Author: Thana

பலாங்கொடை, ரஜவக்க கொடகும்புர பிரதேசத்தில் நேற்று மாலை (24) மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குறித்த பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரெனத் தெரிவிக்கப்படுகிறது இவர் தனது வீட்டில் இருந்த போது இவ்வாறு மின்னல் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளார். இதனையடுத்து, அவர் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை காவல் துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

Read More

தமிழ்-சிங்கள புத்தாண்டு காலப் பகுதியினை முன்னிட்டு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடானது மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி மறு அறிவித்தல் வரை அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடானது நீடிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Read More

பேலியகொட – லக்சிறி கொள்கலன் முனையத்தில் வைத்து நேற்று சுமார் 8.4 கோடி ரூபா பெறுமதியான குஷ் என்ற விசேட கஞ்சா வகை போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சரக்கு சேவை மூலம் கனடாவில் வசிக்கும் ஒருவரால் நாட்டுக்கு அனுப்பப்பட்ட இரண்டு மரப்பெட்டிகளின் அடிப்பகுதியில் நிரப்பப்பட்டிருந்த குஷ் போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இதன்போது, இரண்டு மரப்பெட்டிகளின் போலியான அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12 கிலோகிராம் எடையுள்ள 24 குஷ் பொதிகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த பொருட்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்காக பொருட்களின் உரிமையாளரால் அங்கீகரிக்கப்பட்ட எழுதுவினைஞர் வந்திருந்தார். அவரும் போதைப்பொருளுடன் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

Read More

தந்தை, உதைபந்தாட்டத்திற்கு தேவையான காலணியை வாங்கிக் கொடுக்கவில்லை என 14 வயது மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை மேற்கு பகுதியில் வசித்து வந்த, குறித்த மாணவனே நேற்று (24) இரவு இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் . குறித்த மாணவனது குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக தந்தையால் உடனடியாக காலணியை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. இந்த நிலையிலேயே மாணவன் விபரீத முடிவை எடுத்துள்ளார். மாணவனது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் துனிசியா வழியாக இத்தாலியில் சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க துனிசியா அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக துனிசியா கடல் வழியாக இத்தாலி செல்ல முயன்ற 3 படகுகளை அந்த நாட்டின் கடலோர காவல்படையினரால் தடுத்து நிறுத்தி படகுகளில் இருந்த 93 அகதிகளை மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில், துனிசிய தேசிய காவல்படையின் ஊடகப் பேச்சாளர் ஹூஸ்மெடின் ஜபாப்லி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, சனிக்கிழமை இரவு இதுபோன்ற மூன்று முயற்சிகள் முறியடிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

சூடானில் நேற்று(24) நள்ளிரவிலிருந்து 72 மணித்தியால போர் நிறுத்தத்திற்கு மோதலில் ஈடுபடும் தரப்பினர் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். சூடானிய இராணுவம் மற்றும் RSF எனப்படும் துணை இராணுவப் படை ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று 48 மணித்தியாலங்களின் பின்னர் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சூடானில் இந்த மாதம் மோதல்கள் ஆரம்பித்ததன் பின்னர் அறிவிக்கப்படும் மூன்றாவது போர் நிறுத்தமாக இது அமைந்துள்ளது. இந்த மோதல்கள் காரணமாக 400 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். தமது இராஜதந்திரிகள் மற்றும் பிரஜைகளை வௌியேற்றும் நடவடிக்கைகளில் நாடுகள் தீவிரம் காட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

மீரிகம பமுனுவத்த பிரதேசத்தில் வெளிநாட்டு தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி மக்களை ஏமாற்றிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீரிகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்படும் போது, ​​அவர்களிடம் 8 தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் ஏனைய நபர்களுக்கு சொந்தமான 2 காசோலைப் புத்தகங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் தியபெதும பிரதேசத்தில் நபர் ஒருவரை தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றத்திற்காக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களாவர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 31 மற்றும் 32 வயதுடைய தியபெதும மற்றும் மீரிகம பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். சந்தேகநபர்கள் இன்று (25) அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அமைச்சர் டிரன் அலஸ் அறிக்கையின் பிரதியொன்றை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேராவிடம் கையளித்துள்ளார்.

Read More

நுவரெலியா மாவட்டத்தில் 4 மாடிகளுக்கு மேல் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பது மே 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சர்கள் சபையில் அங்கீகாரம் வழங்கி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Read More

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்னும் கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று 25 கதவடைப்பு போராட்டம் இடம்பெறுகின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று(25) மேற்கொள்ளப்படவுள்ள பொது முடக்கம் ஊடான எதிர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ் மக்களும், சிவில் சமூக அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தமது முழுமையான ஆதரவை வழங்க முன்வர வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த ஹர்த்தால் பிரச்சாரம் காரணமாக அந்த பகுதிகளில் போக்குவரத்து தடைபடலாம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Read More