Author: Thana
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கால்வின் டேவிஸ் தனது 51வது வயதில் காலமானார். முன்னாள் 100 மீட்டர் உலக சாம்பியனான டோரி போவி தனது 32 வயதில் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டோரி போவி, 2017 இல் உலக சாம்பியனாக சாதனை படைத்திருந்ததுடன், 2016 இல் ரியோ விளையாட்டுப் போட்டிகளில் மூன்று ஒலிம்பிக் பதக்கங்களை வென்றார். “டோரி போவி காலமானார் என்ற சோகமான செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் துக்கத்திற்கு ஆளாகிறோம்” என்று ஐகான் நிர்வாகம் ட்விட்டரில் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கால்வின் டேவிஸ் தனது 51வது வயதில் காலமானார் என்று உலக தடகளப் போட்டியின் நிர்வாகக் குழு புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. டேவிஸ் 1996 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலம் வென்றார். மேலும் 1995 ஆம் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த…
டெங்கு, மலேரியா, எலி காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.மக்கள் தாங்கள் எந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து சொந்த முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.டெங்கு, மலேரியா மற்றும் எலிக் காய்ச்சல் ஆகிய நோய்களும் தற்போது வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது.எனவே, 48 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சல் நீடித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு சுகாதார அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.இலங்கையில் 2023 ஆம் ஆண்டில் 30,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.இதற்கிடையில், மழைக்காலத்தில் எலிக்காய்ச்சலால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.தொற்றுநோயியல் பிரிவின் கூற்றுப்படி, இரண்டு பருவமழைகளைத் தொடர்ந்து எலிக்காய்ச்சல் உச்சத்தை அடைவதால், பருவகால மாறுபாட்டால் நோய் பரவும் அச்சுறுத்தல் காணப்படுகிறது.இந்த சூழலில், சுகாதார அதிகாரிகள், குறிப்பாக உள்ளங்கால் அல்லது கால்களில்…
வெசாக் தினத்தை முன்னிட்டு சிறை கைதிகளை சந்திப்பதற்கு, அவர்களது உறவினர்களுக்கு இரண்டு நாட்கள் விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.அதற்கமைய, நாளை (5) மற்றும் நாளை மறுதினம் (6) இவ்வாறு சிறைக்கைதிகளை சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.கைதிகளின் உறவினர்கள் அவர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் இனிப்புகளை பொதிகளை கைதிகளுக்கு வழங்க முடியும்.சிறைச்சாலை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளின்கீழ் பார்வையாளர்கள் கைதிகளை சந்திக்க வேண்டும்.நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளில் இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
உலக வங்கியின் ஆளுநர்கள் சபை புதிய தலைவரை தெரிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா, 5 வருட காலத்திற்கு உலக வங்கியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அஜய் பங்கா சுமார் 24,000 பணியாளர்களைக் கொண்ட உலகளாவிய அமைப்பான Mastercard இன் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றினார்.இந்த நிலையில் உலக வங்கியின் 14 ஆவது தலைவராக அஜய் பங்கா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அத்துடன், பொருளாதார நிபுணர் மற்றும் டிரம்ப் அரசாங்கத்தில் பணியாற்றிய அமெரிக்க திறைசேரியின் அதிகாரியுமான இவர் ஜூன் 2 ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சேர்பியாவின் தலைநகர் பெல்கிரேட்டில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர்.அதேபாடசாலையில் கல்வி பயிலும் 14 வயதுடைய மாணவர் ஒருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.உயிரிழந்தவர்களில் 8 பாடசாலை மாணவர்களும், ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தரும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.இந்த தாக்குதலில் மேலும் 6 மாணவர்களும், ஆசிரியர் ஒருவரும் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சந்தேகநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கொல்ல தாம் சதி செய்யவில்லை என யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.ரஷ்ய ஜனாதிபதியை புட்டினை கொலை செய்ய 2 ஆளில்லா விமானங்களை அனுப்பியதாக கிரெம்ளின் குற்றம்சாட்டியதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறினார்.நேற்று (3) கிரெம்ளின் அருகே வந்த இரண்டு ஆளில்லா தாக்குதல் விமானங்களை சுட்டு வீழ்த்த ரஷ்ய படைகள் நடவடிக்கை எடுத்தது.மின்னணு ரேடார் அமைப்பைப் பயன்படுத்தி விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் கூறினர்.இந்த சம்பவத்திற்குப் பிறகு, யுக்ரைன் இதன் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.எவ்வாறாயினும், தனது படைகள் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக மட்டுமே போராடுவதாக யுக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு அம்பிலிபிட்டிய மற்றும் செவனகல பிரதேசங்களில் வாழைப்பழம் செய்கை அதிகரித்துள்ளதால் இரண்டு வாழைப்பழம் பதப்படுத்தும் வலயங்களை நிறுவ விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது விவசாய அமைச்சின் கீழ் விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்டத்தினால் ராஜாங்கனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இரண்டு வாழை ஏற்றுமதி மாதிரிக் கிராமங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், செவனகல மற்றும் எம்பிலிபிட்டிய வாழை விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்வாழை ஏற்றுமதி மாதிரிக் கிராமத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன், செவனகல பிரதேசத்தில் 200 ஏக்கரில் கேவன்டிஷ் வாழை இனத்தையும், அம்பிலிபிட்டிய மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களில் 400 ஏக்கரில் புளி வாழை இனத்தையும் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு தோட்டங்களும் முதற்கட்டமாக பயிரிடப்பட்டு, பின்னர் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தில் 800 ஏக்கராக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்தில் புளிவாழை திட்டத்தை இயற்கை பயிராக ஊக்குவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் முதலாவது கரிம…
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறவுள்ள மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை பிரித்தானியாவுக்கு பயணமானார்.ஜனாதிபதியுடன் இரண்டு பணியாளர்களும் இதில் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.லண்டனின் பழமையான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சனிக்கிழமை நடைபெறும் முடிசூட்டு விழாவில் அரச குடும்ப உறுப்பினர்கள், உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்கள் கலந்துகொள்வார்கள்.1953 ஆம் ஆண்டு மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் சுமார் 8,200 பேர் கலந்து கொண்டனர்.இந்த தடவை, மன்னர் சார்ள்ஸ் மற்றும் ராணி கமிலாவின் முடிசூட்டு விழாவைக் காண்பதற்கு 2,200 விருந்தினர்களுக்கு மாத்திரம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதில் ஒருவராக உள்ளார்.கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது தாயார் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்திற்குப் பிறகு மன்னர் சார்ள்ஸ் அரியணை ஏறினார். அவர் பிரித்தானிய வரலாற்றில் மிகவும் பழமையான புதிய மன்னராக இடம்பிடித்தார்.அப்போதிருந்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முடிசூட்டு விழா, இந்த வார இறுதியில் இடம்பெறவுள்ளதுடன்,…
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் புத்தளம், மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)
நு/ ஹோல்புறூக் ஆரம்ப பிரிவு பாடசாலையின் அதிபராக திரு .அருணாச்சலம் ஜயசுந்தரம் 03.05.2023 அன்று முதல் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் அக்கரப்பத்தனை தோண்பில்ட் தோட்டத்தை சேர்ந்த அருணாச்சலம் ,செல்லம் ஆகியோரின் புதல்வர் ஆவார் ,இவர் முன்னாள் ஆட்லோ மற்றும் ஹோல்புரூக் பாடசாலைகளின் பழையமாணவர் என்பதோடு, அதிபர் போட்டி பரீட்சையில் சித்திபெற்று கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பெல்மொரல் பாடசாலையின் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.