Author: Thana
இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான ஏற்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதிய (IMF) செயற்குழுவின் அனுமதி குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றியுள்ளார். அவ்வுரையில் ஜனாதிபதி பின்வரும் விடயங்களை குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடனான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான இணக்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) நேற்று அனுமதி வழங்கியது. இதன் மூலம் எமது கடன்களை மறுசீரமைத்துக் கொள்வதற்கான சக்தி எமக்குள்ளது என்பதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இலங்கை வங்குரோத்து நாடு என்ற நிலை இனி இருக்காது. இதனால் வழமையான கொடுக்கல் வாங்கல்களை மீண்டும் ஆரம்பிக்க முடியும். அதேபோல் எமது வெளிநாட்டு அந்நியச் செலாவணி அதிகரிக்க அதிகரிக்க எமது இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை கிரமமாக நீக்க முடியும். அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள், சுற்றலாத்துறைக்குத் தேவைாயன பொருட்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான அனுமதி முதல் சுற்றில் வழங்கப்படும். இந்த இணக்கத்திற்கு அமைய நாம் இங்கிருந்து முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். எமக்கு…
இலங்கையிலுள்ள 32 சதவீதனமான குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்றவை என்று 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்கான உணவுத் திட்டத்தின் வீட்டு உணவுப் பாதுகாப்பு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 82 சதவீதமான இலங்கைக் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத் தமது தொழிலுக்கு மேலதிகமாக வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. இலங்கையில் உள்ள 48 சதவீதமான குடும்பங்கள் நிதி நிறுவனம் அல்லது கடனாளிகளிடமிருந்து கடன் பெற்றுள்ளனர் அல்லது தமது குடும்பத்தின் உணவுத் தேவைக்காக குடும்பம் வைத்திருந்த தங்க ஆபரணங்களை அடகு வைத்து பணத்தை பெற்றுள்ளனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி மாத இறுதியில் ஊவா மாகாணத்தில் அதிக உணவுப் பற்றாக்குறை காணப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஊவா மாகாணத்தில் கடந்த டிசெம்பரில் 43 சதவீதமாக இருந்த உணவுப் பற்றாக்குறை ஜனவரி மாத இறுதிக்குள் 47 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நன்றி தமிழ் மிரர்
எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் ஆங்கில பேச்சு மொழியை கற்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஆங்கில மொழியின் சிறப்பு மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், தரம் 6 முதல் 9 மற்றும் 10 முதல் 13 வரையான அனைத்து பாடசாலை பாடத்திட்டங்களையும் சர்வதேச மட்டத்துக்கு கொண்டு வருவதற்கு தேவையான மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். இதற்கான முன்னோடித் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஹோல்புறூக் நகரத்தில் Copricorn சர்வதேச பாடசாலை ஆரம்ப நிகழ்வு 18.03.2023 அன்று பாடசாலையின் அதிபர் ஜெயஷக்திவாணியின் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் அக்கரப்பத்தனை பொலீஸ் நிலையத்தின் தலைமை அதிகாரி மற்றும் மத குருமார்கள் , அக்கரப்பத்தனை பிரதேசத்தின் பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் வைத்தியர்கள், நகர வர்த்தகர்கள், பெற்றார்கள் ,மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். குறித்த ஆரம்ப விழாவானது அக்கரப்பத்தனை பொலீஸ் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அதே வேளை நிகழ்வினில் முதலாவது அம்சமாக அதிதிகளை வரவேற்கும் நிகழ்வானது இடம்பெற்றது. இந் நிகழ்வினூடாக அதிதிகள் வாத்திய கருவிகள் இசைக்கப்பட்டு நிகழ்விடத்திற்கு அழைத்துவரப்பட்டார்கள். தொடர்ந்து தேசிய கொடியினை அக்கரப்பத்தனை பொலீஸ் பொறுப்பதிகாரி ஏற்றி வைத்ததோடு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து பாடசாலையின் கொடியினை பாடசாலையின் அதிபர் மற்றும் நிர்வாக குழு தலைவர் ஆகியோர் இணைந்து ஏற்றி வைத்தனர்.அதனை தொடர்ந்து பாடசாலை கீதமானது இசைக்கப்பட்டு, மங்கள குத்து விளக்கேற்றும்…
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் வட்டுக்கோட்டை, சங்கரத்தை அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில் சங்கரத்தை இருந்தருளும் மாமணியே தஞ்சமென்று உன்னடியே சரணடைந்தோம் அஞ்சவரும் தீமைகளைத் தடுத்திடம்மா நம்பியுன்னை இறைஞ்சுகின்றோம் உடனிருப்பாய் காளியம்மா எங்கும் நிறைந்தருளும் மாமணியே வரம் கேட்டு உன்னடியே சரணடைந்தோம் வஞ்சனைகள் அண்டாது தடுத்திடம்மா நம்பியுன்னை இறைஞ்சுகின்றோம் உடனிருப்பாய் காளியம்மா தங்கத் திருவுருவைக் கொண்டவளே மாமணியே பங்கமில்லா உன்னடியே சரணடைந்தோம் பஞ்சநிலை அண்டாது தடுத்திடம்மா நம்பியுன்னை இறைஞ்சுகின்றோம் உடனிருப்பாய் காளியம்மா வயல்வெளியின் மத்தியிலே கோயில் கொண்ட மாமணியே பயம் போக்க உன்னடியே சரணடைந்தோம் நெஞ்சமதில் நிம்மதியைத் தந்திடம்மா நம்பியுன்னை இறைஞ்சுகின்றோம் உடனிருப்பாய் காளியம்மா பத்திரகாளி அம்மனென்ற பெயர் பூண்ட மாமணியே பாசமுடன் உன்னடியே சரணடைந்தோம் நேசமுடன் வாழும் வழி தந்திடம்மா நம்பியுன்னை இறைஞ்சுகின்றோம் உடனிருப்பாய் காளியம்மா கேட்டவரம் தந்தருளும் மாமணியே கேடுகளைத் தடுத்திடவே உன்னடியே சரணடைந்தோம் கலக்கமில்லா மனம் கொண்டு வாழும் வழி தந்திடம்மா நம்பியுன்னை இறைஞ்சுகின்றோம் உடனிருப்பாய் காளியம்மா. ஆக்கம்-…
IPL – இந்தியன் பீரிமியர் லீக் 2023 தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக யாழ் மண்ணில் இருந்து விஜயகாந் வியாஸ்காந்த் இணையவுள்ளார். கிரிக்கட்டில் பல சாதனைகளை படைத்துவரும் வியாஸ்காந்த் இப்பருவத்திற்கான இந்தியன் பீரிமியர் லீக் 2023 தொடரானது அவருக்கான ஓர் அடையளத்தை வழங்கும் என்பததோடு, மலையகம்.lk சார்பாக வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றோம்.
முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க அகில இலங்கை முச்சக்கர வண்டி சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, முதல் கிலோமீட்டருக்கான 120 ரூபா கட்டணத்தை 100 ரூபாவாக குறைக்க தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கு நீடிக்கப்பட்ட நிதி வசதி உதவியை பெற்றுக் கொடுப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதியை வழங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக, இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி வழங்கும் அமைப்புகள் மற்றும் பரஸ்பர உதவியளிக்கும் அமைப்புகளிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, நாட்டில் பெரும்பொருளாதார உறுதித் தன்மையை மீள நிலைநாட்டவும், கடன் மீளச் செலுத்தக்கூடிய உறுதித் தன்மையையும் எய்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கும் நிலையில், இலங்கையைப் பொறுத்தமட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளது. இதனூடாக பொருளாதாரத்தை பல சவால்களிலிருந்து மீட்டு, சகல பங்காளர்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும்.
கண்டி – மஹியங்கனை வீதியின் 18 வளைவு பகுதி மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது. மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தவீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, காலி மாவட்டத்தில் பதுளை மாவட்டம், ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 2 ஆம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், காலி மாவட்டத்தின் நாகொட மற்றும் பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுகளும் மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல, ரத்தோட்டை, வில்கமுவ மற்றும் நாவுல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 1 ஆம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நாளை (21) இரவு 8.30 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.