Author: Thana
மொனராகலை மாவட்டத்தில் திட்வா நட்டஈடு வழங்கியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அனர்த்த நிவாரண சேவை அதிகாரி பணிநீக்கம்
மொனராகலை மாவட்டத்தில் திட்வா நட்டஈடு வழங்கியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அனர்த்த நிவாரண சேவை அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குற்றம் சுமத்தப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தரும் விசாரணை நடவடிக்கைகளுக்கு வசதியாக வேறு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இச்சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரச்சாரப் பிரிவு அரசாங்க தகவல் திணைக்களம்
கெக்கிராவை, சமகிகம பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல் குவாரி (கல் அகழ்வு குழி) ஒன்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் (17) பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஹபுத்தளை பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 41 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் உட்பட ஐந்து பேரடங்கிய குழுவினர் அங்கு நீராட சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் மூவர் நீராடிவிட்டுத் திரும்பியுள்ளனர். எனினும், இவ்விரு சகோதரர்களும் அங்கேயே தங்கியிருந்த போதே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகின்றது. இக்குழுவினர் கெக்கிராவையில் உள்ள பாடசாலை ஒன்றின் கட்டட நிர்மாணப் பணிகளுக்காக இப்பகுதிக்கு வருகை தந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாகக் கெக்கிராவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அரசாங்கத்தின் பொருளாதார வளர்ச்சித் திட்டம் நியாயத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய அடிப்படைக் கொள்கைகளைச் சுற்றியே கட்டியெழுப்பப்பட்டுள்ளது இந்த டிஜிட்டல் ஒத்துழைப்பு நாம் அனைவரும் எதிர்பார்க்கும் பலன்களைப் பெற்றுத்தரும் – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய டிஜிட்டல் பொருளாதாரத்தின் தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையில் PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்துவது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் இன்று (16) முற்பகல் கொழும்பு கோல்ஃபேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதுவரை காலமும் இலங்கையர்களின் PayPal கணக்குகள் “பணம் அனுப்புவதற்கு மாத்திரம்” (Send Only) வரையறுக்கப்பட்டிருந்ததுடன், இதன் மூலம் பயனாளிகள் வெளிநாடுகளுக்குக் கொடுப்பனவுகளைச் செய்ய முடிந்த போதிலும், சர்வதேச வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை இலங்கைக்குப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. இந்த வரையறை காரணமாக, இலங்கையின் சுயாதீன தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகங்கள் பெரும் தடைகளை எதிர்கொண்டிருந்தன. இந்தச் சேவை விரிவுபடுத்தப்பட்டதன் மூலம், இணையவழி ஊடாகச் சேவைகளை…
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக இடி மின்னல் தாக்கத்தினால் வீடு ஒன்று பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன் வீட்டில் தங்கி இருந்த மூவர் அதிர்ச்சியினாலும் காயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள வீடு ஒன்று இடி மின்னல் தாக்கத்தினால் பெருமளவில் சேதமடைந்துள்ளது வீட்டில் தங்கி இருந்த தாயையும் தந்தையும் தவிர ஏனைய மூன்று பிள்ளைகளும் அதிர்ச்சி மற்றும் காயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.13,15,19 வயதுடையவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை கடும் மழை பெய்ததுடன் இடி மின்னல் மற்றும் சுழல் காற்று வீசியது சுழல் காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்து விழுந்துள்ளன. இடி மின்னல் காரணமாக குறித்த வீடு பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் மின்சார உபகரணங்கள் முற்றாக சேதுமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெரிய வெங்காயம் (பம்பாய் வெங்காயம்) மற்றும் மறக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோரும் வர்த்தகர்களும் கவலை தெரிவிக்கின்றனர். இவ்விடயம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பிரதேச மக்கள், “கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் மற்றும் மரக்கறிகளின் விலைகள், தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளன. கடந்த நாட்களில் 160 முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை, தற்போது 280 முதல் 320 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அத்துடன், மரக்கறிகளின் விலைகளும் பன்மடங்கு உயர்ந்துள்ளதால், அன்றாட உணவைத் தயாரிப்பதில் நாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்தனர். இவ்விடயம் குறித்து மலையகத்தின் முக்கிய வர்த்தகர்கள் சிலரிடம் வினவியபோது, “தற்போது நிலவும் மோசமான வானிலை மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளமை காரணமாக, கொழும்பு மற்றும்…
நெதர்லாந்து நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் கால செப்பேடுகள் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் பெருமிதமான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நெதர்லாந்தில் நடைபெற்ற இது தொடர்பான விசேட விழாவில், அந்த நாட்டின் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்ற பின்னர், பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் (X) இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து பிரதமர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்! 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன். சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின்…
பெருந்தோட்டங்களில் இடம்பெறும் -தாக்குதல்கள் தொடர்பில் பல்தரப்பு மாநாடு-தமுகூ தலைவர் மனோ விடம் அமைச்சர் விஜயபால இணக்கம்>
பெருந்தோட்டங்களில் இடம்பெறும் -தாக்குதல்கள் தொடர்பில் பல்தரப்பு மாநாடு-தமுகூ தலைவர் மனோ விடம் அமைச்சர் விஜயபால இணக்கம்> பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல தரப்புகளையும் அழைத்து அவசர மாநாட்டை கூட்டுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பாராளுமன்றத்திலும், அதை தொடர்ந்து, கடிதம் மூலமும், நேற்று நேரடியாக தொலைபேசி மூலமும் விடுத்த கோரிக்கையை ஏற்று கொண்ட பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, புதன் கிழமை பாராளுமன்ற வளாகத்தில் இந்த மாநாட்டை கூட்டுவதாக மனோ எம்பியிடம் உறுதி அளித்துள்ளார். இது தொடர்பில் தமுகூ தலைவர் மனோ கணேசன், பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளார். அதை தொடர்ந்து தொலைபேசியிலும் உரையாடி உள்ளார். இதை தொடர்ந்து இந்த முடிவை அமைச்சர், மனோ எம்பியிடம் நேரடியாக தெரிவித்து உள்ளார். கௌரவ ஆனந்த விஜேபால, எம்.பி. பொது…
ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்
ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்… “புதிய பேருந்துகள் தந்தால் மட்டுமே தீர்வு”: ஹட்டனில் போக்குவரத்து பாதிப்பால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் கடும் பாதிப்பு! நாளாந்தம் சாமிமலை நகரில் இருந்து காலை 6.15 மணிக்கு சேவையில் ஈடு படுத்த பட்ட அரச பேருந்து காட்மோர் மஸ்கெலியா சேவையில் ஈடு படுத்த பட்ட அரச பேருந்து சேவைகள் மற்றும் சாமிமலை நகரில் இருந்து அதிகாலை வேளையில் கண்டி செல்லும் அரசு பேருந்து சேவைகள் கடந்த சில நாட்களாக முறையாக ஈடுபடுத்தாததால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் நோயாளிகள் அரச உத்தியோகத்தர்கள் பாரிய தாக்கத்தை எதிர் கொள்ள நேரிட்டு உள்ளது. மாதாந்தம் முன் கூட்டியே பயண சீட்டைப் பெற்ற பாடசாலை மாணவர்கள் மீண்டும் பணம் கொடுத்து தனியார் பேருந்துகளில் பயணிக்கும் நிலையில் உள்ளதாகவும் குறித்த அரச பேருந்து சேவைகள் இல்லாத காரணத்தால்…
உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி
அதிகாரவர்த்தை தோட்டத் தாக்குதல்: உரிமைக் குரலை நசுக்கும் நிர்வாக அடக்குமுறை ! என இராமசுந்தரம் ரகுராஜ் வலியுறுத்தல் உடபுச்சல்லாவ பகுதியில் அமைந்துள்ள அதிகாரவர்த்தை (Thelmont Estate) தோட்டத்தில் நேற்று இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் மலையகப் பகுதிகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தோட்டத்தைச் சேர்ந்த சுப்பையா நிரோஷன் என்ற இளைஞரின் தாயார் பரணி, தனது ஓய்வூதிய கொடுப்பனவைப் பெறுவதற்காக ஆறு மாதங்களுக்கு முன்னர் விண்ணப்பித்திருந்த போதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக விளக்கம் கேட்க நேற்று காலை தோட்ட அலுவலகத்திற்குச் சென்ற நிரோஷனுக்கும் தோட்ட நிர்வாகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் வன்முறையாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதன்போது நிர்வாக அதிகாரிகள் நிரோஷன் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த நிரோஷன் முதலில் உடபுச்சல்லாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த…
மட்டக்களப்பில் பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டின் கீழ் இரு இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு செய்தியாளர் தெரிவித்துள்ளார். தந்தை ஒருவர் தனது மகளை மேலதிக வகுப்பிற்காக அழைத்துச் சென்றுள்ளார். எனினும், பலத்த மழை காரணமாக அன்று வகுப்பு நடைபெறாது என ஆசிரியர் தெரிவித்ததைத் தொடர்ந்து, தனது மகளை அருகிலுள்ள உறவினர் வீட்டிற்குச் செல்லும் பாதையில் காரிலிருந்து தந்தை இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். சில நிமிடங்களில், சிறுமி இன்னும் வீட்டிற்கு வரவில்லை என உறவினர்கள் தந்தைக்குத் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை, உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது அங்கு முச்சக்கர வண்டி (ஆட்டோ) ஒன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் நிற்பதை அவதானித்துள்ளார். அவர் அந்த முச்சக்கர வண்டியை அண்மிக்க முயன்றபோது, அதிலிருந்த இளைஞன் ஒருவன் தப்பியோடியுள்ளார். இதன்போது, தனது மகள் முச்சக்கர வண்டிக்குள் மயங்கிய நிலையில் இருப்பதைக்கண்ட தந்தை,…