Author: Thana

ஜப்பானின் மத்திய மாகாணமான இஷிகாவா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவர் உயிரிழந்ததுடன், சில கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். உள்ளூர் நேரப்படி இந்த நிலநடுக்கம் பிற்பகல் 2.42 மணிக்கு ஏற்பட்டதாக கியோடோ செய்திகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இருப்பினும் கடலோரப் பகுதிகளில் கடல் மட்டத்தில் சில மாற்றம் ஏற்படும் என்று அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

Read More

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அரசியலமைப்பின் 34வது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த விசேட அரச மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய 982 ஆண் கைதிகள் மற்றும் 06 பெண் கைதிகள் உட்பட 988 பேர் விடுதலை செய்யப்பட உள்ளனர். இது தவிர, வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு பார்வையாளர்களை பார்வையிட சிறைக்கைதிகளுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றும் நாளையும் கைதிகளை பார்வையிடுவதற்கு கைதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த இரண்டு நாட்களிலும் கைதிகளின் உறவினர்கள் ஒருவருக்கு மட்டும் கொண்டு வரும் உணவுப் பொட்டலங்கள் மற்றும் இனிப்புகளை வழங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். கம்பஹா மாவட்டத்தின் மஹர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த இரண்டு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க வன்னிநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, மஹர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கினிகம பகுதியில் 80 வயதான பெண்ணொருவர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். அத்துடன், மஹர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட எந்தரமுல்ல – அக்பார்டவுன் பகுதியில் 81 வயதான ஆண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கினிகம பகுதியில் உயிரிழந்த பெண், கொவிட் நோய் எதிர்ப்பு தடுப்பூசியை சேலுத்திக்கொள்ளவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மஹர சுகாதார வைத்திய அதிகாரி நிஹால் கமகே குறிப்பிட்டுள்ளார்.

Read More

தாயின் கருப்பைக்குள் கருவுற்ற சிசுவொன்றிற்கு முதல் தடவையாக சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. 34 வார சிசுவொன்றிற்கே இவ்வாறு சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கருப்பைக்குள் உள்ள சிசுவின் மூளையில் இரத்த ஓட்ட குழாயில் காணப்பட்ட தடங்கலை அடுத்து, சத்திர சிகிச்சை மூலம் அது குணமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறுவர் வைத்தியசாலையொன்றில் அமெரிக்க வைத்திய குழுவொன்றினால் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read More

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று அதிகாலை நேர்ந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்களும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த பஸ்ஸின் சாரதிகள் உள்ளிட்ட 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வட்டவளை சொரபொரஜனபதய மஹியங்கனை பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்ட தோட்டம் ஒன்றை மஹியங்கனை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியை சுற்றிவளைத்த போது பயிரிடப்பட்ட 5 அடி உயரமான 44 கஞ்சா செடிகளை மஹியங்கனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்போது வட்டவளை சொரபொர மஹியங்கனை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சந்தேக நபரை மஹியங்கனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். ராமு தனராஜா

Read More

நமுனுகுலை 12 ம் கட்டைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பாரிய மண்மேடும் கற்களும் சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளமையினால் எல்ல பசறை வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டதாக நமுனுகுலை பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்றும் இன்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் குறித்த வீதியில் சரிந்து விழுந்த மண்மேடு பாரிய கற்களும் அகற்றும் பணியில் ஈடுபட்டதனை தொடர்ந்து தற்போது பசறை எல்ல பகுதிக்கான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. ராமு தனராஜா

Read More

பதுளை – மடுல்சீமையில் இருந்து பிட்டமாறுவ மற்றும் எக்கிரிய வரை செல்லும் பிரதான வீதியில் குருவிக்கொல்ல பகுதியில் நேற்று புதன்கிழமை பாரிய மண்மேடு சரிந்து வீதியில் வீழ்ந்தமையினால் அவ்வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்ததாக மடுல்சீமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இந்நிலையில் இன்று வியாழக்கிழமை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் குறித்த வீதியில் சரிந்து விழுந்த மண்மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டதனை தொடர்ந்து தற்போது போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. ராமு தனராஜா

Read More

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விகாரையை அகற்ற கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் உள்ளிட்டவர்களை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதையும் கண்டித்து, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்துள்ளனர். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம்(வியாழக்கிழமை) கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜா மற்றும் மாவட்ட செயலர் ஆகியோரின் இணை தலைமையில் நடைபெற்றது. இதன்போது கூட்டத்தில் பங்கு பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன், சி. சிறிதரன், த. சித்தார்த்தன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

Read More

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் டெங்கு ஆய்வு நிறுவகம் மேற்கொண்ட 90 பரிசோதனைகளில் டெங்கு 03 வகை வைரஸ் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி பரவி வருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது கடந்த 12 வருடங்களாக நாட்டில் காணப்படாத ஒரு வகையான வைரஸ் என்றும் கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். எமது உடலில் இந்த நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்திகள் இல்லை என்றும், இதன் காரணமாக இந்நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் வைத்தியர் ருவன் விஜயமுனி வலியுறுத்தியுள்ளார். மேலும், காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஒருவர், இரண்டாம் நாள் முழு இரத்தப் பரிசோதனையொன்றை (Full Blood Count) மேற்கொள்ள வேண்டும். அத்துடன், 12 மணித்தியாலத்திற்கு ஒருமுறை முழு இரத்தப் பரிசோதனை செய்து நோயாளியைக் கண்காணிப்பது அவசியம் என்றும் கூறினார். முழு இரத்தப் பரிசோதனையில் எண்ணிக்கையின் பெறுமதி ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைந்திருந்தால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர்…

Read More