Author: Thana

மஹேஸ்வரி விஜயனந்தன் எவ்வித இன,மத பிரிவினைகளும் இன்றி இலங்கையில் மட்டுமல்ல ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களும் வழிபாட்டுக்காகவும் சுற்றுலாவுக்காகவும்  வந்து செல்லும் இடமாகவும் இலங்கையின் இரண்டாவது உயரமான மலையுமான சிவனொளிபாதமலை வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும் அனைவரையும் கவர்ந்த இலங்கையின் இயற்கை அழகுக்கு மெருகூட்டும் மற்றுமொரு பிரதேசமாகும். கடல் மட்டத்திலிருந்து 7,359 அடி உயரத்திலும் இலங்கையின் உயரமான மலைகளுள் இரண்டாம் இடத்திலும் உள்ள சிவனொளிபாதமலையானது, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள புனித தலமாகக் கருதப்படுவதுடன், இதன் உயரத்திலிருந்து இலங்கையின் முழு அழகையும் சூரியோதயத்தையும் கண்டு மகிழவென வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு படையெடுக்கும் இடமாகவும் காணப்படுகின்றது. சிவனொளிபாதமலைக்கான யாத்திரை பருவகாலம் ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதம் வரும் பூரணை தினத்துடன் ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் வரும் பூரணையுடன் நிறைவுக்கு வரும் இலங்கையில் மிக நீண்ட கால பருவ யாத்திரையைக் கொண்ட தளமாக இது போற்றப்படுகின்றது. எனினும் குறித்த  பருவ கால…

Read More

கடந்த வருடம் மே மாதம் 9ஆம் திகதி பஞ்சிகாவத்த பிரதேசத்தில் பொலிஸ் ஜீப்பொன்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்ற விசாரணைப் பிரிவின் வணிக குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்க அமைய சந்தேநகபர்கள் மூவரும் கைதசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் 18, 31, 46 வயதானவர்கள் என்பதுடன், இவர்கள் மாளிகாவத்த மற்றும் கொழும்பு 12 பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை இன்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More

எடை அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோகிராம் வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 880 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் பழுப்பு நிற முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 920 ரூபாவென என நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. கடந்த சில தினங்களாக அதிக விலைக்கு முட்டைகளை எடை அடிப்படையில் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனவரி 20 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபை முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்திருந்த நிலையில், இதன்படி வெள்ளை முட்டை 44 ரூபாவாகவும் பழுப்பு நிற முட்டை 46 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Read More

கிழக்கு மாகாணம் – திருகோணமலை மாவட்டம்- திருகோணமலை நகரம் அருள்மிகு விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி(சிவன்) திருக்கோயில் அருவுருவாய் ரூபமாய், அடங்கலுமாகி அதற்கப்புறத்திலுமாகி நின்றாடும் சிவனே அண்டமெல்லாம் ஆட்டுவிக்கும் ஐயா போற்றி வந்தெமக்கு தஞ்சம் தர வேண்டும் திருகோணமலை திருநகரில் கோயில் கொண்ட விஸ்வநாதப் பெருமானே விசாலாட்சி அம்மையுடன் வீற்றிருக்கும் சிவனே அகிலமெல்லாம் நிறைந்திருக்கும் ஐயா போற்றி சஞ்சலங்கள் போக்கியெம்மைக் காத்தருள வேண்டும் திருகோணமலை திருநகரில் கோயில் கொண்ட விஸ்வநாதப் பெருமானே குளக்கோட்டன் ஆண்டபதி இருந்தருளும் சிவனே குவலயத்தில் அன்பு மழை பொழிகின்ற ஐயா போற்றி வஞ்சகர்கள் கொடுமைகளை அறுத்தெறிய வேண்டும் திருகோணமலை திருநகரில் கோயில் கொண்ட விஸ்வநாதப் பெருமானே உயிர்க்குயிராய் நின்றென்றும் உள்ளாடும் சிவனே உத்தமராய் வாழும் மனம் அருளுகின்ற ஐயா போற்றி உறவுகள் இணைந்து நாம் வாழ்ந்திடவே வேண்டும் திருகோணமலை திருநகரில் கோயில் கொண்ட விஸ்வநாதப் பெருமானே அலை மோதும் பெருங்கடலை அண்மை கொண்ட சிவனே அசைந்தாடும் இயற்கையையே…

Read More

எல்ல – இராவணெல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் இருந்து 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்பு. எல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இராவணெல்ல நீர்வீழ்ச்சியில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் வீதியின் பாலத்திற்கு கீழ் இருந்து இன்று மாலை (19.04) சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் ஒன்று எல்ல பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் இறந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் எல்ல பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா

Read More

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை அவதானத்திற்குரிய மட்டத்திற்கு உயரக்கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, வெப்பமான காலநிலையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரச ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல், அதிக வெப்பநிலையால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு கவனமாகப் பின்பற்ற வேண்டிய சில நடவடிக்கைகளை சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது. 1. நீங்கள் தாகம் எடுக்கும் வரை இருக்காமல் முடிந்த அளவு தண்ணீர் ( வயது வந்தவர்கள் நாளொன்றுக்கு குறைந்தது 2.5 லீற்றர்) குடிக்கவும். 2. தாகத்திற்கு, தண்ணீருக்கு பதிலாக இனிப்பு பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும். 3. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சூரிய ஒளியில் இருக்கும் நேரத்தை குறைக்கவும்.…

Read More

திட்டமிட்டபடி எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்த முடியாது என, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட தேர்தல் அத்தாட்சி அலுவலர்களால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 11ஆம் திகதியிடப்பட்டு குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் வெளியிட்டுள்ள அறிவித்தலுக்கமைய, குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த வர்த்தானியில், மார்ச் 09 ஆந் திகதி தேர்தல்களை நடாத்துவதற்குத் தேவையான நிதியை பொதுத் திறைசேரியிலிருந்து விடுவிக்க முடியாத எதிர்பாராத விடயம் தொடர்ந்து தீர்க்கப்படாமை காரணமாக தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில்,  மீண்டும் நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் திகதியான ஏப்ரல் 25 ஆம் திகதியும் அத்தேர்தல்களை மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்க வேண்டிவந்துள்ளதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேர்தல்களை நடாத்துவதற்குத் தேவையான நிதி பொதுத் திறைசேரியிலிருந்து விடுவிக்கப்படுமென நிச்சயமாக…

Read More

மஹியங்கனை, மகாவலி ஆற்றங்கரையில் நின்றிருந்த நபரை கத்தியைக் காட்டி அச்சுறுத்தி அவரது கழுத்தில் இருந்த சுமார் 210000 ரூபா பெறுமதியான தங்க நகையை திருடிச் சென்ற நபரை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 18ஆம் திகதி மாபகதேவாவ சேனானிகம பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடைய நபர் ஒருவர் நகரில் உள்ள சாரதி பயிற்சி பாடசாலைக்கு சென்றுவிட்டு சில தேவைகளுக்காக மகாவலி ஆற்றங்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் இந்த நபரை பயமுறுத்தி அவரது கழுத்தில் இருந்த சுமார் ஒன்றரை பவுன் சங்கிலியை திருடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர் சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் .சுஜித் வெதமுல்லவின் பணிப்புரையின் பேரில் மஹியங்கனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ரொஹான் விஜேரத்ன உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை…

Read More

மலையகத்தில் கடந்த சில மாதங்களாக வறட்சியான காலநிலை நிலவிவருகிறது. இந்த வறட்சியான காலநிலையினை தொடர்ந்து காசல்ரீ நீர்த்தேக்கத்தில் என்றுமில்லாத அளவுக்கு நீரின் அளவு தாழியிறங்கியுள்ளது. தொடர்ச்சியாக வறட்சியான காலநிலை மற்றும் உஷ்ணம் அதிகமாக காணப்படுவதனால் கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களது கால் நடைகளுக்கு தேவையான புல்லை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கால் நடைகளுக்கு போதியளவு உணவு வழங்க முடியாததன் காரணமாக பால் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் இதனால் தங்களது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இதே நேரம் வறட்சியான காலநிலையினை தொடர்ந்து காசல்ரீ  நீர்த்தேக்கத்தில் என்றுமில்லாதவாறு நீர் தாழியிறங்கியுள்ளதாகவும் இதனால் நீரில் முழ்கி கிடந்த கட்டடங்களின் இடிபாடுகள்,வீதிகள் மற்றும் குன்றுகள் ஆகியன முழுமையாக தோற்றம்பெற்றுள்ளதாகவும் தற்போது தாழிறங்கியிருக்கும் நீர் நிரம்புவதற்கு குறைந்த ஒன்றரை மாதமேனும் தொடர்ச்சியாக மழை பெய்ய வேண்டும் எனவும்  தெரிவிக்கின்றனர். எது எவ்வாறான போதிலும் தற்போது நிலவி வரும் வறட்சியினால் பல பிரதேசங்களில் குடிநீர் தட்டுப்பாடு காணப்படுவதுடன் நீரின்றி…

Read More

கண்டி, அக்குரணை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த பகுதியில் மேலதிக பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினர் தயார் நிலையில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க அப்பகுதியில் இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் குறிப்பிட்டார்.

Read More