Author: Thana

கைக்கடிகார மின்கலத்தை (Button Battery) விழுங்கிய 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு! காலி: கைக்கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் சிறிய ‘பட்டன்’ மின்கலத்தை (Button Battery) தெரியாமல் விழுங்கிய 7 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெலிகம, படவல பகுதியைச் சேர்ந்த நேஹான் தசங்க டி சில்வா என்ற 7 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவனாவான். இவன் தலாரம்ப இந்தசார வித்தியாலயத்தில் தரம் 3-இல் கல்வி கற்று வந்தான். வீட்டில் வீசப்பட்டிருந்த சிறிய மின்கலத்தை அச்சிறுவன் தெரியாமல் விழுங்கிய நிலையில், எக்ஸ்-ரே (X-Ray) பரிசோதனையின் மூலம் அது உறுதி செய்யப்பட்டது. பின்னர், மாத்தறை பொது வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக சிறுவன் கராபிட்டிய தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டான். வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் மின்கலம் அகற்றப்பட்டது. இரண்டு நாட்கள் சிகிச்சையின் பின் சிறுவன் வீடு திரும்பிய போதிலும், அவனுக்கு முதுகு…

Read More

லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 5 கிலோகிராம் லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயுவின் விலை 220 ரூபாவினால் அதிகரித்து 2,500 ரூபாவாக விற்கப்படவுள்ளது. 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயுவின் விலை 545 ரூபாவினால் அதிகரித்து 6,245 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

Read More

நோர்வூட் நகரில் புதிதாகத் திறக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் மதுபான சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (06) நகரின் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு பாரிய கடையடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நகர வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டத்தின் அடையாளமாக, நகரின் வர்த்தக நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ளன. மதுபானசாலை திறக்கப்படுவதால் அப்பகுதியின் அமைதி சீர்குலையும் எனவும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் எனவும் போராட்டக்காரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த மதுபான சாலைக்கு நகர வர்த்தகர்கள் மட்டுமன்றி, பிரதேசவாசிகளும் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். “தமது நகருக்குத் தேவையற்ற இத்தகைய மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கியமை கண்டிக்கத்தக்கது” எனப் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடையடைப்பு காரணமாக நோர்வூட் நகரின் அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன், போக்குவரத்துப் பாதைகளிலும் போராட்டத்தின் தாக்கம் உணரப்பட்டது. உரிய அதிகாரிகள் இந்த விடயத்தில் தலையிட்டு, மக்களின் விருப்பத்திற்கு மாறாகத் திறக்கப்படவுள்ள இந்த மதுபானசாலையைத் தடுத்து நிறுத்த…

Read More

தனது கள்ளக்காதலன் மகளைத் துஷ்பிரயோகம் செய்தமையை மறைத்த மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட தாய், எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பதவிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இந்தச் சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரால், சிறுமி நீண்டகாலமாகத் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அப்பகுதி குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் உடனடியாகப் பொலிஸாருக்குப் புகாரளித்தனர். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றத்தைச் செய்ததாகக் கருதப்படும் நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அவரைப் பிடிப்பதற்காகப் பொலிஸார் விசேட விசாரணைக் குழுக்களை அமைத்துத் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தன் மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தடுத்து நிறுத்தாமல், அதனை மறைக்க முயன்ற…

Read More

2025/2026 கல்வியாண்டிற்காக அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள், 2026 செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (06) பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள்  வெளியிடப்பட்டதன் பின்னர், அனைத்து மாணவர் பதிவுப் பட்டியல்களையும் 2026 ஓகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி, 2026 செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கான குறிப்பிட்ட திகதிகளை அந்தந்தப் பல்கலைக்கழகங்களே தீர்மானிக்க முடியும் என்றும் அவர் கூறினார். இதேவேளை, இம்முறை 2025/2026 கல்வியாண்டிற்காக இரண்டு புதிய பட்டப் பாடநெறிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, ருஹுணு பல்கலைக்கழகத்தில் ‘புவியியல் தகவல் அமைப்பு’ (Geographic Information Systems) பாடநெறிக்காக 50 மாணவர்களும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ‘இலத்திரனியல் மற்றும் புத்திசார் அமைப்பு…

Read More

அஸ்வெசும திட்டத்தில் ரூ. 5,000 இலட்சம் முறைகேடு? – சபாநாயகருக்கு ‘சுதந்திர சட்டத்தரணிகள்’ அமைப்பு அவசர கடிதம்!  நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) ஊடாக அஸ்வெசும பயனாளிகளுக்கு 5,000 இலட்சம் ரூபாவிற்கும் (500 மில்லியன்) அதிகமான தொகை மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து நாடாளுமன்றம் ஊடாக உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என ‘சுதந்திர சட்டத்தரணிகள்’ (Free Lawyers) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அதிகாரப் பகிர்வு மற்றும் சமநிலைப்படுத்தல் முறையின்றி (Checks and Balances) அரச நிதியைக் கையாள்வது பாரிய குற்றமாகும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அரசியலமைப்பின் 148 ஆவது உறுப்புரையின் படி, அரச நிதி தொடர்பான முழுமையான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி 10 முக்கிய வினாக்களுக்கு விடை காணுமாறு அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றம் பதிலளிக்க வேண்டிய 10 முக்கிய வினாக்கள்: இரட்டைக் கொடுப்பனவுகள்: ஏப்ரல்…

Read More

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக – காங்கிரஸ் கூட்டணி இன்று அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக திமுகவுடன் இணக்கமான உறவை பேணி வந்த காங்கிரஸ், தற்போது அந்த உறவை முறித்துக்கொண்டுள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, காங்கிரஸ் இத்தகைய முடிவை எடுக்கக்கூடும் எனத் தகவல்கள் கசிந்தபோதே, திமுக தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது உண்மையாகியுள்ளது. த.வெ.க.விற்கு காங்கிரஸ் ஆதரவு: முக்கிய அம்சங்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்: எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: இந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 5 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் த.வெ.க.விற்கு ஆதரவு தெரிவித்து கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். முக்கிய நிபந்தனை:…

Read More

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று (06) நடைபெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று காலை 08.30 மணி முதல் மாலை 03.00 மணி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வாய்மூலக் கருத்துக்கேட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டின் 2 ஆம் மற்றும் 3 ஆம் காலாண்டுகளுக்காக நேஷனல் சிஸ்டம் ஆப்பரேட்டர் (தனியார்) நிறுவனத்தினால் முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இவ்வாறு பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணம் தொடர்பான தீர்மானம் மே மாதம் 9 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு இலங்கை ஜனாதிபதியால் விசேட இராப்போசன விருந்துபசாரம் – முகமது முய்சுவின் விஜயத்துடன் இலங்கை – மாலைதீவு இடையிலான நெருங்கிய நட்புறவு மேலும் பலமடையும் – இலங்கை ஜனாதிபதி ஒவ்வொரு காலகட்டத்திலும் இலங்கை தனது நிலையான நட்புக்கரத்தை மாலைதீவை நோக்கி நீட்டியுள்ளது – மாலைதீவு ஜனாதிபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மாலைதீவு குடியரசின் ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவுக்கு (Dr Mohamed Muizzu) கௌரவம் அளிக்கும் வகையில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட விசேட இராப்போசன விருந்து உபசாரம் (04) கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த மாலைதீவு குடியரசின் ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மற்றும் முதற்பெண்மணி சஜிதா முகமது ஆகியோருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையே…

Read More

நாட்டை சூழவுள்ள அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும் அதனுடன் இணைந்ததாக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலையும் காரணமாக, இன்று (06) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் மழை நிலைமை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் மேகமூட்டமான வானிலை காணப்படுவதுடன், காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம்…

Read More