Author: Thana

நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து நுவரெலியா மற்றும் ராகலை வரை பயணிக்ககூடிய புதிய ரயில் பாதை வெகுவிரைவில் நிர்மாணிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நுவரெலியா, நானுஓயா பகுதிக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இந்த தகவலை வெளியிட்டார். “நுவரெலியா நகருக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ரயில் சேவை தேவையாக உள்ளது. எனவே,  மத்திய மாகாண ஆளுநர் காலத்தில் செயற்பட்ட நுவரெலியா – கந்தபளை ரயில் நிலையத்துக்கிடையில் ரயில் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக புதிய ரயில் பாதையும் நிர்மாணிக்கப்படும். நுவரெலியாவில் இருந்து கொழும்புவரை மரக்கறிகளை கொண்டு வருவதற்கு நானுஓயா ரயில் நிலையத்தை மையப்படுத்தி பொருளாதார மத்திய நிலைய பிரிவொன்று அமைக்கப்படும்.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். அதேவேளை, நானுஓயா ரயில் நிலையத்துக்கு வருகை தந்திருந்த அமைச்சர், நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து எல்லவரை  செல்வதற்கு காத்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன்…

Read More

என் மக்களின் முடிவே என் தீர்க்கமான அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் பசறை பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் பசறை மடுல்சீமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் வருகை தராமையானது மக்கள் மத்தியில் இன்றளவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.. அதனைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நான் விலகி இருந்தேன்.. இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் என் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் வரும் நாட்கள் அரசியல் களத்தில் பல புதிய மாற்றங்கள் ஏற்படுத்தும் நாட்களாகும். எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றத்தில் நடைபெறும் வாத விவாதங்களை அவதானித்து சர்வதேச நாணய நிதியத்திற்கு வாக்களிப்பது தொடர்பில் நான் ஆராய்வேன்…

Read More

புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக இராணுவத்தினர் வழங்கிய தகவலுக்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று, புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 7 பேரை கைது செய்துள்ளதுடன் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன. கொக்குளாய் பகுதியினை சேர்ந்த 3 பேரும் ஜா எல, மேகமுவ, வெல்லம்பிட்டிய, களனி பகுதியினை சேர்ந்த நால்வர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளதுடன், இவர்கள் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்டதாக கருப்பபடும் இயந்திரம் ஒன்று, மண்வெட்டி, அலவாங்கு, இரண்டு மோட்டார் சைக்கிகள், கார் ஒன்று என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், சான்று பொருட்களையும் சந்தேக நபர்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற வாசஸ் தலத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

Read More

கந்தகெடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கனுவவன்வ பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் நேற்று (23) மாலை கேபிள் அன்டனா பொருத்தச் சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். பதுளை கன்வன்வ மஹியங்கன வீதியில் 16 கட்டையில் வசிக்கும் 56 வயதுடையவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நேற்று மாலை 5 மணியளவில் வீட்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியின் ஆன்டெனாவை சரி செய்வதற்காக அருகில் உள்ள மரத்தில் மீது ஏறி வயரை தூக்கி எறிந்தபோது வயர் உயர் அழுத்த மின்கம்பியில் மோதியதில் மின்சாரம் பாய்ந்தது இவ் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். பிரேதம் பதுளை பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் ராமு தனராஜா

Read More

இலங்கையில் அதிக வெப்பம் காரணமாக இருவர்  உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. எப்பாவில் வசிக்கும் இருவரே உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் புத்தாண்டு விழாவில் கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்று களைப்பு காரணமாக ஐஸ் தண்ணீரை தலையில் ஊற்றியதில் ஏற்பட்ட பாதிப்பால் இறந்தார். மற்றவர் தனது வயலில் புல் அறுத்தபோது வெப்பம் தாங்காமல் இறந்தார் என எப்பாவல மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார். எப்பாவல கீழ் தியம்பலேவயில் வசித்த அதுல தம்மிக்க (34) மற்றும் எப்பாவல கட்டியவ பகுதியில் உள்ள எல்.ஜி.  விஜேசிங்க (38) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். இந்த இரு மரணங்கள் தொடர்பாகவும், எப்பாவெல அரசு மருத்துவமனை டாக்டர் என்.எச்.  திஸாநாயக்கவின் பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டு, இந்த நாட்களில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக அதிர்ச்சி மற்றும் திடீர் மாரடைப்பு காரணமாக  இருவரும் உயிரிழந்ததாக மரண விசாரணை  அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது..

Read More

இன்று இலங்கையின் 15 மாவட்டங்களில் கடும் வெப்பமான வானிலை நிலவவுள்ளது. இதன்படி, வடமேற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் கடும் வெப்ப நிலை நிலவும். இதனால் அங்கு வசிக்கின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Read More

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 49 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ், முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 235 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இந்தநிலையில், 236 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.இதேவேளை, இன்று இடம்பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்பகுதியில் 7.1 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.எவ்வாறாயினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாத போதிலும், சுனாமி ஆய்வுக்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக “உடனடியாக அங்கிருந்து நகர வேண்டும்” என்று கடற்கரைக்கு அருகிலுள்ள அனைத்து குடியிருப்பாளர்களையும் நியூஸிலாந்து அதிகாரிகள் வலியுறுத்தினர்இருப்பினும், நிலநடுக்கம் பதிவான ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நாட்டிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தெரியவந்துள்ளது.நியூசிலாந்து நேரப்படி 12.42 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நியூசிலாந்து கடற்கரையில் இருந்து வடகிழக்கே சுமார் 500 மைல் தொலைவில் உள்ள கெர்மடெக் தீவுகளைச் சுற்றி இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.அந்த நேரத்தில் தேசிய அவசரநிலை முகாமை நிறுவனத்தின் ட்வீட்டர் பதிவில், “M7.3 அளவில் கெர்மடெக் தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இது நியூசிலாந்தை பாதிக்கக்கூடிய சுனாமியை உருவாக்கியுள்ளதா என்பதை நாங்கள் மதிப்பிடுகிறோம்.”கடற்கரைக்கு அருகில் உள்ள எவரும் நீண்ட அல்லது வலுவான நிலநடுக்கத்தை உணர்ந்தால், உடனடியாக அருகில் உள்ள உயரமான பகுதிக்கு…

Read More

கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)

Read More

மே மாதம் 15ஆம் திகதிக்குள் பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் விநியோகிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை 80ம% பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பாடப்புத்தகங்கள் அனைத்தையும் மே மாதம் 15ம் திகதிக்குள் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளோம். அத்துடன், தற்போது 85% சீருடைகள் விநியேகிக்கப்பட்டுள்ள அதேவேளை, மீதமுள்ள சீருடைகளை மே மாதம் 15ம் திகதிக்குள் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More