Author: Thana

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (12) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு அமைவாக அவர் அங்கு முன்னிலையாகவுள்ளார். முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

காலி, தங்கெதர, டிக்சன் சந்திப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (12) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர், சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

செ.திவாகரன் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு அபாயம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை. தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தியகலா பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தித்வா புயலின் போது வட்டவளை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் கொட்டிக் கிடந்த மண் மேட்டினை வெட்டி அகற்றப்பட்ட நிலையில், குறித்த பகுதியில் மீண்டும் நேற்று (10) மாலை பெய்த கடுமையான மழைக் காரணமாக அதே இடத்தில் மற்றொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்போது போக்குவரத்து ஒருவழிப்பாதையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, மேலும், சம்பவ இடத்திலிருந்து இடிபாடுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியாளர் தெரிவித்தார். கடந்த நாட்களில் நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலையினால் இவ் மண்சரி ஏற்பட்டுள்ளதுடன் இப்பகுதியில் பல இடங்களில் மண்சரிவுக்கான அறிகுறியாக…

Read More

கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி இணையம் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 18 சீன தேசியவாதிகள் மற்றும் பெரு (Peru) நாட்டுப் பெண் ஒருவர் கொம்பனித்தெரு பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து ஆப்பிள் (Apple) ரக கையடக்க தொலைபேசிகள் 399, மடிக்கணினிகள் (Laptop) 14, மேசை கணினிகள் (Desktop) 02, பணம் 473,870 ரூபாய், வரி விலக்கு அளிக்கப்பட்ட சிகரெட்டுகள் 600 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. வெளிநாட்டவர்கள் குழுவொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் விடுதியில் தங்கியிருப்பதாக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில விஜேமான்னவிற்கு கிடைத்த ரகசியத் தகவலையடுத்து இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. குறித்த விடுதியின் 11-வது மாடியில் உள்ள 5 அறைகளிலும், 12-வது மாடியில் உள்ள 2 அறைகளிலும் தங்கியிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்ட நபர்களிடம் இலங்கையில் தங்கியிருப்பதற்கான செல்லுபடியாகும் கடவுச்சீட்டோ (Passport)…

Read More

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐ.பி.எல் தொடரில், லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர் உர்வில் படேல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிரடிச் சாதனையை நிலைநாட்டியுள்ளார். சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே லக்னோ அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த உர்வில் படேல், வெறும் 13 பந்துகளில் தனது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேக அரைச்சதம் கடந்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்திருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் (13 பந்துகள்) சாதனையை உர்வில் படேல் சமன் செய்துள்ளார். ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேக அரைச்சதங்கள்: உர்வில் படேல் – 13 பந்துகள் (2026) யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 13 பந்துகள் (2023) கே.எல். ராஹுல் – 14 பந்துகள் (2018) பெட் கமின்ஸ் – 14 பந்துகள் (2022)

Read More

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வி.சி.க நிபந்தனையற்ற ஆதரவு: தமிழக முதல்வராகிறார் விஜய்! சென்னை: தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளைத் தொடர்ந்து, தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் (வி.சி.க) தனது நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளது. இதன் மூலம் தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆதரவு கடிதம் கையளிப்பு: சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், வி.சி.க தலைவர் திருமாவளவன், த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவிடம் தனது கட்சியின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ஆலோசனையைத் தொடர்ந்து இந்த முக்கிய முடிவு அறிவிக்கப்பட்டது. திருமாவளவன் வழங்கிய ஆதரவு கடிதத்தை செய்தியாளர்களிடம் காட்டிய ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பார் எனத் தெரிவித்தார். பலம் அதிகரிப்பு: வி.சி.க-வின் இந்த ஆதரவைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில்…

Read More

கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பல்லேகம ஹேமரத்ன தேரர் நிட்டம்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் உதய குமார வூட்லர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரும், தொழிலதிபர் எனக் கூறப்படும் ஒருவரும் இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அச்சிறுமி ராகம சிறார் பாதுகாப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற.

Read More

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீப்பரவல், சுமார் 5 மணி நேரப் போராட்டத்தின் பின்னர் தற்பொழுது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் மருந்து களஞ்சியப் பகுதியில் திடீரெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனை அவதானித்த வைத்தியசாலை ஊழியர்கள் உடனடியாகத் தீயை அணைக்க முயன்றதுடன், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் வழங்கினர். தொடர்ந்து யாழ். மாநகர சபை தீயணைப்புப் படையினர், இராணுவத்தினர், விமானப் படையினர், பொலிஸார் மற்றும் மின்சார சபையினர் எனப் பல தரப்பினரும் ஒன்றிணைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். களஞ்சியசாலைக்குள் இருந்த அமிலங்கள் மற்றும் மருந்துகள் காரணமாக தீ வேகமாகப் பரவிய போதிலும், நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.  இந்தத் தீ விபத்தின் காரணமாகப் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளன. அத்துடன், மருந்து களஞ்சியசாலைக் கட்டடமும் பாரிய அளவில் சேதமடைந்துள்ளது. தற்போது களஞ்சியசாலையைச் சுத்தப்படுத்தும்…

Read More

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர் அஷார்டீன் மொய்னுதீனின் கட்சி உறுப்புரிமையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்த அந்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் (ACMC) பிரதிநிதித்துவப்படுத்தி குருணாகல் மாநகர சபைக்குத் தெரிவான அவர், மாநகர சபையில் ஆட்சியமைக்கும் போது தனது ஆதரவைத் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) வழங்கியிருந்தார். அதன் பின்னர் அவர் பிரதி மேயராகப் பதவியேற்றார். குருணாகல் பேருந்து நிலையத்தைச் சுத்தப்படுத்தும் மற்றும் பொது மலசலக்கூடத்தைச் சுத்தப்படுத்தும் ஒப்பந்தத்தை (Tender) வழங்குவதற்காகவே அவர் குறித்த இலஞ்சப் பணத்தைக் கோரியதாகக் கூறப்படுகிறது. இதன்படி, 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முயன்ற போது, பத்தரமுல்லை பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் நேற்று (08) பிரதி மேயர் கைது செய்யப்பட்டார்.

Read More

தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தநிலையில், தற்போது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. தவெகவிற்கான ஆதரவுக்கடிதம் அக்கட்சியின் நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமாரிடம் வழங்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றியது. ஆட்சியமைக்க தேவையான 118 தொகுதிகளைப் பெற மற்றக் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிவந்தது. இதில் காங்கிரஸ் நேற்றுமுன்தினம் ஆதரவு தெரிவித்த நிலையில், சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட இடதுசாரிகளிடமும் ஆதரவு கோரிவந்தது. இந்நிலையில் இன்று தங்களது ஆதரவு முடிவை உறுதிப்படுத்தியுள்ளது சிபிஐ. நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இதன்மூலம் தவெக கூட்டணி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 115-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 4 பேர் விஜய்க்கு ஆதரவு அளிக்கவேண்டும்.

Read More