Author: Thana
நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல வந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் வெலிமடையில் இடம்பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை வெலிமடை நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றில் சாட்சி சொல்வதற்காக கம்பளையில் இருந்து 62 வயதுடைய முதியவர் ஒருவர் வந்துள்ளார். இந்நிலையில் குறித்த முதியவர் வெலிமடை நீதிமன்ற உன்நுழையும் நுழைவாயில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வெலிமடை வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது குறித்த முதியவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிமடை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வெலிமடை பொலிஸ்நிலைய உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ராமு தனராஜா
பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்பிரிங்வேலி தோட்டம் நாவல பிரிவில் வசிக்கும் பத்தேகம வித்தியாலயத்தில் தரம் 11 கல்வி கற்கும் விவேகானந்தன் ரகுமான் என்ற மாணவனை கடந்த மாதம் 15 திகதி முதல் காணவில்லை என்று மாணவனின் தந்தையினால் பதுளை பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது காணாமல் போன மாணவன் கடந்த மாதம் 15 திகதி மேலதிக வகுப்புக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்று இது வரை வீடு திரும்பவில்லை. மாணவனை தேடும் பணியில் உறவினர்கள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் ராமு தனராஜா
சர்வதேச நாணய நிதியத்திலிருந்து நான்கு வருடங்களில்,03 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாடு பெற்றுக்கொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயத்தின் நிதி குறித்து சில பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் தொடர்பில், நிதி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.. ரூவன்வெல்ல பிரதேசத்தில் (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவிக்கையில், இலங்கை ஏனை நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வதற்கு இந்த நிறுவனம் வழங்கும் தரச்சான்றிதழ் மிக முக்கியமானது. ஏனைய நிதி நிறுவனங்களில் இலங்கை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்ப இது பெரும் உறுதுணையாக இருக்கும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சிறுநீரக வைத்தியர் அனுர ஹேவகீகன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.விவசாய பிரதேசங்களில் பதிவாகும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், விவசாய உற்பத்திகளுக்கு பயன்டுத்தப்படும் இரசாயனங்களே இதற்கான காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
பூண்டுலோயாவிலிருந்து டன்சினன் வழியாக நுவரெலியா செல்லும் பிரதான பாதையை வெகுவிரைவில் புனரமைத்து தருமாறு வலியுறுத்தி பாரிய ஆரப்பாட்டம்
(அந்துவன்) பூண்டுலோயாவிலிருந்து டன்சினன் வழியாக நுவரெலியா செல்லும் பிரதான பாதையை வெகுவிரைவில் புனரமைத்து தருமாறு வலியுறுத்தி, சுமார் 12 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்து (12) பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். எதிர்ப்பு வசனங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவண்ணம், கோஷங்களை எழுப்பியவாறும், கறுப்பு கொடிகளை தாங்கியவாறும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பூண்டுலோயா, கிகிலியாமான 3ஆம் கட்டை பகுதியிலிருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி, டன்சினன் காந்திபுரம், டன்சினன் மத்திய பிரிவு, டன்சினன் கீழ்பிரிவு, சீன் கீழ்பிரிவு ஊடாக பூண்டுலோயா பஸ் தரிப்பிடத்தை வந்தடைந்தது. அதன்பின் அங்கு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு, போராட்ட ஏற்பாட்டுக்குழுவால் ஊடக சந்திப்பொன்றும் நடத்தப்பட்டது. 12 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள், டன்சினன் பாதையின் விடியலுக்காக முன்னெடுக்கப்பட்ட பேரணிக்கு முழு ஆதரவையும் வழங்கினர். மதகுருமார்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். அத்தோடு, பூண்டுலோயா நகரங்களில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.
(அந்துவன்) பெண்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும், அரசியல் உட்பட அனைத்து விதமான உரிமைகளும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா – இராகலையில் (12.03.2023) ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கண்டி சமூக அபிவிருத்தி ஸ்தாபனம், ராகலை நகர் பெண் சிவில் அமைப்புகள் மற்றும் பெருந்தோட்ட பெண் தொழிலாளர்கள் இணைந்தே இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இராகலை நடுக்கணக்கு தோட்ட பிரிவிலிருந்து ஆரம்பமான பேரணி, ராகலை நகர் வரைவந்து, அங்கு கூட்டம் நடத்தப்பட்டது. தமது கோரிக்கைகளை முன்வைத்து பதாதைகளை தாங்கியபடியும், கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியில் பங்கேற்றோர் நகரை நோக்கி வந்தனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில்சார் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இதன்போது விசேடமாக வலியுறுத்தப்பட்டது. அதேபோல பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது. வீட்டுப்பணிப்பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் காத்திரமான நடவடிக்கைகள் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டது.
(அந்துவன்) வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் கடைகளில் வேலைசெய்யும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறையொன்றை வலியுறுத்தி தலவாக்கலையில் (12.03.2023) ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடைபெற்றது. வீட்டுப்பணிப்பெண்கள் மற்றும் கடைகளில் வேலைசெய்யும் பெண்கள் அதிகம் அங்கம் வகிக்கும் அமைப்பான ப்ரொடெக்ட் .அமைப்பின் ஆல் குறித்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தலவாக்கலை கதிரேசன் ஆலயத்திற்கு முன்னால் ஆரம்பமான இப்பேரணி பேருந்து நிலையம் வரை சென்றடைந்தது. தற்போதைய பொருளாதார நெருக்கடியால் வீட்டுப்பணிப்பெண்களும், கடைகளில் வேலை செய்யும் பெண்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்ப்பதற்கான பொறிமுறையே அவசியம் என போராட்டத்தில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.
டி சந்ரு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதல் முறையாக கெலனிவெலி பெருந்தோட்டத்தில் ரொக்கீல் கோணக்கலை தோட்டத்தில் (12/03/23) ஞாயிற்றுக்கிழமை மனிதவள அபிவிருத்தி குழுவின் ஆலோசனை படி தோட்ட முகாமைத்துவ உதவியுடன் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் தோட்ட அதிகாரிகள், மகளிர் பிரிவு உத்தியோகத்தர்கள், தோட்ட வைத்தியர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
(அந்துவன்) அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கை மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (13) காலை 8 மணிமுதல் (14) காலை 8 மணிவரை ஆரம்பித்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக டிக்கோயா ஆதார வைத்தியசாலை மற்றும் பொகவந்தலாவ, மஸ்கெலியா, நுவரெலியா ஆகிய வைத்தியசாலைகளும் வெறிச்சோடியிருந்தன. வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பை அறிந்த பெருந்தொகையான நோயாளர்கள் முன்கூட்டியே வைத்தியசாலைகளுக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொண்ட அதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பை அறியாத நோயாளர்கள் சிகிச்சை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதையும் காணக்கூடியதாக இருந்தது. வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை மட்டுமே வழங்கப்படும் என வைத்தியர்கள் தெரிவித்தனர். அத்தோடு, வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மலையகத்திற்கான தனி வீட்டு திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான உடன்படிக்கை
நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்தியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தில் ஒரு வீட்டுக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபா ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு சுமார் 28 லட்சம் ரூபா அவசியம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 4 ஆயிரம் தனி வீட்டு திட்டத்தை முழுமைப்படுத்துவதற்காக, அத்திட்டத்தில் எஞ்சியுள்ள வீடுகளை புதிய மதிப்பீட்டு விலையின்கீழ் நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை (13.03.2023) கைச்சாத்திடப்பட்டது. இதற்கான நிகழ்வு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையில் இந்திய இல்லத்தில் (13.03.2023) நடைபெற்றது. இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர்…