Author: Thana
பதுளை பகுதியில் நேற்று மாலை பெய்த இடி மின்னலுடன் கூடிய கடும் மழையின் காரணமாக ஹப்புத்தளை, தம்பேதன்ன – மாக்காந்த பிரிவில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 21,42,17 வயதுடைய மூவர் ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மூவரும் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராமு தனராஜா
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு மேற்கே 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 84 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணம்- கிளிநொச்சி மாவட்டம்- கிளிநொச்சி, செல்வாநகர் அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில் அருள் பொழிந்து வளம் தந்து வாழவைக்கும் தாயே அனுதினமும் உன் கருணை எமையாள வேண்டும் இவ்வுலகில் இன்பமுடன் வாழவழி தருவாய் செல்வா நகர் கோயிலுறை எங்கள் முத்துமாரி வளங்கொண்ட எங்கள் மண்ணில் வீற்றிருக்கும் தாயே வரும் துன்பங்கள் போக்கியெம்மைக் காத்தரு வேண்டும் இப்புவியில் நேர்மையுடன் வாழவழி தருவாய் செல்வா நகர் கோயிலுறை எங்கள் முத்துமாரி நோய் நொடிகள் நெருங்காது காத்தருளும் தாயே நொந்து மனம் வாடாமல் எமை வாழவைக்க வேண்டும் நீதிநெறி தவறாது வாழ வழி தருவாய் செல்வா நகர் கோயிலுறை எங்கள் முத்துமாரி துன்பங்களைத் துரத்தியெம்மை வாழவைக்கும் தாயே துணிவுடனே நாம் வாழ உன்துணையே வேண்டும் திறமையுடன் முன்செல்ல உரிய வழி தருவாய் செல்வா நகர் கோயிலுறை எங்கள் முத்துமாரி பாசமுடன் அணைத்தெம்மை ஆதரிக்கும் தாயே பரிதவிக்கும் மனம் இன்றி வாழவைக்க வேண்டும் பெருமையுடன் நாம் வாழவழி…
மாத்தளை களுதாவளை 2 ஆம் வட்டார மக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகத் திட்டத்தை கையளிக்கும் நிகழ்வு
மாத்தளை மாநகரசபைக்குட்பட்ட களுதாவளை 2 ஆம் வட்டாரம், சிந்தாகட்டி குமர பெருமாள் கோவிலை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகத் திட்டத்தை கையளிக்கும் நிகழ்வு நேற்று (23.04.2023) இடம்பெற்றது. சிந்தாகட்டி குமர பெருமாள் கோவிலை அண்மித்த பகுதிகளில் 100 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. குடிநீர் வசதி இன்மையால் அப்பகுதி மக்கள் சொல்லொணாத் துயரங்களை பல வருடங்களாக சந்திக்க நேரிட்டது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அண்மையில் மாத்தளைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இதன்போது களுதாவளை பகுதி மக்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது மக்கள் முன்வைத்த குடிநீர் வேலைத்திட்டம் நிச்சயம் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்திருந்தார். இந்த உறுதிமொழியின் பிரகாரம் அம்மக்களுக்கு தற்போது குடிநீர் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. குடிநீரை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வு நேற்று சிந்தாகட்டி குமர பெருமாள் கோவிலை அண்மித்த பகுதியில் நடைபெற்றது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை…
முன்னாள் சட்டமா அதிபர் டப்புல டி லிவேராவை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்வதையோ அல்லது வாக்குமூலம் பதிவு செய்வதையோ தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம், திங்கட்கிழமை (24) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து வெளிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்க ஏப்ரல் 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் லிவேராவை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் ஆஜராகத் தவறியதையடுத்து, திங்கட்கிழமை (24) ரிஐடிக்கு வருகை தரத் தவறினால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையை சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணிகள் ஊடாக லிவேரா, மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
அரச பாடசாலைகளில் தரம் 02 முதல் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறித்த விண்ணப்பங்களை பதிவு தபாலில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளில் தரம் 06 இல் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு இது பொருந்தாது என்று அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் கிடைக்கக்கூடிய வெற்றிடங்களுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை பாடசாலைகள் மேற்கொள்ளும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கடிதங்கள் எவற்றையும் இனி வெளியிட மாட்டோம் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
டி.சந்ரு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை சமரசம் செய்ய தலையிட்ட பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா வசந்த கால திடலில் கடந்த (22) இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாகொல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய ஒருவர் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர் . ஏனைய நான்கு சந்தேகநபர்கள் 23 ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கொழும்பின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொலன்னாவ உப மின் நிலையத்தின் மின் கடத்தல் கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்திருந்தார். இதன் காரணமாக கொழும்பின் 04, 05, 07, 08, 10 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி சட்டத்தரணி M. A. சுமந்திரனின் வாதத்தையடுத்து வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் வழிபாட்டுக்கும், பூசைகளிற்கும் எந்தவொரு அரச அதிகாரிகளும் தடைவிதிக்க முடியாது என வவுனியா மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் தியான மண்டபத்திற்கு பிரதமர் தலைமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு.
(க.கிஷாந்தன்) நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் புனித நீர் தடாக திறப்பும், தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டலும், முத்திரை வெளியீடும் நிகழ்வும் நேற்று 23.04.2023 நடைபெற்றது. இந் நிகழ்வானது ஆலய அறங்காவலர் சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றதுடன் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் தினேஸ் குணவர்தனவும், சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.பி.ரட்ணாயக்க, யதாமினி குணவர்தன, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, உதவி தூதுவர் டாக்டர் திருமதி எஸ்.அதிரா ஆகியோரும் மற்றும் நுவரெலியா டெல்லி ரோட்டறி கழக உறுப்பினர்களும் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்களும் பக்த அடியார்களும் கலந்து கொண்டனர். தியான மண்டபத்திற்கான அனுசரனையை டெல்லியை சேர்ந்த பிரதீப் ஜெய்ன் குடும்பத்தினர் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.