Author: Thana
எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் சேவைகளை கோர முடியும்.
எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் இருந்து சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் அனுராதா விஜேகோன் தெரிவித்துள்ளார். சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அரசியலமைப்பில் அரச கரும மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன, மேலும் ஒரு குடிமகன் இந்த நாட்டில் உள்ள அரசாங்க நிறுவனத்தில் சேவையைப் பெறும்போது, அவர் அல்லது அவள் தனக்கு தேவையான சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில் கோரலாம். அந்த உரிமை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரச கரும மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்; தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் (19) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டும் தேசிய மொழிகளாகக் கருதப்படுவதாகவும், ஒரு…
06ஆம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் ஒன்லைன் ஊடாக கோரப்பட்டுள்ளன
2022ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு ஆறாம் வகுப்பில் பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலமாக கோரப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20ஆம் திகதி மதியம் 12 மணி முதல் மே மாதம் 08ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை அதற்கான காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. g6application.moe.gov.lk/#/ என்ற இணையதளம் ஊடாக ஒன்லைன் மூலமான மேன்முறையீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள பல வைத்தியசாலைகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 08 மயக்க மருந்து நிபுணர்களை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் ஆலோசனைக்கு அமைய இந்த வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலை, உடுகம ஆதார வைத்தியசாலை, கம்புறுப்பிட்டிய ஆதார வைத்தியசாலை, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை, திக் ஓயா பொது வைத்தியசாலை மற்றும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை ஆகியவற்றிற்கு கடமையாற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
14 வயது மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற 53 வயது ஆசிரியர் ஒருவரை ஹாலிஎல பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹாலிஎல பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் 2 பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில் குறித்த ஆசிரியர் தன்னிடம் கற்கும் ஹாலிஎல உடுவர 7 ஆம் கட்டை பகுதியில் வசிக்கும் 14 வயது மாணவி ஒருவரை தனது வீட்டிற்கு மேலதிக வகுப்பிற்காக வருமாறு அழைத்துள்ளார். இந்நிலையில் மாலை நேர வகுப்பின் போது இடைவேளை வழங்கி அனைத்து மாணவர்களையும் வெளியே செல்லுமாறு கூறிவிட்டு குறித்த மாணவியை மட்டும் பேச வேண்டும் என நிற்குமாறு தெரிவித்துள்ளார். பின்னர் தனது கைபேசியில் ஆபாச காணொளிகளை எடுத்து அம்மாணவியை அதை பார்க்குமாறு வற்புறுத்தியுள்ளார். மாணவி அதை பார்க்க மறுத்த போது மாணவியை பின்னால் இருந்து அணைத்தபடி தன்னுடைய கைபேசியில் செல்பி எடுத்துள்ளார்.…
ஆ.ரமேஸ் . நானுஓயா நிருபர் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோல்றீம் தோட்டத்தில் (68) வயது மதிக்கத்தக்க தாய் ஒருவர் வெள்ளிக்கிழமை (21) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனி வீடு ஒன்றின் சமையலறையில் இருந்து வெட்டு காயங்களுடன் தாய், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் வௌ்ளிக்கிழமை (21) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவத்தில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ள தாய் அக்கரப்பத்தனை சின்ன நாகவத்தை தோட்டத்தை சேர்ந்த வெங்கடாசலம் சத்தியபாமா (வயது 68) என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த கடந்த சின்ன நாகவத்தை தோட்டத்திலிருந்து லிந்துலை ஹோல்றீம் தோட்டத்தில் வசிக்கும் மருமகனின் வீட்டுக்கு ஞாயிற்றுகிழமை (16) விருந்தாளியாக வந்திருந்திருந்ததாக தெரியவந்துள்ளது. அவர் அணிந்திருந்த நகைகளும் மாயமாகியுள்ளன என்று தெரிவித்த பொலிஸார், படுகொலைச் செய்ததன் பின்னர் நகைகளை கொள்ளையடித்து இருக்கலாம் என்றும் தெரிவித்தனர். மருமகன்,மகள்,பிள்ளைகள் இருவர் வசிக்கும் இந்த வீட்டில் சம்பவம் இடம்பெற்ற வேளையில்…
சட்டவிரோதமாக படகு மூலம் வேறொரு நாடொன்றுக்கு பயணித்த வேளையில் வியட்னாம் கடல் எல்லையில் விபத்துக்குள்ளான படகிலிருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் சிலர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய நேற்று முன்தினம்(19) 23 இலங்கையர்கள் வியட்னாமிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர் என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதமளவில் 303 இலங்கையர்களுடன் பயணித்த படகொன்று, வியட்னாம் கடல் பரப்பில் வைத்து விபத்துக்குள்ளானது. இந்த நிலையில், வியட்னாம் கடற்பாதுகாப்பு பிரிவினரால் அந்தப் படகிலிருந்தவர்கள் காப்பாற்றப்பட்டு, அதில் 151 பேர் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.
பண்டாரவளை கல்வி வலையத்திற்கு பொறுப்பான ஹப்புதளையில் உள்ள தரம் ஒன்று முதல் ஐந்து வரை இயங்கும் கீழ் பிரிவில் உள்ள அதிபர் நேற்று 20 ம் திகதி தரம் நான்கில் கல்வி பயிலும் 38 மாணவர்களை கரத்தின் பின் புறம் தாக்குதல் நடத்தி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் இன்று பாடசாலை பகிஷ்கரிப்பு மேற் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிபரை இடமாற்றம் செய்யக்கோரி; இன்று பாடசாலை பகுதியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஐனவரி மாதம் முன்னாள் அதிபர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய அதிபராக இந்த அதிபர் நியமனம் பெற்றார். இவரது காலத்தில் பாடசாலையில் முறுகல் நிலை இருந்த போதிலும் நேற்று காலை பாடசாலையில் கல்வி பயிலும் தரம் நான்கில் உள்ள நாற்பது மாணவர்களில் 38 மாணவர்கள் நேற்று பாடசாலைக்கு சமூகம் தந்தவர்களை, வகுப்பறையில் இருந்த தும்பு தடி உடைந்து உள்ளது என கூறி தாக்கியதை…
இலங்கையைச் சேர்ந்த சிறுவர்களை ஐரோப்பாவுக்கு விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் மலேசிய தம்பதியைரைக் அந்நாட்டு குடிவரவு-குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கைதுசெய்துள்ளனர் என, அத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தடுக் ருஸ்லின் தெரிவித்துள்ளார். குறித்த தம்பதி 30,000 தொடக்கம் 50,000 யூரோக்களை ஒரு சிறுவருக்காக வசூலித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இவர்கள் வெளிநாட்டு கடவுச்சீட்டினை தயாரிப்பதற்காக, 12 வயதுக்கு குறைவான வயதையுடைய மலேசிய சிறுவர்களின் பெற்றோரை மலேசிய குடிவரவு- குடியகல்வு திணைக்களத்துக்கு வருகைத் தருமாறு அழைத்து, அங்கு அவர்களின் பிள்ளைகளுக்குப் பதிலாக இலங்கைச் சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் கைரேகையினைப் பயன்படுத்தி இலங்கைச் சிறுவர்களை கடத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதற்கமைய இந்த மாதம் 12ஆம் திகதி கோலாலாம்பூரிலுள்ள குடிவரவு- குடிகல்வு திணைக்களத்துக்கு சிறுவனொருவனுடன் வருகைத் தந்த தம்பதியினரிடம் அதிகாரிகள் விசாரித்த போது, இவர்களுடன் இருந்த சிறுவன் மலேசிய மொழியைப் பேச முடியாமல் திணறியதை அடுத்தே சந்தேகநபர்களை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட தம்பதியினர் 26 மற்றும்…
காஷ்மீர்- இமாச்சல மலைப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் ஐந்து இந்திய இராணுவத்தினர் பலியாகியுள்ளனர். இத் தாக்குதலில் மேலும் பல இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடும் மழை மற்றும் பனியுடனான வானிலை நிலவும் குறித்த பகுதியில், இராணுவத்தினர் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அடையாளம் காணப்படாத தீவிரவாத கும்பலொன்றால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் இந்தியப் பாதுகாப்பு பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இஸ்ரேலின் சனத்தொகை மற்றும் குடிவரவு அதிகார சபைக்கு இடையில் 2020ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் செவிலியர் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதன்படி, செவிலியர் தொழில் வாய்ப்புக்கள் கிடைத்த, 15 பேர் அடங்கிய 51வது குழுவிற்கு விமான டிக்கெட்டுக்கள் வழங்கும் நிகழ்வு (20.04.2023) தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்றது. இந்த குழுவில் 14 பெண்களும் ஒரு ஆணும் உள்ளனர், மேலும் அவர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி நாட்டைவிட்டு புறப்பட உள்ளனர். அத்துடன், 2022 ஏப்ரல் 28 முதல் இதுவரையிலும், 302 இலங்கையர்கள் செவிலியர் தொழிலுக்காக இஸ்ரேல் நாட்டிற்குச் சென்றுள்ளனர். இஸ்ரேல் அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் மாத்திரமே இஸ்ரேலில் செவிலியர்; தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க முடியும். எனவே, இஸ்ரேலில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள,…