Author: Thana

நாட்டின் மீது தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என…

Read More

ஜனாதிபதி தலைமையில் 17ஆவது தேசிய படையினர் தின நினைவு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது  சுதந்திர தேசத்தின் கௌரவத்திற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்த அனைத்து பாதுகாப்புப் படையினரையும் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூருகின்றேன்.  அவர்களது எதிர்பார்ப்பாக இருந்த ஒற்றுமை, அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் பாதையில் அச்சமின்றி, உறுதியுடன் முன்னோக்கிப் பயணிப்போம்.  அனைத்து உயிர்கள் மீதும் எல்லையற்ற கருணை, அகிம்சை அடிப்படையாகக் கொண்ட பௌத்த தர்மத்தைப் பின்பற்றி நீண்டகாலமாக செயற்படும் நமது நாடு, இன மத பேதமற்ற மனிதநேயத்தைக் கொண்ட ஒரு நாடாகும்.  இத்தகைய உன்னதமான மனித சமுதாயத்தைக் கொண்டு எவ்வளவு சிறந்த தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும்? – ஜனாதிபதி சுதந்திர தேசத்தின் கௌரவத்திற்காகத் தமது உயிரைப் பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து பாதுகாப்புப் படையினரதும் பிரார்த்தனையான, ‘அபிவிருத்தியடைந்த மற்றும் அமைதியான நாடு’ என்ற எதிர்பார்ப்பைத் தன் தோள்களில் சுமந்துள்ள…

Read More

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழுநாடுமே ஒன்றாக’ தேசிய செயல்பாட்டு சபை மற்றும் கைது செய்யப்படும் போதைப்பொருட்களை தாமதமின்றி அழிப்பதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழு கூடியது. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழுநாடுமே ஒன்றாக’ தேசிய செயல்பாட்டு சபை, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. கைது செய்யப்படும் போதைப்பொருட்களை தாமதமின்றி அழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் குறித்து இங்கு விசேடமாக கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்த சட்டத் திருத்தங்களின் இறுதிக் கட்டத்தை விரைவாக நிறைவு செய்வதற்கும் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது, சட்டத் திருத்தத்திற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவில் முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தங்கள் மற்றும் அதன் சட்டக் கட்டமைப்பு குறித்தும் தேசிய சபையின் முன்னிலையில் விளக்கமளிக்கப்பட்டது. கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை தாமதமின்றி அழிப்பதன் அவசியம் குறித்தும், அது தொடர்பான தேசிய சபையின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன. எதிர்காலத்தில் அதற்குரிய புதிய…

Read More

ராகம “ரணவிரு செவன” நலன்புரி நிலையத்திற்குச் சென்ற ஜனாதிபதி தங்கி சிகிச்சை பெறும் பாதுகாப்புப் படையினரின் நலம் விசாரித்தார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , இன்று (19) முற்பகல் ராகமவில் அமைந்துள்ள “ரணவிரு செவன” நலன்புரி மையத்திற்கு விஜயம் செய்து, அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் பாதுகாப்புப் படையினரின் நலம் விசாரித்தார். இங்கு பாதுகாப்புப் படையினர்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி, தாய்நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக அவர்கள் அனைவரும் செய்த அர்ப்பணிப்பைப் பாராட்டினார். அதனைத் தொடர்ந்து, “ரணவிரு செவன” நிலையத்தில் பணியாற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுடனும் கலந்துரையாடிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சிகிச்சை பெற்று வரும் படையினருக்கு மேலும் வழங்கக்கூடிய மருத்துவ மற்றும் ஏனைய வசதிகள் குறித்தும் ஆராய்ந்தார். விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, இராணுவத்…

Read More

​ நுவரெலியா மாவட்ட நழிவுற்ற சமூகத்தை மேன்மைப்படுத்தும் அமைப்பினரின் ஏற்பாட்டில், மக்களுக்கு அரச சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட பாதயாத்திரையும் வீதி நாடகமும் இன்று (19) நுவரெலியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​அசுவெசும (Aswesuma) நலன்புரித் திட்டம், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், மற்றும் EPF, ETF போன்ற அரசினால் வழங்கப்படக்கூடிய அத்தியாவசிய சேவைகளை பொதுமக்கள் எவ்வாறு எவ்வித சிரமமுமின்றி பெற்றுக்கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஊட்டுவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். ​இந்நிகழ்வானது நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் அருகாமையில் இருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. அங்கிருந்து விழிப்புணர்வுப் பாதயாத்திரையாகப் புறப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களும் பொதுமக்களும், நுவரெலியா பிரதான வீதி ஊடாக தபால் நிலைய வீதியை வந்தடைந்தனர். ​தொடர்ந்து, நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்னால் உள்ள சுற்றுவட்டப் பகுதியில், இந்த விழிப்புணர்வுக்கான விசேட வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது. ​ ​பொதுமக்களுக்கு அரசினால் வழங்கப்படக்கூடிய பல்வேறு நலத்திட்டங்களையும் உரிமைகளையும், தத்தமது பிரதேச கிராம…

Read More

பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் உடன்படிக்கை (திருத்த) சட்டமூலமானது, நாட்டின் அரசியலமைப்பிற்கு முழுமையாக இணங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்மானத்தை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) காலை பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். அரசியலமைப்பின் 121 (1) ஆம் பிரிவின் கீழ் முன்வைக்கப்பட்ட சவாலொன்றைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். இந்தச் சட்டமூலம் ஒட்டுமொத்தமாகவும், அதேபோன்று அதில் உள்ள ஒவ்வொரு விதிகளும் அரசியலமைப்பின் எந்தவொரு பிரிவுக்கும் முரணாக அமையவில்லை என நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Read More

சீரற்ற வானிலையால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 1 இலட்சம் வரை இழப்பீடு: காப்புறுதி கட்டணம் இன்றி வழங்க விவசாய அமைச்சு அதிரடி நடவடிக்கை! கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் பெய்த பலத்த மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கான மதிப்பீடுகளுக்குப் பின்னர், சேத விபரங்களின் அடிப்படையில் ஹெக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபா வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. இவ்விழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பின்வரும் பிரதான பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது: நெல் சோளம் உருளைக்கிழங்கு சோயா மிளகாய் பெரிய வெங்காயம் பாதிக்கப்பட்ட விவசாயிகள், சேதமடைந்த தங்களது பயிர்கள் தொடர்பான விபரங்களை அடுத்த 14 நாட்களுக்குள், அந்தந்தப் பகுதி விவசாய சேவை நிலையங்களில் (கமநல சேவை நிலையங்கள்) பராமரிக்கப்படும் சேத விபரங்களை அறிவிக்கும் பதிவேட்டில் பதிவு செய்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கிய குறிப்பு: இந்த…

Read More

QR குறியீடு முறை மூலமான எரிபொருள் விநியோகம் தொடரும்: நாடாளுமன்றத்தில் பிரதியமைச்சர் அனில் ஜயந்த அறிவிப்பு! எரிபொருள் விநியோகத்திற்காக நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள QR குறியீடு (National Fuel Pass) நடைமுறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் அனில் ஜயந்த இன்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இன்று (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே பிரதியமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார். எரிபொருள் விநியோகத்தில் நிலவும் ஒழுங்குமுறையைப் பேணவும், நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் நுகர்வை இயன்றவரை கட்டுப்படுத்தி குறைக்கும் நோக்கிலுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். கடந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த QR குறியீடு முறைமை, தற்போதைய சூழலிலும் எரிபொருள் முகாமைத்துவத்திற்கு அவசியமானது என அரசு கருதுவதாக அவரது உரையின் மூலம் தெரியவந்துள்ளது.

Read More

சாமிமலை முச்சக்கர வண்டி சாரதிகள் எதிர்கொள்ளும் வாழ்வாதார நெருக்கடி: மஸ்கேலியா பிரதேச சபைக்கு அவசர கோரிக்கை! : சாமிமலை நகரில் அதிகரித்து வரும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை, போக்குவரத்து நெரிசல் மற்றும் பகுதிநேர சாரதிகளின் வருகை காரணமாக தங்களது அன்றாட வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சாமிமலை பகுதி முச்சக்கர வண்டி சாரதிகள் கவலை தெரிவித்துள்ளனர். ​இவ்விடயம் தொடர்பாக மஸ்கேலியா பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோருக்கு சாமிமலை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினரால் கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ​அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சாமிமலை பகுதியில் பெருமளவிலான குடும்பங்கள் முச்சக்கர வண்டி தொழிலையே முழுமையான வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றன. எனினும், தற்போது வேறு தொழில்களில் ஈடுபடுபவர்கள் மாலை நேரங்களில் பகுதிநேரமாக முச்சக்கர வண்டி சேவையில் ஈடுபடுவதனாலும், வெளிப்பகுதிகளில் இருந்து வரும் நபர்கள் குறைந்த கட்டணத்தில் சேவைகளை வழங்குவதனாலும், இந்தத் தொழிலை மாத்திரம் நம்பியிருக்கும் நிரந்தர சாரதிகளின் அன்றாட…

Read More

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (18) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். அநுராதபுர மாவட்டத்தில் இடைக்கிடையே மழை பெய்யும் வாய்ப்புள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த…

Read More