Author: Thana
ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் இன்று அதிகாலை 12.45 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதையடுத்து இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல்கள் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம்தெரிவித்துள்ளது.
மத்திய மாகாணம்- மாத்தளை மாவட்டம், மாத்தளை, வெள்ளைக்கல் அருள்மிகு அழகர் திருக்கோயில் மலைசூழ்ந்த பெரு நிலத்தில் இருந்தருளும் பெருமாளே மலைப்பில்லா நல்வாழ்வை எமக்கருள வேண்டுமைய்யா என்றும் உடனிருந்து எமக்கருள வேண்டும் வெள்ளைக்கல் கோயில் கொண்ட பேரழகர் பெருமாளே நம்பிவந்து உனைப் பணிவோர் உடனிருக்கும் பெருமாளே நலம் கொண்ட பெருவாழ்வை எமக்கருள வேண்டுமைய்யா என்றும் உடனிருந்து நிம்மதியை அருள வேண்டும் வெள்ளைக்கல் கோயில் கொண்ட பேரழகர் பெருமாளே அன்னை மீனாட்சியின் உடன்பிறந்த பெருமாளே அமைதி மிகு நல்வாழ்வை எமக்கருள வேண்டுமைய்யா என்றும் உடனிருந்து அரவணைத்தருள வேண்டும் வெள்ளைக்கல் கோயில் கொண்ட பேரழகர் பெருமாளே காவலாயிருந் தெம்மைக் காத்தருளும் பெருமாளே கவலையில்லா நல்வாழ்வை எமக்கருள வேண்டுமைய்யா என்றும் உடனிருந்து ஆறுதலை தந்தருள வேண்டும் வெள்ளைக்கல் கோயில் கொண்ட பேரழகர் பெருமாளே பாவங்கள் களைந்தெம்மை ஆளுகின்ற பெருமாளே பார்போற்றும் உயர்வாழ்வை எமக்கருள வேண்டுமைய்யா என்றும் உடனிருந்து வழிகாட்ட வேண்டும் வெள்ளைக்கல் கோயில் கொண்ட பேரழகர் பெருமாளே…
கண்டி வத்தேகம கல்வி வலயத்திற்குட்பட்ட கந்தகட்டிய தேசிய பாடசாலையின் பொன் விழா நிகழ்வுகள் அதிபர் தியாகராஐா சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோரும் சிறப்பு அதிதியாக பேராசியர் மௌனகுரு அவர்களும் மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர். 50வது ஆண்டு பொன்விழாவை சிறப்பிக்கும் முகமாக பொன்.இராஜகோபால் அவர்களின் ஒருங்கில் மலர் நூல் வெளியீட்டு விழாவும் பல்துறை ஆளுமை கொண்டவர்களும் கௌரவிக்கப்பட்டனர். மேலும் பாடசாலை மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. படங்கள் – கந்தையா உதயகுமார் மடுல்கலை நிருபர்
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று (22) வெட்டுக் காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்ட ஐந்து பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்ற 78 வயதான வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களான 82 வயதான நாகநதி பாலசிங்கம் , 76 வயதான பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை, 83 வயதான கார்த்திகேசு நாகேஸ்வரி, 75 வயதான மகாதேவன் என்பவர்களே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 100 வயதான கனகம் பூரணம் என்ற மூதாட்டி யாழ். போதனா வைத்தியசாலையில் சிசிக்சை பெற்று வருகிறார். ஒருவர் கைது.. நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
X-Press Pearl கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நாளை வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் சிங்கப்பூரில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் தெரிவித்தார். இந்த விடயம் இலங்கை அமைச்சரவையின் அங்கீகாரத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகவும் சட்டமா அதிபர் குறிப்பிட்டார். இழப்பீடு தொகை குறித்து பின்னர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என சட்டமா அதிபர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பில் கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையிடம் இருந்து விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எம்பிலிபிட்டிய – குட்டிகல பகுதியில் வீதியில் கைவிடப்பட்டிருந்த ஐந்து வயது சிறுவன் ஒருவனை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த சிறுவனிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது, குட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்த, குறித்த சிறுவனை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்ற, அவரது தாய் மற்றும் மாற்றாந்தந்தை ஆகியோர் நெடுஞ்சாலையில் விட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், தாய் அந்த சிறுவனை அடித்து காயப்படுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சிகிச்சைக்காக எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சட்ட வைத்தியரிடமும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், சிறுவனின் தாய் தனது கணவனை விட்டு பிரிந்து மறுமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(க.கிஷாந்தன்) ‘ஈதுல் பித்ர்’ எனப்படும் ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருநாள் விழா. இஸ்லாமியர்களுக்கு ஐம்பெரும் கடமைகள் உண்டு. அதில் ஒன்று, ரமலான் நோன்பு. ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகின்றது. முப்பது நாட்கள் உண்ணாமல், பருகாமல், நோன்பிருந்து இறைவனை விழித்திருந்து, தனித்திருந்து, இறைமறையை தினம் ஓதி, இல்லாதவருக்கு ஈந்து இறைவழிபாட்டில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி அதன் இறுதியாக இன்பமுடன் பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்தவகையில் மலையகத்தில் மூஸ்லீம்கள் நோன்பு பெருநாள் பண்டிகையை 22.04.2023 அன்று விசேட தொழுகையில் ஈடுப்பட்ட பின்னர் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள். அந்தவகையில் அட்டன் நகரில் பிரதான ஜூம்மா பள்ளிவாசலில் அட்டன் மூஸ்லீம் மக்கள் விசேட நோன்பு பெருநாள் தொழுகையிலும் பிராத்தனைகளிலும் ஈடுப்பட்டிருந்தனர். பிறகு தமது பண்டிகையை மூஸ்லீம் மக்கள் சந்தோஷமாக கொண்டாடியதை காணக்கூடியதாக இருந்தது.
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை மாவட்ட பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. 5% – 8% வரை கட்டணத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் என். எம்.கே.ஹரிச்சந்திர பத்மசிறி குறிப்பிட்டுள்ளார்.
டெவோன் நீர் வீழ்ச்சியில் குதித்து தற்கொலை செய்துக் கொண்ட பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மகளின் கண் முன்னே நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் டெவோன் நீர் வீழ்ச்சியில் நேற்று குதித்து காணாமல் போயிருந்தார். இச்சம்பவம் நேற்று (22) காலை 11.30 மணயளவில் இடம்பெற்றிருந்தது. இவ்வாறு மாயமானவர் திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகவத்தை பகுதியை சேர்ந்த ஏ.நிசாந்தனி வயது 34 நான்கு பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குடும்ப தகராறு ஒன்று காரணமாக முறைபாடு ஒன்றினை செய்வதற்காக தனது இரண்டு பிள்ளைகளுடன் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து ஒரு பிள்ளையை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி விட்டு பெண் பிள்ளையுடன் நீர் வீழ்ச்சி பகுதிக்கு சென்று தனக்கு தாகம் எடுப்பதாக தெரிவித்து பெண் பிள்ளையிடம் குடிநீர் பெற்றுவருமாறு தெரிவித்து குடிநீர் எடுத்துவர செல்லும் போது தம்பியை பார்த்துக்கொள் என்று கூறி விட்டு கையை காட்டியவாறு நீர் வீழ்ச்சி பாய்ந்து தற்கொலை செய்து…
நு/ கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தில் புதிய வகுப்பறையொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்
டி சந்ரு நு/ கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தில் புதிய வகுப்பறையொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவமும், தரம் 6 இற்கு மாணவர்களை உள்ளீர்த்தலும் அதிபர் எஸ். விஜயகுமார் தலைமையில் 21/04 நடைபெற்றது. பெற்றோர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது 2022 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களும், அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர். நுவரெலியா வலய கல்விப் பணிப்பாளர் லசந்த அபேவர்த்தன, வகுப்பறை அமைப்பதற்கு உதவி வழங்கும் தலவாக்கலை லிந்தலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக்க சேமபால , கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆர். கணேசன் , ஆசிரிய ஆலோசகர்கள், பெற்றோர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.