Author: Thana
(அந்துவன்) சிறார்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதை தடுப்பது சம்பந்தமாகவும், பெருந்தோட்ட சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் (03) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே, அவர் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார். சிறார்களை இலக்கு வைத்து சந்தையில் ஒரு வகையான பாக்கு இருப்பதாகவும், அது போதைப்பொருளாக குறிப்பிடப்படாவிட்டாலும், சிறார்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க கூடியது என பொலிஸ் அதிகாரி ஒருவர் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை இதுவரை 43 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி…
துருக்கி, சிரியாவை தொடர்ந்து தற்போது நிலநடுக்கங்கள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் நேற்று திடீரென்று பூமி குலுங்கி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.9 என பதிவானதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். துருக்கி, சிரியா ஆகியவை அண்டை நாடுகளாக உள்ளன. இந்நிலையில் தான் கடந்த மாதம் 6 ம் திகதி துருக்கியின் காசியான்டெப் நகரில் தொடர்ந்து 3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதில் துருக்கி, சிரியா ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. இருநாடுகளிலும் பல ஆயிரம் கட்டடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் விழுந்தன. பல ஆயிரம் பேர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதையடுத்து உலக நாடுகள் அனைத்தும் உதவிக்கரம் நீட்டின. துருக்கி, சிரியாவை தொடர்ந்து நாட்டின் பல இடங்களிலும் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவிலும் மலைப்பகுதியையொட்டி மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நிலநடுக்கம்…
புஸ்ஸல்லாவ சோகமாவத்த பிரதேசத்தில் உள்ள தேயிலை மலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 119 பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலின் படி சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பெண் ஹெல்பொட, கட்டுகிதுல பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய திருமணமான பெண் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது கொலையா, தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் ஏற்பட்ட மரணமா என்பது தொடர்பில் புஸ்ஸல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம், திருகோணமலை அருள்மிகு திருக்கோணேசுவரம் சிவன் திருக்கோயில் திருமலையில் கோயில் கொண்டு எமையாளும் பெருமானே திக்கெட்டும் நலம் பெறவே வாழ்வளிப்பாய் அருள்மதியே நம்பியுந்தன் தாள் பணியும் எமை என்றும் காத்தருள்வாய் திருகோணமாமலை யமர்ந்த கோணேசுவரப் பெருமானே அலைகடலின் மருங்கிருந்து அருள் வழங்கும் பெருமானே அன்பு நிறை மனத்தினராய் நாம் வாழ வாழ்வளிப்பாய் அருள்மதியே சரண் அடைந்து உன்பாதம் பணியுமெம்மைக் காத்தருள்வாய் திருகோணமாமலை யமர்ந்த கோணேசுவரப் பெருமானே கிழக்கிலங்கை கரையினிலே காட்சி தரும் பெருமானே கிலேசமின்றி வாழும் நல்ல வாழ்வளிப்பாய் அருள் மதியே குறைகளைந்து நிறைவளித்து எமைக் காத்தருள்வாய் திருகோணமாமலை யமர்ந்த கோணேசுவரப் பெருமானே மாதுமை அம்மை உடன் கொண்டு உறைகின்ற பெருமானே மாநிலத்தில் மாண்புடனே வாழும் நல்ல வழியமைப்பாய் அருள்மதியே முனேற்ற வழி திறந்து எமை என்றும் காத்தருள்வாய் திருகோணமாமலை யமர்ந்த கோணேசுவரப் பெருமானே இராவணேஸ்வரன் பூசையினால் பெருமை பெற்ற பெருமானே இவ்வுலகில் இனிய நல்ல வாழ்வளிப்பாய்…
தலவாக்கலை நகரில் இன்று (04/03/23) தலவாக்கலை, கொட்டகலை சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை முன்னெடுத்திருந்தனர். இதன் போது உணவு சட்டத்தை மீரியோருக்கு நுவரெலிய நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக சுகாதர அதிகாரி தெரிவித்தார். மேலும் எதிர்வரும் புதுவருடத் காலத்திலும் இவ்வாறு திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவரும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிடரத்மலை மேல் பிரிவின் லயன் குடியிருப்பில் நேற்று இரவு ஏற்பட்ட மின் கசிவினால் வீடொன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. இவ்வனர்த்தத்தினால் வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களும் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா
குத்துச்சண்டை போட்டியில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை. நுவரெலியா கல்வி வலயத்துக்குள் நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் பங்கேற்று வெற்றிகளை பெற்று நுவரெலியா வலயத்தில் இரண்டாம் இடத்தை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். (A.திரிதேவ் ~8D,G.அட்சயன் 8C,M,டிலுக்சன்,Y,டிலுக்சன்,T.விஷ்வனி 9A தங்க பதக்கத்தையும் (1, T.அனோஐன் 10B) வெள்ளி பதக்கத்தையும் (2,🥉 ) s.கபிலன் 11A, M.மதுஷா 8C வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளனர். மேலும் போட்டியில் பங்கேற்றி சான்றிதழ் பெற்ற மாணவர்கள் T.பிரவின்சன் 8B T.அபிநயன் 8A T.சன்ஷிக்கா 9C ஆகிய மாணவர்கள் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பாடசாலை அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டம்
கடந்த ஜனவரி 20ம் திகதி நானுஓயா – ரதெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 53 பேர் படுகாயமடைந்திருந்தனர். இதில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க ஆசிரியர்கள் மாணவர்களிடம் சேர்க்கப்பட்ட 14 லட்சம் நிதி உதவி இன்று வழங்கப்பட்டது .இதில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்கினர் , இதில் வைத்திய சாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமியின் வங்கி கணக்கில் கல்லூரியில் காப்புறுதி திட்டம் ஊடாக 8 லட்சம் ரூபாய் வைப்பிலிடப்பட்டது மற்றும் இறந்தவர்களின் திதி கொடுப்பதற்கான செலவினையும் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது . குறித்த நிகழ்வு நேற்று 03/03/23 வெள்ளிக்கிழமை நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலாளர் நந்தன கலபொட , நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் , பொலிஸ் நிலைய அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்களும்…
மேல்மாகாணம்- கொழும்பு மாவட்டம், கொழும்பு மாநகரம் மருதானை கப்பித்தாவத்தை அருள்மிகு கைலாசநாத சுவாமி சிவன் திருக்கோயில் மும்மூர்த்திகளில் முதல்வனாய் வீற்றிருக்கும் சிவனே ஐந்தொழில்கள் ஆற்றி உலகை ஆளுகின்ற பேரருளே உள்ளத்தில் உறைந்திருந்து எமைக்காக்க வேண்டுமைய்யா கப்பித்தாவத்தை கோயில் கொண்ட கைலாசநாதரே சரணம்ஐயா தென்திசையில் வீற்றிருந்து அருள்பொழியும் சிவனே தெவிட்டாத நல்லுறவை அருளுகின்ற பேரருளே தெளிவான மனநிலையை எமைக்காக்க வேண்டுமைய்யா கப்பித்தாவத்தை கோயில் கொண்ட கைலாசநாதரே சரணம்ஐயா கங்கை அம்மை முடிகொண்டு உலகாளும் சிவனே காவல் செய்து உயிரினங்கள் ஆளுகின்ற பேரருளே சிந்தையிலே நிறைந்திருந்து எமைக்காக்க வேண்டுமைய்யா கப்பித்தாவத்தை கோயில் கொண்ட கைலாசநாதரே சரணம்ஐயா தொன்மைமிகு அறநெறியின் நாயகனே சிவனே தொய்வின்றி வாழும் வழி காட்டுகின்ற போரருளே உதிரத்தில் நீயிருந்து எமைக்காக்க வேண்டுமைய்யா கப்பித்தாவத்தை கோயில் கொண்ட கைலாசநாதரே சரணம்ஐயா உமையம்மை உடன் கொண்டு உயர்வளிக்கும் சிவனே உயிர்ப்பளித்து உலகினையே இயக்குகின்ற பேரருளே இல்லங்களில் உறைந்திருந்து எமைக்காக்க வேண்டுமைய்யா கப்பித்தாவத்தை கோயில் கொண்ட…