Author: Thana

கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Read More

கிழக்கு மாகாணம்- அம்பாறை மாவட்டம், கல்முனை, பாண்டிருப்பு அருள்மிகு மகாவிஷ்ணு திருக்கோயில் காவல் தெய்வமாயிருந்து காத்தருளும் பெருமாளே காலமெல்லாம் உடனிருந்து காவல் செய்து அருளிடைய்யா கேட்கும் வரம் தந்தெமக்கு ஆறுதலைத் தரவேண்டும் பாண்டிருப்பில் கோயில் கொண்ட மகாவிஷ்ணு பெருமாளே அலைகடலின் அருகிருந்து அருளளிக்கும் பெருமாளே கவலைகளை மறந்துவிட உரியவழி தந்திடைய்யா நிம்மதியைத் தந்தெமக்கு அரவணைப்பைத் தரவேண்டும் பாண்டிருப்பில் கோயில் கொண்ட மகாவிஷ்ணு பெருமாளே தென்கிழக்கு திசை வீற்றிருக்கும் பெருமாளே திகட்டாத வாழ்வு தந்து எமை காத்து அருளிடைய்யா தொல்லையில்லா வாழ்வு தந்து ஆறுதலைத் தரவேண்டும் பாண்டிருப்பில் கோயில் கொண்ட மகாவிஷ்ணு பெருமாளே பாற்கடலில் பள்ளி கொண்டு பாரினை ஆளுகின்ற பெருமானே பார்போற்றும் வாழ்வு தந்து எம் பெருமை காத்திடைய்யா பீதியில்லா வாழ்வுதந்து நிம்மதியைத் தரவேண்டும் பாண்டிருப்பில் கோயில் கொண்ட மகாவிஷ்ணு பெருமாளே நேர்மை வழி நிற்பவனே நெடுமாலே பெருமாளே நீதிநெறி காட்டியெம்மை தலைநிமிர உதவிடைய்யா நொந்து மனம் வாழாத வாழ்வு தந்து…

Read More

குடும்பத் தகராறு காரணமாக திம்புல பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்ய வந்த 4 பிள்ளைகளின் தாய் டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்து காணாமல் போயுள்ளார் என திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். திம்புல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவத்த பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயான லெச்சுமனன் நிஷாந்தனி (வயது 34) என்பவரே டொவன் நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்து காணாமல் போயுள்ளார். குடும்ப தகராறு தொடர்பாக இரண்டு குழந்தைகளுடன் திம்புல பத்தன பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த தாய் தனது குழந்தை ஒருவருடன் நீர்வீழ்ச்சிக்கு சென்றுய்யார். பின்னர் தாயுடன் சென்ற குழந்தை மீண்டும் பொலிஸாரிடம் ஓடிச்சென்று தாயார் அருவியில் இருந்து கீழே குதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படும் நான்கு பிள்ளைகளின் தாயின் சடலத்தை கண்டுபிடிப்பதற்காக திம்புல பத்தனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More

(செய்தி – சதீஷ்) சாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில் பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தை சேர்ந்த ஜெயசீலன் நிதர்சனா என்ற 15 வயது சிறுமி நாவலப்பிட்டி நகரில் இருந்து நடைப்பயணமாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையம் வரை வந்தடைந்தார். நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை காலை ஏழு மணிக்கு நாவலபிட்டி நகரில் பயணத்தை ஆரம்பித்த இந்த மாணவி நேற்று மாலை 4.30 மணியளவில் பொகவந்தலாவ நகரத்தை வந்தடைந்தார். 09 மணித்தியாலயத்தில் தனது நடைப்பயணத்தை முடித்த இந்த சிறுமி நாவலப்பிட்டியில் இருந்து கினிகத்தேனை, வட்டவலை, அட்டன், டிக்கோயா, நோர்வூட், டியன்சின் ஆகிய நகரங்களின் ஊடாக பொகவந்தலாவ நகரை வந்தடைந்தார். இந்த சிறுமிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. குறித்த சிறுமி வருகை தந்தவுடன் பொன்னாடை போற்றி கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்த சிறுமி பொகவந்தலாவ சென்மேரீஸ் தேசியக் கல்லூரியில் தரம் 10ல் கல்வி கற்று வருவதோடு பெருந்திரளான பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் சிறுமிக்கு ஆதரவு வழங்கி இருந்தனர். அடுத்த கட்ட…

Read More

கண்டி அலவதுகொட பகுதியில் சீரற்ற காலநிலையால் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக, மின் கம்பங்கள் முறிந்து பாதையில் விழுந்துள்ளது. இச் சம்பவத்தில் முச்சக்கரவண்டி ஒன்று பாதிப்புக்குள்ளானதுடன் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அக்கிராம மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

நெடுந்தீவு – இறங்குதுறையை அண்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீது இனந்தெரியாதோர் நடத்திய வாள்வெட்டில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டின் உரிமையாளர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என்று ஆறுபேர் தங்கியிருந்த சமயமே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று சனிக்கிழமை (22) அதிகாலை இந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

அக்குறணை பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக பொய்யான தகவலை வழங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) காலை மேற்கொண்ட நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி – ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டம், திருகோணமலை நகரம் அருள்மிகு சனீஸ்வரன் திருக்கோயில் நன்மையும் தருவாய் தீமையும் செய்வாய் நம்பினோரை என்றும் கைவிட மாட்டாய் துன்பங்கள் தந்து அதைத் துடைத்தெறிவாய் காக வாகனனே சனீஸ்வரா திருமலை நகரில் கோயில் கொண்டாய் தீமைகள் களைய வந்தமர்ந்தாய் கேட்கும் வரங்களைத் தந்திடுவாய் நிம்மதியோடெம்மை வாழவைப்பாய் காக வாகனனே சனீஸ்வரா தர்மத்தைக் காக்க முன்னிற்பாய் அதர்மத்தை அழிக்க விரைந்திடுவாய் காலத்தால் நன்மைகள் செய்திடுவாய் காத்திருப் போரை காவல் செய்வாய் காக வாகனனே சனீஸ்வரா எள்ளிலும், எண்ணையிலும் உறைந்திடுவாய் என்றும் உடனிருந்து காத்தருள்வாய் நேர்மையாய் வாழவழி செய்வாய் காக வாகனனே சனீஸ்வரா கருமை நிறத்தில் உறைபவனே காவலாய் என்றும் இருப்பவனே வருந்துயர் போக்க வந்திடுவாய் வளமுடன் வாழவழி செய்வாய் காக வாகனனே சனீஸ்வரா விரதமிருந்து வழிபடுவோர் வினைகளைத் தீர்த்து அருளிடுவாய் வெற்றிகள் தந்து வாழவைப்பாய் விரைந் தெமக்கு அருள வந்திடுவாய் காக வாகனனே சனீஸ்வரா. ஆக்கம்- த.மனோகரன். துணைத்…

Read More

டி சந்ரு நானுஓயாவில் இருந்து நுவரெலியா வழியாக ராகலை வரையான பிரித்தானிய கால தொடரூந்து பாதையை புனரமைக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளிநாட்டு முதலீடுகளை நாடவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று நானுஓயா பிரதான நகரில் வைத்து ஊடகங்ளுக்கு தெரிவித்தார். இதன் போது ரதெல்ல குறுக்கு வீதியை கனரக வாகனங்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்க கோரி ஒரு தரப்பினர் வலியுறுத்தியபோது அதனை மறுத்த அமைச்சர் பந்துல குணவர்தன தற்போது வீதியில் வீதி விபத்துக்கள் குறைந்துள்ளதாகவும் இதனால் தொடர்ந்து இவ்வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தடை விதிப்பது நன்மை பயக்கும் எனவும் . இவ்விடயம் தொடர்பாக இவ்வீதி தொடர்பாக எதிர்வரும் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தின் போது முக்கிய கவனம் செலுத்தி நிரந்தர முடிவு எடுக்கப்படும் , அதுவரை நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும்…

Read More

இன்று (21) பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் எனவே மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. மேல், வடமேற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் நாளைய தினம் சாதாரண வெப்பநிலை நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More