Author: Thana
(க.கிஷாந்தன்) இலங்கையில் வெசாக் தினம் தற்போது நாடு முழுவதும் கொண்டாடபட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் காணப்படும் பௌத்த வணக்கஸ்தலங்களில் விஷேட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக மலையகத்தின் அட்டன் நகரத்தில் சோறு அன்னதானம் (பத் தன்சல்) 05.05.2023 வழங்கபட்டது. இந்த அன்னதான நிகழ்லில் இன மத பேதமின்றி, நகர மற்றும் கிராம மக்கள் தோட்டபுர மக்கள்¸ அட்டன் பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள்¸ உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
டி.சந்ரு செ.திவாகரன் கடந்த ஜனவரி மாதம் 20ம் திகதி நானுஓயா – ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 51 பேர் படுகாயமடைந்திருந்தனர். அதே இடத்தில் வேன் ஒன்று நேற்று (06.05) வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நானுஓயா ரதெல்ல பிரதேசத்தில் இருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த வேன் வீதியை விட்டு விலகி வீதியின் மறுபக்கத்திற்கு சென்று விபத்துக்குள்ளாகியிருந்தால் பாரிய உயிர் சேதங்கள் இடம் பெற்றிருக்கும் எனவும் , எனினும் வேனில் பயணித்தவர்கள் அதிஸ்ட வசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கிறனர். இவ்வீதி செங்குத்தான சரிவுகளையும் பாரிய வளைவுகளையும் கொண்டுள்ளதால், தகுந்த தடையாளிகளை பாவித்து வாகனங்களை செலுத்த வேண்டும் என அறிவிப்பு பலகைகளும் இவ்வீதியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . விபத்து தொடர்பிலான…
பாணந்துறை, வாலான சந்தியில் இன்று (07) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற வெசாக் தோரணத்தை பார்வையிட வந்தவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த நபர்களை ஏற்றிச் சென்ற ஜீப் வண்டியின் சாரதி தூங்கியமையினால் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஜீப் வீதியில் கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த ஜீப்பில் கொழும்பில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த குழுவினர் பயணித்துள்ளதுடன் வீதியிலுள்ள மின் கம்பம் மற்றும் இரும்பு வேலி என்பனவும் விபத்தில் சேதமடைந்துள்ளன. ஜீப் வண்டி கவிழ்ந்ததில் காயமடைந்த 10 பேர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவர். விபத்தில் சிக்கியவர்கள் மத்துகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களின் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. அண்மையில் கண் சத்திரசிகிச்சைக்குள்ளான 10 நோயாளர்கள் தாம் மீண்டும் உரிய பார்வை கிடைக்காமல் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் சத்திரசிகிச்சைக்குள்ளான 10 நோயாளர்களே இவ்வாறு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் இதில் ஓரளவு கண் பார்வை குறைவாக இருந்து சத்திரசிகிச்சை செய்த பின் முற்றாக பார்வை இழந்துள்ளதாகவும் , பாதிக்கப்பட்ட அனைவரும் 50 வயதிற்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இந்தவிடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மகேந்திர செனவிரட்னவிடம் வினவிய போது இவ்விடயம் உண்மை ,தேசிய வைத்தியசாலையில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி ப்ரெட்னிசோலோன் மருந்தை பயன்படுத்தியமையால் ஏற்பட்ட சிக்கல் காரணமாகும் என நினைக்கின்றோம். தற்போது அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை செய்கிறோம். இன்னும் ஓரிரு…
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆக்கரத்தனை கிரிகல பகுதியில் சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி இருவேறு வீடுகளில் துப்பாக்கிகள் வைத்திருப்பதாக பசறை ஆக்கரத்தனை விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் ஸ்தானத்திற்கு விரைந்து சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது சூட்சுமமான முறையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த shot gun ரக துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதோடு கிரிகல ஆக்கரத்தன்ன பகுதியை சேர்ந்த 44வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் அதே பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளனர். இதன்போது 47 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்த விஷேட அதிரடிப் படையினர் இருவரையும் துப்பாக்கிகளையும் பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியரட்ணவின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறித்த இரு சந்தேக நபர்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு…
வெசாக் போயா தினமான நேற்று 47 வயதுடைய பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் 27 வயதுடைய இளைஞர் ஒருவரை வெலிகந்த பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞன் வெலிகந்த சிங்கபுர பகுதியைச் சேர்ந்தவர். பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டு வீட்டிற்கு வந்த இளைஞன், வீட்டில் யாரும் இல்லாததை உணர்ந்து பெண்ணை வன்புணர்வு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அப்போது, பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் குறித்த நபரை மடக்கிப் பிடித்த போதும், இளைஞனின் தந்தை வந்து அவரை மீட்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞனும் தந்தையும் வெலிகந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவின் மன்னராக மூடிசூடிக்கொண்ட 3ஆம் சார்ல்ஸ் அரியணையில் அமரவைக்ககப்பட்டார். மன்னரின் தலையில் கிரீடம் சூட்டப்படும் ஒரு மதம் சார்ந்த வழக்கமான நிகழ்ச்சியே முடிசூட்டுதல் எனப்படுகிறது. இங்கிலாந்து திருச்சபையின் தலைவர் என்ற அங்கீகாரத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதுடன், இந்த உரிமை மற்றும் அதிகாரங்களை மன்னருக்கு மாற்றும் நிகழ்ச்சியாகவும் இந்த நிகழ்வு இருக்கும். முடிசூட்டும் இருக்கையிலிருந்து எழுந்து அரியணையை நோக்கி சென்ற மன்னருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு அரியணையில் அமர வைக்கப்படுவார். பின்னர் மன்னரின் மனைவி கமீலாவுக்கும் சடங்குகள் நடத்தப்பட்டு, அவரது தலையிலும் கிரீடம் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் லண்டனில் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் போது மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கு வாழ்த்துகளை கூறிய ஜனாதிபதி, அவருடன் சுமூகமாக கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, இச் சந்திப்பில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார். இம்மாநாட்டில் இளையோரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான கல்வி மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு பொதுநலவாய அமைப்பு விரிவான திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி தனது உரையில் வலியுறுத்தினார். டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக தொடர்பாடல்களை வலுப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரினார். இம்மாநாட்டிற்கு இணையாக இடம்பெற்ற ‘Fireside Chat’நிகழ்வில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க கலந்துகொண்டார். ‘Fireside Chat’ நிகழ்வானது பொதுநலவாய மாநாட்டிற்கு அமைவான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் மேடையாகும். இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கானா நாட்டு ஜனாதிபதி நானா எட்டோ அக்குபோ – எட்டோ…
கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் ஐ.சி.சி.யின் ஆடவர்க்கான ஒருநாள் அணி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. கராச்சியில் நடந்த இருதரப்பு ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான அபார வெற்றிக்குப் பிறகு, ஆண்கள் ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் புதிய நம்பர்-1 அணியாக உள்ளது. இன்னும் ஒரு ஆட்டம் எஞ்சியுள்ள தொடரில் 4-0 என முன்னிலை வகிக்கும் பாகிஸ்தான் 113 புள்ளிகளைப் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த தரவரிசையில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா முறையே 2, 3 ஆம் இடங்களை பிடித்துள்ளன. தொடரின் தொடக்கத்திற்கு முன்னர் ஒருநாள் தரவரிசையில் 106 புள்ளிகளுடன் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைவர் கே.எல்.ராகுல் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். இதனால் அவர் எதிர்வரும் ஜூன் மாதம் லண்டனில் ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இழக்க நேரிடலாம் என்றும் கூறப்படுகின்றது. எவ்வாறெனினும் அவரது மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் அதனை தீர்மானிக்கும். இந்நிலையில் ராகுலுக்கு பதிலாக மாற்று வீரரை தேடுவதற்கான முயற்சியில் லக்னோ அணி இன்னும் கவனம் செலுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் அவர்களுக்கு இன்னும் நான்கு லீக் போட்டிகள் மாத்திரம் எஞ்சியுள்ளன. மேலும் அவர்கள் பிளேஆஃப்க்குத் தகுதி பெற்றால் இன்னும் அதிகமான ஆட்டங்களில் விளையாடலாம். ராகுலுக்குப் பதிலாக க்ருனல் பாண்டியா ஏற்கனவே அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.