரதேசத்திற்கு சென்று வீடு திரும்பவில்லை என 4 ம் திகதி மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மஹியங்கனை பொலிஸாரும் ரிதிமாலியத்த பொலிஸாரும் இணைந்து தேடுதலை மேற்கொண்ட போது ரிதிமாலியத்த உலுல்ல தெஹிகம பிரதேசத்தில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் குறித்த நபரின் உந்துருளி மீட்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தேடுதலை மேற்கொண்ட போது நீரோடைக்கு அருகாமையில் புதைக்கப்பட்ட நிலையில் குறித்த நபரின் சடலமும் மேலும் ஒரு இடத்தில் புதைக்கப்பட்ட நிலையில் வாள் ஒன்றும் கையடக்கத் தொலைபேசி ஒன்றும் கைப்பையும் மீட்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 37 வயதுடைய ரிதிமாலியத்த உலுல்ல பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சடலம் அவ்விடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன்…
க/கலைவாணி தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி கடந்த 04.05.2023 அன்று பாடசாலை மைதானத்தில் பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி சுசிலா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது இடம்பெற்றது. குறித்த போட்டிக்கு கம்பளை வலய பணிப்பாளர் எஸ்.உமேஸ்நாதன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.மேலும் உதவி கல்வி பணிப்பாளர்களான திருமதி எம் .இந்ராணி ,திரு .ரிச்சர்ட் சேவியரும் கலந்துகொண்டனர். அதேவேளை பிரதேச பொலிஸ் அதிகாரிகள், பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.கொலம்பியா, அப்பலோ,டிஸ்கவரிஆகிய மூன்று இல்லங்களில் டிஸ்கவரி முதலாமிடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தலவாக்கலையில் அண்ணன் தங்கை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; பின்பு தங்கை எடுத்த விபரீத முடிவு!
முகத்துக்கு பூசும் கிரீம் மூலம் அண்ணன் தங்கை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கதால் பதினோரு வயதுடைய மாணவி தூக்கிட்டு தற்கொலை. தலவாக்கலை ட்றூப் தோட்டத்தில் துயரமான சம்பவம். இச்சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இன்று போயா தினம் என்பதால் அண்ணன் தங்கை மற்றும் பாட்டியுடன் ஆலயத்திற்கு செல்ல தயாராகும். போது அண்ணன் பயன்படுத்தும் கிரீமை தங்கை பயன்படுத்தியுள்ளார். இதன் போது அண்ணன் தங்கையிடம். ஏன் எனது கிரீமை போடுகின்றாய் என கேட்டுள்ளார். அதன் பின்னர் பாட்டியுடன் குறித்த மாணவன் ஆலயத்திற்கு செல்லும் போது தனது தங்கையையும் அழைத்த போது ஆலய வழிபாட்டில் கலந்து கொள்ள வருவதற்கு மருத்துள்ளார் இதை அடுத்து பாட்டியும் மாணவனும் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை முடித்து கொண்ட ஆலயத்தில் வழங்கப்பட்ட அன்னதானத்தினை தங்கைக்கும் எடுத்துகொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அயலவர்கள் உன்னுடைய சகோதரி இறந்துள்ளதாக தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து குறித்த இளைஞன் மற்றும் பாட்டியும்…