Author: Thana
கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி சீனி விலை கிலோவுக்கு 25 ரூபா படியும், கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 10 ரூபா படியும் அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை தமிழ் அழகுக்கலை,அழகு சாதனவியல் நிபுணர்கள் சம்மேளனம் மற்றும் சூரியா மகளீர் அபிவிருத்தி பேரவை இணைந்து நடாத்திய 2021,2022 2023 ஆம் ஆண்டுகளுக்கான”சிகரம் தொட்ட தமிழ் பெண்கள் “விருதுகள் விழாவில் மலையகத்தின் மஸ்கெலியா பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி நித்யா சதீஷ்குமார் தமக்கான விருதினை சொந்தமாக்கிக் கொண்டார். திருமதி நித்தியா சதீஷ்குமார் மஸ்கெலியா சென்ஜோசப் கல்லுரியில் படிப்பை முடித்து, கலை துறையில் அவருக்கு ஏற்பட்ட ஆர்வம் காரணமாக 2011 ஆம் ஆண்டு கொழும்பில் திருமதி பிரியா சங்கர் அவர்களின் வழிகாட்டலில் அழகுக் கலையை கற்றார். தனது அழகுக்கலை டிப்ளமோ கல்வியின் பின் 2018 இல் திரு கண்ணன் ராஜ் மாணிக்கம் அவர்களிடம் Master of Beauty என்ற தலைப்பின் கீழ் கற்று. தொடர்ந்தும் 2019 ஆம் ஆண்டு மலேசியா நாட்டில் “ஸ்டியா அழகுக்கலை” (STEA makeup) நிறுவன உரிமையாளர் திருமதி சுகந்தி அவர்களிடம் Master of Bridal எனும்…
அமரர் லெனின் மதிவாணனின் பிறந்ததினத்தை முன்னிட்டு ஹட்டனில் சாதாரண தர மாணவர்களுக்கு கணித பாட இலவச கருத்தரங்கு
அமரர் லெனின் மதிவாணனின் பிறந்ததினத்தை முன்னிட்டு ஹட்டன் கார்பெக்ஸ் தமிழ் வித்தியாலய கல்வி பொது சாதாரண தர மாணவர்களுக்கு கணித பாட இலவச கருத்தரங்கு இன்று (07.05.23) ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த இலவச கருத்தரங்கை அமரர் லெனின் மதிவாணனின் குடும்பத்தார் ஒழுங்கு செய்திருந்தனர். நிகழ்வில் பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். மேலும் மாணவர்களுக்கான கையேடுகள் மற்றும் சிற்றுணவுகளும் அவர்களால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீர்க்குழாய் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (08) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கொலன்னாவ நகர சபை பகுதி, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, அதுல் கோட்டே, நாவல, கொஸ்வத்தை ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர்வட்டு அமுலாகவுள்ளது.
ஹப்புத்தளை நகரில் மகிழூந்து ஒன்று இன்று மதியம் 12.45 மணியளவில் தொடரூந்து கடவையை கடக்க முற்பட்ட வேளையில் கண்டியில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதி விபத்துக்கு உள்ளானது. மொனராகலை பகுதியில் இருந்து ஹப்புத்தளை பகுதிக்கு உறவினர் வீடொன்றுக்கு சென்று மீண்டும் மொனராகலை செல்வதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நால்வர் மகிழூந்தில் பயணத்தை ஆரம்பித்து ஹப்புத்தளை நகர் பகுதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட வேளையில் எதிரே வந்த சரக்கு ரயிலில் மகிழூந்து மோதி விபத்துக்குள்ளானது. மகிழூந்தில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை ரயில் கடவைக்கு அருகில் காவலில் இருக்கும் காவலாளி அச்சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் இல்லாமையே இவ்விபத்துக்கான காரணம் என ஹப்புத்தலை பொலிஸார் தெரிவித்தனர். காவலாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விபரங்களை ஹப்புத்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் ராமு தனராஜா
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
களுத்துறை, காலி வீதியில் உள்ள ஹோட்டலுக்குப் பின்னாலுள்ள ரயில் பாதைக்கு அருகில் 16 வயதுடைய யுவதி ஒருவரின் சடலம் நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர் களுத்துறை நாகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட யுவதி மற்றொரு இளம் பெண் மற்றும் இரண்டு ஆண்களுடன் சனிக்கிழமை (6) அப்பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு வந்ததாகவும் அந்தக் ஹோட்டலில் இரண்டு அறைகளை முன்பதிவு செய்ததாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பொலிஸ் விசாரணைகளின் படி ஹோட்டலுக்கு வந்து சில மணித்தியாலங்களில் ஒரு ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஹோட்டலை விட்டு வெளியேறியதாகவும், பின்னர் இறந்த யுவதியுடன் இருந்த நபரும் ஹோட்டலை விட்டு வெளியேறியதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே குறித்த யுவதி நிர்வாணமான நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த மரணம் தொடர்பில்…
டெக்ஸாஸின் டலஸில் உள்ளவணிக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன – தாக்குதலை மேற்கொண்டவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்- அவர் தனியாக செயற்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தை தொடர்ந்து அலெனில் உள்ள வணிகவளாகத்திலிருந்து நூற்றுக்கும்மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் சிறுவர்களும் உள்ளனர் – ஏழுபேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் உட்பட ஏழுபேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர் மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தை செவிமடுத்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் அந்த பகுதிக்கு சென்று தாக்குதலை மேற்கொண்டு சந்தேகநபரை செயல் இழக்கச்செய்துள்ளார் என பொலிஸ் அதிகாரிதெரிவித்துள்ளார். ஐந்து முதல் 51 வயதானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வீடியோக்களை அடிப்படையாக வைத்து அந்த பகுதியில் காணப்பட்ட மக்களை ஆதாரங்களிற்காக தங்களுடன் தொடர்புகொள்ளுமாறு எவ்பிஐயினர் தெரிவித்துள்ளனர். கறுப்பு உடையணிந்த…
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவரை கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்த வழக்கின் பிரதான சந்தேக நபரும் அதற்கு உடந்தையாக இருந்த ஒருவரும் கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சி, விஹாரை பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய ஒருவரும், மதவாச்சி, கோனா கும்பக்கொல்லாவ பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரிடமும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி, கையடக்கத் தொலைபேசி, சிம் அட்டை மற்றும் கொலையின்போது அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் என்பனவற்றை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஐபிஎல் ரி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே 2 வது இடத்துக்கு முன்னேறியது. இடத்துக்கு முன்னேறியது. லக்னோ அணிக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டிருந்ததால் அந்த ஆட்டத்தில் சிஎஸ்கேவுக்கு ஒரு புள்ளி மட்டுமே கிடைத்திருந்தது. மும்பை அணி 5வது தோல்வியை சந்தித்தது. 10 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 10 புள்ளிகளுடன் 6வது இடத்தில் தொடர்கிறது. சிஎஸ்கே தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 10ஆம் திகதி டெல்லி கபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. அதேவேளையில் மும்பை இந்தியன்ஸ் தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 9ஆம் திகதி சொந்த மண்ணில் ரோயல் சலஞ்சர்ஸ் அணியை சந்திக்கிறது. இறுதி ஓவர்களும் பத்திரனவும் 2023ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில்…