Author: Thana

இலங்கை தேசிய வொலிபோல் அணியில் இடம் பிடிக்கும் மேமலை தோட்டத்தின் முதல் யுவதியாக ஜெயராம் திலக்ஷனா இடம் பிடிக்கிறார். அடுத்த மாதம் நேபாள நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை தேசிய பெண்கள் வொலிபோல் குழாமில் அவர் இடம்பிடித்துள்ளார். மேமலை தமிழ் வித்தியாலயத்தில் விளையாட்டு வாழ்க்கையை ஆரம்பித்த அவர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய வொலிபோல் குழாமில் பயிற்சிகளை நிறைவு செய்து தற்போது இலங்கை கடற்படை பெண் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

மேல்மாகாணம்- கொழும்பு மாவட்டம், கொழும்பு மாநகரம் கொள்ளுப்பிட்டி, அருள்மிகு சக்தி அம்மன் திருக்கோயில் அனைத்துயிர்கள் உள்ளும் இருந்தாளும் தாயே அசைவு தந்து ஆட்டுவிக்கும் பேரருளே அம்மா உடனிருந்து எங்களை நீ காத்தருள வேண்டும் கொள்ளுப்பிட்டியில் கோயில் கொண்ட சக்தி அம்மா தாள் போற்றி ஆறுதலைத் தந்தெம்மை அணைத்தருளும் தாயே ஆதரித்துக் காத்தருளும் பேரருளே அம்மா மகிழ்ச்சியுடன் எங்களை நீ வாழ வைக்க வேண்டும் கொள்ளுப்பிட்டியில் கோயில் கொண்ட சக்தி அம்மா தாள் போற்றி நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்து நிம்மதியைத் தரும் தாயே நித்தம் உடனிருந்து வழி காட்டும் பேரருளே நிம்மதியைத் தந்தெம்மை உயர்த்திவிட வேண்டும் கொள்ளுப்பிட்டியில் கோயில் கொண்ட சக்தி அம்மா தாள் போற்றி காவல் தந்து எமையென்றும் காத்தருளும் தாயே காலமெல்லாம் அருகிருந்து வழிநடத்தும் பேரருளே குற்றமில்லா நல்வாழ்வைத் தந்தெம்மை வழிநடத்த வேண்டும் கொள்ளுப்பிட்டியில் கோயில் கொண்ட சக்தி அம்மா தாள் போற்றி நன்மைகள் நமக்களித்து வாழவைக்கும் தாயே மனக்கவலை அறுத்தெமக்கு…

Read More

கட்டார் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பெண்கள் கட்டாரில் வேலை வாங்கி தருவதாக கூறி 6 இலட்சம் ரூபா வரை மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சந்தேகநபர்களான பெண்கள் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. முறைப்பாட்டாளர் பல சந்தர்ப்பங்களில் சந்தேக நபர்களின் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு கடவுச்சீட்டுகளும் சந்தேக நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Read More

நாட்டில் வைத்தியர்கள் 1,320 பேருக்கு எதிர்வரும் 25ஆம் திகதியிலிருந்து புதிதாக நியமனம் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கிணங்க இந்த வைத்தியர்கள் அன்றிலிருந்து நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளகளுக்கு இணைத்துக் கொள்ளப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவ்வைத்தியர்கள் பிரதானமாக பின்தங்கிய பிரதேச வைத்தியசாலைகளில் பணிபுரிவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் அனைத்து வைத்தியர்களின் எண்ணிக்கை 19,000 ஆகக் காணப்படுவதுடன், புதிய வைத்தியர்களின் நியமனத்துடன் அவர்கள் 20,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளனர். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டதுடன், அதிக எண்ணிக்கையான வைத்தியர்கள் ஒரே தடவையில் நியமனம் பெறுவதற்கு முடிந்தமை இந்நாட்டின் சுதந்திர சுகாதார சேவைக்குக் கிடைத்த வெற்றி என சுகாதார அமைச்சர் பேராசிரியர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அத்துடன் தற்போது வருடாந்தம் மருத்துவக் கல்லூரிக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 1500 இலிருந்து 1800 வரையாகும். அதனை 5000 வரை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை…

Read More

மஹிந்த உதய விஞ்ஞான ஆய்வுகூடம் 2012 ஆம் ஆண்டு ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்பட்ட மைந்த உதய விஞ்ஞானக்கூடங்கள் ஆயிரம் பாடசாலைகளுக்கு கிடைக்கப்பெற்றது. இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு பிரதேசங்களில் வாழும் மாணவர்கள் கணினி கல்வி நெறியை கற்க இலகுவாக இருந்து வருகின்றது பெருந்தோட்டங்களில் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளும் இதில் பயன் பெற்று வந்தனர். பல கோடி ரூபாய் 65 க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த கணினிகளுடன் இந்த வேலை திட்டம் ஆரம்பித்த போதிலும் கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட வளையக்கல்விக்கு உட்பட்ட எட்டியாந்தோட்டை புனித சாந்த மரியாள் பாடசாலையில் கட்டப்பட்டிருக்கும் மஹிந்த உதய விஞ்ஞான கூடம் மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருக்கும் நிலையில் விஞ்ஞான கூடம் காடுமன்றி பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுகின்றன. பெருந்தோட்டங்களில் இருந்து வரும் மாணவர்கள் கணினி கல்வியை கற்க முடியாத நிலையில் பாடசாலைகளுக்கு கொடுக்கப்பட்ட இவ்வாறு மஹிந்த உதய…

Read More

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி செயலகம் மற்றும் அமைச்சுகள் இணைந்து ஏற்பாடு செய்யும் “வசத் சிரிய 2023” போட்டி நிகழ்ச்சிகளுக்கான விண்ணப்பங்கள் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மதியம் 12.00 மணி வரையில் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வசத் சிரிய 2023” போட்டி நிகழ்ச்சிகள் ஏப்ரல் 22 சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் கொழும்பு ஷங்கிரீலா கிரீன் வளாகத்தில் நடைபெறவுள்ளதோடு, அரச துறை, திறந்த பிரிவு, வெளிப்பிரிவு என்ற மூன்று கட்டங்களின் கீழ் போட்டி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரச ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தவர்கள், நண்பர்கள் மற்றும் பிள்ளைகளுக்கான ஆண்கள், பெண்களுக்கான 18 போட்டி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதேநேரம். இதற்குள் மறைந்திருக்கும் விருந்தினரை தேடுதல் பப்பாசிப் பழத்தின் விதைகளை கணக்கிடுதல், மறைந்திருக்கு விருந்தினரை தேடிப்பிடித்தல், யானைக்கு கண் வைத்தல்,…

Read More

பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நேற்று (19) நடைபெற்ற சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவில் கெளரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து சிறப்பித்தார். பாதுகாப்பு அமைச்சின் நலன்புரிப் பிரிவின் அனுசரணையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் பிரதான பாரம்பரிய விழாக்களில் ஒன்றான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் ‘பக்மஹ உலேல’ நிகழ்வு அமைச்சின் அனைத்து ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் நேற்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதம அதிகாரியுமான திரு. சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர். பாரம்பரிய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விளையாட்டுக்களுக்கு குறிப்பிட்ட வயதுப் பிரிவுகள் இல்லாததால், பாதுகாப்பு அமைச்சின் அனைத்து ஊழியர்களும் விளையாட்டுகளில் மிகுந்த…

Read More

உயர்தர பரீட்சை விடைத் தாள்களைத் திருத்தும் பணிகளுக்கான மாற்று யோசனைகள் மற்றும் உரிய வேலைத்திட்டங்களை இவ்வார இறுதிக்குள் அறிவியுங்கள் – கல்வி துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை. பரீட்சைப் பணிகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுங்கள். விடைத்தாள் திருத்தும் பணிகளை முடக்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை. வருடாந்தம் 10,000 பொறியியல் பட்டதாரிகளையும் 5,000 மருத்துவ பட்டதாரிகளையும் உருவாக்க அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஒன்றிணைந்து நடவடிக்கை. எந்தவொரு குழுவினரும் பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக பயன்படுத்த இடமளிக்கபோவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கல்வி மற்றும் உயர்கல்வி, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்களின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் தொடர்பிலான பகுப்பாய்வுக் கூட்டம் நேற்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். பரீட்சைப் பணிகளை அத்தியாவசிய செயற்பாடுகளாக முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியான சட்ட ஏற்பாடுகளை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த…

Read More

பேஸ்புக் ஊடக வலையமைப்பின் உரிமை நிறுவனமான மெட்டா பிளட்போம்ஸ் நிறுவனமானது, மீண்டும் தமது நிறுவனத்தில் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதென சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெக், தனது வர்த்தக செயற்பாட்டை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளார் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் 10,000 பணியாளர்களை அங்கிருந்து பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளதாகவும் இந்தச் செயற்பாடானது,  பல மாதங்களாக திட்டமிடப்பட்டு  வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மெட்டா நிறுவனமானது இதற்கு முன்னரும் தமது நிறுவனத்திலிருந்து 11,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

தென் கொரியாவின் பிரபல பொப் இசைப் பாடகரும் நடிகருமான முன்பீன்( Moonbin) உயிரிழந்துள்ளார். 25 வயதான முன்பீன் தலைநகர் சோலின் ஆகன்க்நமின் என்ற இடத்திலுள்ள தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது முகாமையாளர் நேற்றைய தினம் முன்பீனுக்கு பல தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட போது, அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் அதன்பின்னர் தேடி பார்த்த போது, அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவினாலும் மரணத்துக்கான காரணத்தை அறிய சடலம்  பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தென்கொரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More