Author: Thana
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சடலமாக மீட்பு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பிணை வழங்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக, அவரது உறவினர்கள் எனக்கூறி போலி பிணையாளர்கள் இருவர் நீதிமன்றில் முன்னிலையானமை தெரியவந்தமையை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். கபில சந்திரசேனவின் பிணை நிபந்தனைகளின்படி, அவரது நெருங்கிய உறவினர்கள் மூவர் ஆள் பிணை வழங்க வேண்டியிருந்தது. இதற்காக உறவினர்களாக முன்னிலைப்படுவதற்குச் சந்தேக நபர்கள் தலா 15,000 ரூபாயைப் பணமாகப் பெற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில்…
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வியட்நாம் ஜனாதிபதி இன்று இரவு இலங்கை வருகை வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To Lam), (07) இரவு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தருகிறார். இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 55 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில், 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வியட்நாமுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது விடுத்த அழைப்பிற்கு இணங்க, இந்த வருகை இடம்பெறுகிறது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நாடு நகரும் இத்தருணத்தில் இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு வியட்நாம் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். உலகில் ஒரு பிரதான உற்பத்தி மையமாக உருவெடுத்து, தற்போது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில்…
இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆரம்பமாகி பத்து நாட்களுக்குப் பின்னர், கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 254 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (மே 6 மற்றும் 7) மீட்கப்பட்ட ஐந்து மனித எலும்புக்கூடுகளில் பெரும்பாலானவை சிறு குழந்தைகளினுடையது எனவும் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். “இரண்டு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. இதுவரை 254 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 259 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.” புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களும் இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். “14 பிற பொருட்கள் இன்று நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 82 தொடக்கம் 96 வரையான பிற பொருட்கள் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.” அகழ்வுப் பணிக்கு அரசாங்கத்திடமிருந்து 2.1 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றதை…
இலங்கையின் சுற்றுலாத்துறையை சர்வதேச ரீதியில் மேம்படுத்துவதற்காக 40 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு ஒரு வருட காலத்திற்கு இலவச விசா (Free Visa) வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார். விசா நடைமுறை மாற்றம்: சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது தற்போதைய சூழலில் அவசியமானது என்பதால், குடிவரவு குடியகல்வு சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்த நடைமுறையானது ஆரம்ப கட்டமாக ஆறு மாதங்களுக்குப் பிறகு மீளாய்வு செய்யப்படும் என்றும், அதன் பின்னரே தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார். பயன் பெறும் நாடுகள்: இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், சவுதி அரேபியா மற்றும் மலேசியா உள்ளிட்ட 40 நாடுகளுக்கு 30 நாட்கள் செல்லுபடியாகும் சுற்றுலா விசா இலவசமாக வழங்கப்படவுள்ளது. தேசிய…
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழடுக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களிலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (08) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மேலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகக்கூடும். அதேவேளை, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் காலை நேரங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மாவட்டத்திலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானமாக இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…
மஸ்கெலியா, மொக்கா தோட்டத்தின் எய்ம்ஸ் பீக் பிரிவில் பணிபுரியும் தோட்டக் காவலாளி ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தோட்ட உதவி முகாமையாளரை, எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது: மஸ்கெலியா பகுதியில் அமைந்துள்ள ஆர்.பி.கோ. (RPC) பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான மொக்கா தோட்டத்தின் எய்ம்ஸ் பீக் பிரிவில், கடந்த 5 ஆம் திகதி இரவு இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தோட்ட உதவி முகாமையாளரால் தாம் தாக்கப்பட்டதாகத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட தோட்டக் காவலாளி 6 ஆம் திகதி அதிகாலை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து காயமடைந்த அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கைது மற்றும் நீதிமன்ற நடவடிக்கை: தொழிலாளி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட மஸ்கெலியா பொலிஸார், சம்பந்தப்பட்ட உதவி முகாமையாளரை புதன்கிழமை (06)…
அஸ்வெசும (Aswesuma) திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவுகள் இருமுறை வழங்கப்பட்டதாகப் பரவி வரும் தகவல்கள் தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை விளக்கமளித்துள்ளது. தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக அஸ்வெசும பயனாளிகளுக்கு ஏப்ரல் மாதக் கொடுப்பனவுகளை வழங்குவதே சபையின் நோக்கமாக இருந்தது. இதற்கமைய, முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப் பயனாளிகளுக்கான கொடுப்பனவு 2026.04.10 அன்று வழங்கப்பட்டது. சாதாரண கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக, மத்திய கிழக்கின் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் பின்வரும் விசேட புத்தாண்டு கொடுப்பனவுகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது: மிகவும் வறிய குடும்பங்களுக்கு – 7,500 ரூபாய். வறிய குடும்பங்களுக்கு – 5,000 ரூபாய். பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலையிலுள்ள குடும்பங்களுக்கு – 2,500 ரூபாய். ஒருங்கிணைந்த நலன்புரி நன்மைகள் தகவல் அமைப்பின் ஊடாக மாதத்திற்கு இருமுறை கொடுப்பனவுகளைச் செலுத்த இயலாது என்பதால், இந்த விசேட புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவை கணினி முறைமைக்கு வெளியகமான (Manual Slip files) முறையில்…
ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு கப்பல்களை இலக்கு வைத்தும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியும் அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாக ஈரானின் உயர்மட்ட இராணுவக் கட்டளையகம் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானின் ஜஸ்க் கடலோரப் பகுதியிலிருந்து ஹோர்முஸ் நீரிணை நோக்கிச் சென்ற ஈரானிய எண்ணெய் கப்பலையும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஃபுஜைரா துறைமுகத்திற்கு அருகே நீரிணைக்குள் நுழைந்த மற்றொரு கப்பலையும் அமெரிக்கா குறிவைத்ததாக ஈரானின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே, அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய தூண்டுதலற்ற தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அத்தாக்குதல்களுக்குக் காரணமான ஈரானியத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. மூன்று அமெரிக்கக் கடற்படை கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்தபோது, ஈரான் பல ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் சிறிய படகுகள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரென் ஆகிய உணவு வகைகளின் விலைகளை அதிகரிப்பு
இன்று (07) நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரென் ஆகிய உணவு வகைகளின் விலைகளை 25 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தி நடத்தப்படும் சிற்றுண்டிச்சாலைகளில் சாதாரண தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இது குறித்துத் தெரிவிக்கையில், சுமார் 25% – 30% வரையான சிற்றுண்டிச்சாலைகள் லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்துவதாகவும், தற்போதுள்ள நிலையில் அவர்களால் அந்த எரிவாயுவின் விலையைத் தாங்கிக்கொள்ள முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதற்கமைய, லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தும் சிற்றுண்டிச்சாலைகளில் ஒரு சாதாரண தேநீரின் விலை 5 ரூபாவினாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சிற்றுண்டி வகைகளின் விலைகள் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், முட்டை ரொட்டி மற்றும் பராட்டாக்களின் விலைகளில் மாற்றம் இல்லை என ஹர்ஷன ருக்ஷான் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
தெஹிவளை பகுதியில் கூர்மையான ஆயுதங்களுடன் வர்த்தக நிலையமொன்றுக்குள் நுழைந்த ஆறு பெண்கள் அடங்கிய கொள்ளையர் கும்பல், ஊழியர்களைக் கொடூரமாகத் தாக்கி 13 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 4ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆரம்பத்தில் ஒரு ஆணும் பெண்ணும் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றைக் கொள்வனவு செய்யப் போவதாகக் கூறி குறித்த வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்துள்ளனர். அதற்காக 45,000 ரூபா பணத்தை காசாளரிடம் வழங்கியுள்ளனர். தொலைக்காட்சியைப் பரிசோதிப்பதில் ஏற்பட்ட சிறிய தாமதத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அவர்கள், ஊழியர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் தாம் வழங்கிய பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர். வெளியேறிய சில நிமிடங்களிலேயே, அந்த ஆணும் பெண்ணும் மேலும் பல ஆண்களையும் பெண்களையும் (மொத்தம் 10 பேர், இதில் 6 பேர் பெண்கள்) அழைத்துக்கொண்டு மீண்டும் கடைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இரும்புத் தடிகள்…