Author: Thana

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தினால் இன்று (22) காலை 9 மணிக்கு வௌியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, ருவான்வெல்ல மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, குருவிட்ட, எஹலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் அனர்த்தங்கள் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க, பாதுக்கை, கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல, இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுல்ல, கிரிஎல்ல, எலபாத்த, கலவானை, நிவித்திகல, கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை, களுத்துறை மாவட்டத்தின் ஹொரனை, புளத்சிங்கள, இங்கிரிய, பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹூபிட்டிய,…

Read More

செ.திவாகரன் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும், லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற ஒரு தனியார் பேருந்தும், லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதைத் தொடர்ந்து, பேருந்தில் பயணித்த ஒரு பாடசாலை மாணவர் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தன. https://www.youtube.com/shorts/_sufc_0TXmY ஹட்டன் – பொககவந்தலாவ பிரதான சாலையில் உள்ள நோர்வூட் வென்சர் தோட்டம் பகுதியில் இன்று காலை சுமார் 7:10 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பொகவந்தலாவவிலிருந்து ஹட்டனில் உள்ள பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்துக்கு எதிர் திசையில், ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது . விபத்து நடந்த நேரத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 20 ஆசிரியர்கள் பேருந்தில் பயணித்துள்ளன எனவும் தற்போதைய நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக நுவரெலியா…

Read More

வெளிமடையில் மீண்டும் தாக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்: வடிவேல் சுரேஷ் கடும் கண்டனம்! வெளிமடையில் நேற்று (21)தோட்ட முகாமையாளர்களால் தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எந்த வித காரணமும் இன்றி சப்பாத்து கால்களால் தன் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட தொழிலாளார் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். https://www.youtube.com/watch?v=HX-iZtKDi4I ​ இதே வேளை மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் சம்பவங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். வெளிமடையில் நேற்று தோட்ட முகாமையாளர்களால் தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எந்த வித காரணமும் இன்றி இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட தொழிலாளார் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். நாடாளுமன்றத்திலும் ஏனைய மாநாடுகளிலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டு வரும் அதே வேளையில், இவ்வாறான கசப்பான சம்பவங்கள் தொடர்வது வேதனைக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார். மலையக மக்களின் பாதுகாப்பு குறித்து பாராளுமன்றத்தில் விவாதங்கள்…

Read More

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 6 பாடசாலைகளை இன்றைய தினம் (22) மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ருவன்வெல்ல பகுதியில் 3 பாடசாலைகளையும், தெஹியோவிட்ட பகுதியில் 3 பாடசாலைகளையும் மூடி, மாணவர்களை வீடுகளுக்கு அனுப்புமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தற்போதுள்ள காலநிலை நிலவரத்தைக் கருத்திற்கொண்டு, ஏனைய பாடசாலைகளை நடத்துவதா அல்லது விடுமுறை வழங்குவதா என்பது குறித்து தீர்மானிக்கும் பொறுப்பு வலயத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெஹியோவிட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் எச்.எல். ஹரிஸ்சந்திர தெரிவித்தார். இதேவேளை, பலத்த மழை காரணமாக கேகாலை – அவிசாவளை வீதி தெஹியோவிட்ட பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ‘அத தெரண’ செய்தியாளர் குறிப்பிட்டார்.

Read More

தோட்டப் பிரதேசங்களில் ‘பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள்’ அமைக்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்! பெருந்தோட்டப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு சவால்களுக்கு தீர்வு காணும் வகையில், ஒவ்வொரு தோட்டப் பிரதேசங்களிலும் ‘பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள்’ (People’s Safety Committees) அமைக்கப்பட வேண்டும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பதில் கடமை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று வலியுறுத்தினார். ​பெருந்தோட்டத் துறை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பான விசேட உயர் மட்டக் கலந்துரையாடல் இன்று (21) மாலை 2.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது சுந்தரலிங்கம் பிரதீப்  அவர் இந்த முக்கிய கோரிக்கையை முன்வைத்தார். ​ ​பெருந்தோட்ட மக்களுக்கான பாதுகாப்புச் சூழலை பலப்படுத்துவதையும், தொழிலாளர் உரிமைகளை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பொலிஸ் மா அதிபர் (IGP), பிரதி பொலிஸ் மா அதிபர்கள் (DIGs) மற்றும்…

Read More

பெல்ஜியத்தின் இலங்கையர்கள் சங்கத்தினால் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நிதி உதவி பெல்ஜியத்தின் இலங்கையர்கள் சங்கத்தினால், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையையும், அனர்த்தத்துக்குள்ளான நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 17,600 யூரோ நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த நிதியை பெல்ஜியத்தின் இலங்கையர்கள் சங்க உப தலைவர் நிமல் ஜயகொடி, கடந்த 19ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். டித்வா சூறாவளி காரணமாகப் பாதிப்புக்குள்ளான மாத்தளை, கம்மடுவ தமிழ் மகா வித்தியாலயத்தின் புனரமைப்புப் பணிகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் ஹேமந்த பெரேராவின் ஒருங்கிணைப்புடன், பெல்ஜியத்தின் இலங்கையர்கள் சங்கத்தின் பங்களிப்பு இதற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்காக பெல்ஜியத்தின் இலங்கையர்கள் சங்கம், பெல்ஜியத்தில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் பெல்ஜியத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவற்றின் ஆதரவும் கிடைத்துள்ளது. மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ்…

Read More

குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி நிதியுதவி வழங்க ஜனாதிபதி நிதியம் கவனம் செலுத்தியுள்ளது குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், மாதாந்த கல்வி நிதியுதவி வழங்குவது குறித்து ஜனாதிபதி நிதியம் கவனம் செலுத்தியுள்ளது. நேற்று (20) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே மற்றும் தேசிய லொத்தர் சபை, அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதி நிதியத்தின் மூலம் தற்போது பல்வேறு துறைகளை உள்ளடக்கிய வகையில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருவதுடன், பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்காக பல்வேறு நிதியுதவித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் மற்றுமொரு கட்டமாக, குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி நிதியுதவி வழங்க ஜனாதிபதி…

Read More

நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு, தொலைந்த, தவறாக வைக்கப்பட்ட மற்றும் திருடப்பட்ட கையடக்க தொலைபேசிகள் தொடர்பான புகார்கள் தினந்தோறும் பதிவாகி வருவதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தகைய சாதனங்கள் தவறான நபர்களின் கைகளுக்குச் சென்றால், அவை சமூக விரோத மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. கைத்தொலைபேசிகளில் சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் நிதித் தரவுகள் (Financial Data) காரணமாக, உரிமையாளர்கள் எதிர்பாராதவிதமாகப் பாதிக்கப்படுவதாகவும், குற்றவாளிகள் இவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அவசர வழிகாட்டல்கள்: இவ்வாறான ஆபத்துகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் உடனடியாக பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்: SIM கார்டை உடனடியாக முடக்குங்கள் (Deactivate): கைப்பேசி தொலைந்தவுடன், சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்குநரைத் தொடர்புகொண்டு SIM கார்டை உடனடியாக முடக்க வேண்டும். இது…

Read More

இலங்கையில் ஆண்டுதோறும் 45 முதல் 60 வரையிலான குழந்தைகள் ‘தலாசீமியா’ (Thalassemia – பரம்பரை ரத்த சோகை நோய்) பாதிப்புடன் பிறப்பதாகச் சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தற்போது பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், எதிர்காலத்தில் இந்த மரபணு குறைபாடு சீராக அதிகரிப்பதற்கான அதிக ஆபத்து உள்ளதாகச் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. மே 8 ஆம் தேதி அனுசரிக்கப்படும் ‘சர்வதேச தலாசீமியா தினத்தை’ முன்னிட்டு கொழும்பில் நடத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் தற்போது சுமார் 2,500 தலாசீமியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இதன்போது வெளிப்படுத்தினர். தடுப்பதற்கான வழிமுறைகள் இது குறித்துச் சுகாதார அமைச்சின் தொற்றா நோய்ப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் ஸ்ரீயானி அலஹப்பெரும கருத்துத் தெரிவிக்கையில், “தலாசீமியா நோய்க்காவிகளாக (Carriers) இருப்பவர்களுக்கு இடையிலான திருமணங்களைத் தவிர்ப்பதும், திருமணத்திற்கு முந்தைய ரத்தப் பரிசோதனைகளை ஊக்குவிப்பதும் இந்நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான மிகச்…

Read More

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். வட மாகாணத்திலும் அனுராதபுர மாவட்டத்திலும் சில தடவைகள் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக்…

Read More