Author: Thana
தென்மாகாணம்- காலி மாவட்டம்- காலி மாநகரம், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மீனாட்சி அம்மையுடன் வீற்றிருக்கும் சிவனே மீட்சி தந்து ஆட்சி செய்ய வரவேண்டும் ஐயா கேட்கும் வரம் தந்தெமக்கு நல்வாழ்வைத் தருவாய் காலிமாநகர் கோயில் கொண்ட சுந்தரேசுவரப் பெருமானே அருள்வாய் தென்னிலங்கைக் கரையினிலே காட்சி தரும் சிவனே தெளிவான மனநிலையை உறுதிசெய்ய வரவேண்டும் ஐயா தொல்லையில்லா நல்வாழ்வை எமக்கென்றும் தருவாய் காலிமாநகர் கோயில் கொண்ட சுந்தரேசுவரப் பெருமானே அருள்வாய் அழகுமிகு திருக்கோயில் கொண்டுறையும் சிவனே அச்சமில்லா நிம்மதியைத் தர வரவேண்டும் ஐயா அரவணைப்பைத் தந்தெமக்கு நல்வாழ்வைத் தருவாய் காலிமாநகர் கோயில் கொண்ட சுந்தரேசுவரப் பெருமானே அருள்வாய் தமிழ் வளர்த்த பாண்டியரின் இலச்சினையை கொண்டவனே சிவனே தளர்வில்லா மனவுறுதி தர வரவேண்டும் ஐயா திடமான மனநிலையைத் தந்தெமக்கு நல்வாழ்வைத் தருவாய் காலிமாநகர் கோயில் கொண்ட சுந்தரேசுவரப் பெருமானே அருள்வாய் தக்கனின் கொட்டத்தை அடக்கி அருள் செய்த சிவனே தவறில்லா வாழ்வு தர…
இறக்குவானையிலுள்ள தமிழ் பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மாணவனையும் பொலிஸார் தமது கட்டுப்பாட்டில் அழைத்துச் சென்றுள்ளனர். பாடசாலையில் இரு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகறாரை குறித்த ஆசிரியர் விலக்க முற்பட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன்போது, தகறாரில் ஈடுபட்ட மாணவன் ஒருவன் தனது தந்தையை அழைத்து வந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும், மாணவனும் சேர்ந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, இன்று காலை குறித்த பாடசாலையில் ஆசிரியர்கள் வரவு ஆவணப் புத்தகத்தில் கையொப்பமிடாமல் ஆசிரியர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்தே தாக்குதல் நடத்திய தந்தை கைது செய்யப்பட்டதுடன், மாணவனை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தாக்குதல் நடத்திய தந்தைக்கு எதிராக நடடவடிக்கை எடுப்பதுடன், குறித்த மாணவனை உடனடியாக பாடசாலையை விட்டு நீக்குமாறும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நுவரெலியா, லபுக்கலை பகுதியில் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று(21) செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். நுவரெலியா, கந்தப்பளை, ஐபோரஸ்ட் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் திருச்செல்வம் (வயது – 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்துக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறியொன்று கடந்த 5 ஆம் திகதி லபுக்கலை பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 14 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
வரும் ஏப்ரல் மாதமளவில் எரிபொருள் விலை தொடர்பில் மக்கள் நிம்மதி அடைவார்கள் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார். மேலும், டிசம்பர் மாதம் மின்கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இதேவேளை, கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. மேலும் ரூபாயின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது. எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி எனக்கு ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளார். அந்தச் சலுகைகளை வழங்குகிறோம் என்றார்
சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கிலத்தில் நடத்துவது தொடர்பான யோசனை நாடாளுமன்றில் 113 வாக்குகளால் தோற்கடிப்பு.
சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கில மொழியில் நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பெரும்பான்மை வாக்குகளால் இன்று (21) நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது, அதற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.இந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு வாக்கெடுப்பு தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரினார். அதன்படி வாக்கெடுப்பு நடைபெற்றது.அதில் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக 113 வாக்குகளும் ஆதரவாக ஒரு வாக்கும் பதிவாகியிருந்தன.இதில் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி மாத்திரம் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையினால் பாதிக்கப்பட்டது. எனினும் இதன்போது பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. ஒரு அணிக்கு எதிராக பங்களாதேஷ் அணியால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனை நேற்று படைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் 6 விக்கட்டுகளை இழந்து 349 ஓட்டங்களைப் பெற்றது. இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் 338 ஓட்டங்களைப் பெற்ற பங்களாதேஷ் அந்த சாதனையை அடுத்தப்போட்டியில் தகர்த்துள்ளது. போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஸ்பிகர் ரஹ்மான், பங்களாதேஷ் அணி சார்பாக அதிகுறைந்த பந்துகளில் 100 ஓட்டங்களைக் கடந்தவர் என்ற சாதனையைப் படைத்தார். அவர் 60 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்ததன் மூலம், 63 பந்துகளில் 2009ம் ஆண்டு சக்கில் அல் ஹசன் படைத்த சாதனையை முறியடித்தார். அதேவேளை முஸ்பிக்கர் ரஹீம் 7000 ஓட்டங்களையும் கடந்தார். இதன்படி பங்களாதேஷ் சார்பில் 7000 ஓட்டங்களைக் கடந்த மூன்றாவது துடுப்பாட்டக்காரராக அவர் உள்ளார். சகிப்…
ஹபுகஸ்தலாவை அல்மின் ஹாஜ் தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று அண்மையில் இடம்பெற்றது. 2010 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் அல்மின் ஹாட் தேசிய பாடசாலையில் கற்பித்து இன்றைய தினம் ஓய்வில் அல்லது பிரிதொரு பாடசாலையில் ஆசிரியர்களாக கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி பாராட்டும் நிகழ்வென்று கடந்த வாரம் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 2015ம் ஆண்டு சாதாரண தரத்தில் கற்றுவெளியாகிய மாணவ மாணவியர்களின்குறுகிய கால ஏற்பாட்டிலும் சிந்தனையாலும் மேற்படி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதுடன் மிகவும் வெற்றிக்கரமாக நிறைவு அடைந்தது. மொஹமட் சல்மான்
பசறை பகுதியில் உந்துருளியும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 19 வயதுடைய கலபொட பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பசறை மொனராகலை வீதி தொழும்புவத்தை 3 ஆம் கட்டைப் பகுதியில் பசறையில் இருந்து மொனராகலை நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்றும், மொனராகலையில் இருந்து பசறை நோக்கி வந்து கொண்டுயிருந்ந உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் உந்துருளி செலுத்தி சென்ற 19 வயதுடைய மீதும் பிடி கலபொட பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உந்துருளியில் பின்னால் அமர்ந்து பயணித்த குறித்த இளைஞரின் தந்தை (வயது 50) பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். மரணித்த 19 வயதுடைய இளைஞரின் சடலம் பசறை வைத்தியசாலை…
வெல்லவாய பிரரேசத்திலுள்ள எல்லேவெல நீர்வீழ்ச்சிக்குக் குளிக்கச் சென்ற இளைஞர்கள் நால்வர் இன்று காலை காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞர்கள் நால்வரும் நீர்வீழ்ச்சிக்கு குழுவாக சேர்ந்து சுற்றுலாப்பயணம் சென்றதாக தெரிய வருகிறது. காணாமல் போன 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த பகுதிக்கு குறித்த இளைஞர்கள் நீராட சென்றதாக தெரிய வந்துள்ளது. அங்கிருந்த குடியிருப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்தும் அதைப் பொருட்படுத்தாமல் அந்த இளைஞர்கள் ஆபத்தான பகுதியில் குளித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் மீட்புப் பணியாளர்களும் பிரதேசவாசிகளும் காணாமல் போன இளைஞர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஐயோரா பணிக்குழுவின் மூன்றாவது கூட்டத்தை இலங்கை முன்னெடுப்பு.
இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் (ஐயோரா) கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான செயற்குழுவின் மூன்றாவது கூட்டம் இலங்கையின் தலைமையில் 2023 மார்ச் 20ஆந் திகதி 23 ஐயோரா உறுப்பு நாடுகளின் பங்கேற்புடன் கொழும்பில் நடைபெற்றது. ஐயோரா செயலகத்தின் பொதுச் செயலாளர் சல்மான் அல் ஃபரிசி மற்றும் செயலகத்தின் பிரதிநிதிகள் மொரிஷியஸில் உள்ள ஐயோரா செயலகத்தில் இருந்து இணையவழி மெய்நிகர் முறையில் பங்கேற்றனர். கூட்டத்தை ஆரம்பித்து வைத்த வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு மன்றமாக ஐயோராவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்புத் துறையில், கொழும்பு பணிக்குழுவில் கலந்துரையாடப்பட்ட தலைப்பில், இந்து சமுத்திரத்தின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தின் கீழ், சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் ஒப்புக் கொள்ளப்பட்ட கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்புக்கள் குறித்து ஐயோரா உறுப்பு நாடுகளுக்கு விழிப்புணர்வு அவசியம் என வெளியுறவுச் செயலாளர் விஜேவர்தன குறிப்பிட்டார். இந்து…