Author: Thana

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை எரிபொருள் மற்றும் மின்சாரத்தை மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்தி “புத்த ரஷ்மி” வெசாக் வலயத்தை ஏற்பாடு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் வெசாக் வலயக் காலப்பகுதியில் மின்சக்தி பயன்பாடு ஆகியன குறித்த இறுதிக்கட்டக் கலந்துரையாடல் நேற்று (20) அலரிமாளிகையில் நடைபெற்றது. பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போதே இது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. வெசாக் பண்டிகையை முன்னிட்டு எரிபொருள் மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்காக அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந்த சில விதிமுறைகளைத் தளர்த்துவது குறித்து இதன்போது அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. அத்துடன், வெசாக் வலயப் பணிகளை வெற்றிகரமாக ஏற்பாடு செய்வதற்கும், நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்புகளை மேற்கொள்வதற்கும் நியமிக்கப்பட்ட விசேட குழுக்களின் அதிகாரிகள் விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் இதன்போது முன்னெடுக்கப்பட்டன. இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட கொழும்பு கங்காராம…

Read More

மலையக பெருந்தோட்ட மக்களின் நில உரிமையை வலியுறுத்தி, கொழும்பு நோக்கி 140 கிலோமீட்டர் தூர நடைபயணத்தை மேற்கொண்ட சிறுவன் ஒருவன், ஹட்டன் நகரில் வைத்து பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். ​மலையக மக்களின் காணி மற்றும் வாழ்வுரிமை கோரிக்கைகளை முன்வைத்து இந்த நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும், நேற்று (மே 20) இச்சிறுவன் ஹட்டன் பகுதியை வந்தடைந்த போது, அங்கு விரைந்த ஹட்டன் பொலிஸாரும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளும் இணைந்து நடைபயணத்தை தடுத்து நிறுத்தினர். ​இவ்வளவு சிறிய வயதைக் கொண்ட ஒரு சிறுவனைப் பயன்படுத்தி, இவ்வளவு நீண்ட தூர நடைபயணத்தை மேற்கொள்வது சட்டப்படி சாத்தியமற்றது எனவும், அது சிறுவர் பாதுகாப்பு விதிகளுக்கு முரணானது எனவும் பொலிஸாரும் நன்னடத்தை அதிகாரிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர். ​இதனையடுத்து, சிறுவனின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்திற்கொண்டு இந்த நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

மஸ்கெலியாவில் சோகம்: பலாக்காய் பறிக்கச் சென்ற தொழிலாளி மரத்தில் இருந்து கிணற்றுக்குள் விழுந்து பலி! இச் சம்பவம் இன்று மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட ராணி பிரிவில் இடம் பெற்று உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் இச் சம்பவம் இன்று மதியம் 3.00 மணிக்கு இடம் பெற்றுள்ளது எனவும் மரணித்தவர் 68 வயது உடைய முத்துராமன் கிருஷ்ணசாமி எனவும் தெரிவித்தார்.தோட்டத்தில் வேலை செய்து விட்டு வீடு திரும்பிய போது தனது விவசாய தோட்டத்தில் உள்ள பலா மரத்தில் உள்ள பலா காயை பிடுங்கி வர சென்ற வேளையில் மரத்தில் ஏறி தவரி விழுந்த வேலையில் மரத்தின் கீழ் பகுதியில்  இருந்த கிணற்றில் விழுந்த மரணம் அடைந்துள்ளார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவரின் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள சவ கிடங்கில் வைக்கபட்டுள்ளது. நாளை காலை…

Read More

போதைப்பொருள் பேரழிவைத் தோற்கடிப்பதற்குத் தேவையான சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்படும்!  “முழுநாடுமே ஒன்றாக” விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 06 மாதங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்.  அர்ப்பணிப்பு, தளராத முயற்சி மற்றும் தொடர்ச்சியான அவதானத்துடன் செயற்படுவதன் மூலம் இந்த பேரழிவைத் தோற்கடிக்க முடியும். – மட்டக்களப்பு மாவட்ட “முழுநாடுமே ஒன்றாக” நிகழ்வில் ஜனாதிபதி வலியுறுத்தல் போதைப்பொருள் வர்த்தகர்களுக்குக் கடந்த காலத்தில் இருந்த அரசியல் பாதுகாப்பு தற்போது முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு எதிரான விசாரணைகளின் போது எந்தவொரு அதிகாரிக்கும் எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது என்றும், தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் தத்தமது எல்லைகளுக்குள் நின்று தமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளைச் சரியாக நிறைவேற்றும் எனத் தாம் நம்புவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இதன்போது தற்போதைய சட்டக் கட்டமைப்பு போதுமானதாக இல்லையெனில், புதிய சட்டங்களை இயற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசாங்கம், மத ஸ்தாபனங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும்…

Read More

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் மக்களிடம் கையளிப்பு மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனால் இன்று (20) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. தடைப்பட்டிருந்த இந்த நூலகத்தின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் காண்பதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார். இதற்கு இணையாக, பொது நூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்தப் புதிய நூலகக் கட்டிடத்தில், சிறுவர்களுக்கான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்காகத் தனியானதொரு பிரிவு நிறுவப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும். நாட்டில் வாசிப்பு கலாசாரம் குறைந்து வரும் இவ்வேளையில், தமிழ் மக்கள் இன்னமும் வாசிப்பதில் காட்டி வரும் ஆர்வம் பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நூலகம் ஒன்றைத் திறப்பது என்பது சிறைச்சாலையின் தேவையை இல்லாமல் செய்வதாகும் என்றும், இந்த பொது நூலகத்தின்…

Read More

இன்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஹர்சன ருக்ஷான் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகளை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, 400 கிராம் பால்மா பெக்கெட்டின் விலை 50 ரூபாவினாலும், 1 கிலோகிராம் பால்மா பக்கெட்டின் விலை 125 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்தை நிலைமைகள் மற்றும் நாணய மாற்று வீத நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு பால்மா பெக்கெட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. எவ்வாறாயினும், அடுத்த வாரத்திற்குள் குறித்த புதிய விலைகளின் கீழ் சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பால்மாக்கள் விநியோகிக்கப்படும் என்றும், தற்போது சந்தையிலுள்ள எந்தவொரு இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலையும் அதிகரிக்கப்படமாட்டாது…

Read More

மலையக மக்களின் காணி உரிமைகளை வென்றெடுப்பது குறித்தும், அது தொடர்பாக அரசாங்கம் மற்றும் பொறுப்பு வாய்ந்த தரப்பினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் லிந்துலையில் கல்வி பயிலும் 7 வயது சிறுவனான பிரேமராஜா கார்கி வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் நடைபவனியொன்றை ஆரம்பித்துள்ளார். தலவாக்கலை நகரில் இருந்து கொழும்பு ஜனாதிபதி செயலகம் மற்றும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் ஆகியவற்றுக்குத் தனது கோரிக்கை அடங்கிய கடிதங்களைக் கையளிப்பதற்காக இந்த 140 கிலோமீட்டர் தூர நடைபவனியை அவர் முன்னெடுத்துள்ளார். தனது வயதையும் பொருட்படுத்தாமல் மலையக சமூகத்தின் வாழ்வாதார மற்றும் நில உரிமைகளுக்காகப் புறப்பட்டுள்ள அச்சிறுவனின் இந்தத் துணிச்சலான முயற்சி, மலையக மக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் இடையேயும் பெரும் நெகிழ்ச்சியையும் ஆதரவையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More

இலங்கையில் கடந்த 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைக் கல்வியில் இருந்து இடைவிலகியுள்ளதாக கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை (19) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கும்போதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றில் பிரதி அமைச்சர் சமர்ப்பித்த தரவுகளின்படி: 2024 ஆம் ஆண்டில்: 711 மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லாதவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டில்: 885 மாணவர்கள் பாடசாலைக் கல்வியை விடுத்து இடைவிலகியுள்ளனர். இடைவிலகிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வது குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், “இந்த மாணவர்கள் பாடசாலைக் கல்வியை பாதியிலேயே நிறுத்தியதற்கான பின்னணி மற்றும் துல்லியமான காரணங்களை கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகின்றது. வறுமை, குடும்பப் பின்னணி உள்ளிட்ட காரணங்களைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பாடசாலைகளில் சேர்ப்பதற்கான (மீள்சேர்க்கை) முறையான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன,” எனத் தெரிவித்தார். இலங்கையின் இலவசக் கல்வி…

Read More

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 29,589 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், கடந்த மே 18 ஆம் திகதி வரையிலான உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நாட்டில் டெங்கு காய்ச்சல் காரணமாக 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார். 39 பிரிவுகள் அதி அபாய வலயங்களாக அறிவிப்பு நாட்டில் டெங்கு பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையைக் கருத்திற்கொண்டு, 39 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் அதிக ஆபத்துள்ள வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மாகாண ரீதியாகப் பார்க்கும்போது, வழமை போன்று மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் காணப்படுகின்றன. அச்சுறுத்தலில் 7 மாவட்டங்கள் தற்போது நாட்டின் அனைத்து 25 மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் பதிவாகி வரும் போதிலும், குறிப்பிட்ட 7 மாவட்டங்களில் பாதிப்பு மிகவும் தீவிரமாக…

Read More

சட்டவிரோதமான முறையில் தொடர்பாடல் உபகரணங்களைப் பயன்படுத்தி நடாத்திச் செல்லப்பட்ட தொலைக்காட்சி ஔிபரப்பு நிலையம் ஒன்றை கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளதுடன், வெளிநாட்டு சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்திடிய வீதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் இந்த ஔிபரப்பு நிலையம் நடத்தப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்திடம் பெறப்பட்ட சோதனை பிடியாணையின்படி நேற்று (19) இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து இந்த கூட்டு முற்றுகையை முன்னெடுத்திருந்தனர். இதன்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட அலைபரப்பு உபகரணங்களுடன், இந்த சட்டவிரோத நிலையத்தை நடத்திச் சென்ற வெளிநாட்டு நபர் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுபோவில பகுதியில் வசித்து வந்த 55 வயதுடைய…

Read More