Author: Thana
2023 மார்ச் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் நடைபெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் மீனவர்கள் மற்றும் மதகுருமார்கள் உட்பட கிட்டத்தட்ட 2500 இந்திய யாத்திரிகர்கள் கலந்து கொண்டிருந்தனர். வருடாந்தம் நடைபெறும் இத்திருவிழாவில் கிட்டத்தட்ட 3000க்கும் அதிகமான இலங்கை யாத்திரிகர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக 2023 மார்ச் மூன்றாம் திகதி கச்சதீவினை வந்தடைந்த யாத்திரிகர்களை கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வரவேற்றார். அன்றைய தினம் இத்திருவிழாவினை முன்னிட்டு விசேட பிரார்த்தனைகளும் மாலை நேர திருப்பலியும் இடம்பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து 2023 மார்ச் 04ஆம் திகதி இந்திய மற்றும் இலங்கை பாதிரியார்களால் மீனவர்களின் இரட்சகரான பதுவா புனித அந்தோனியாருக்காக விசேட திருப்பலி நடத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து பாரம்பரிய திருவிழா இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்பெருவிழாவிற்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் இந்திய இலங்கை யாத்திகர்களின் கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதற்கான அல்லது காட்சிப்படுத்துவதற்கான கூடங்களும்…
(அந்துவன்) தாலிக் கயிற்றினால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய ஓர் இளம் பெண்ணின் சடலத்தை புஸல்லாவ சோகமா தோட்ட மேல் பிரிவிலிருந்து (4) மீட்டுள்ளதாக புஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் எல்பொட தோட்ட கட்டுகித்துல ஜன உதான கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய எஸ். நிரஞ்சலா தேவி என்பவர் ஆவார். அந்தப் பெண் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே தனது முதல் கணவரை பிரிந்து, வேறொரு நபரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளார். அதன் பின்னர் இருவரும் கொழும்பில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர் என கூறப்படுகிறது. இந்நிலையில் எல்பொட கட்டுகித்துலையில் உள்ள பெண்ணின் தாய்வீட்டுக்கு செல்வதற்காக கொழும்பிலிருந்து இருவரும் புஸல்லாவ நகருக்கு வந்துள்ளபோதும், வீட்டுக்குச் செல்லவில்லை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அதன் பின்னர் தேயிலை கொழுந்து பறிக்கச் சென்ற இரு பெண்கள் சடலத்தை குறித்த இடத்தில் கண்டு, புஸல்லாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.…
வீரகெட்டிய பிரதேசத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல்; 10 பேர் வைத்தியசாலையில்!
வீரகெட்டிய – அத்தனயால பகுதியில் பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கலாக 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேசவாசிகளை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த தருணத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது. மோதலில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பகஸ்தோவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நிதானஹேன குமாரபடிய அம்பகஸ்தோவ எனும் விலாசத்திற்குறிய இடத்தில் புதையல் தோண்டப்படுவதாக அம்பகஸ்தோவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் ஸ்தானத்திற்கு விரைந்து சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போது அம்பகஸ்தோவ பகுதியை சேர்ந்த மூவரும் லூணுவத்தைப் பகுதியை சேர்ந்த ஒருவருமாக நான்கு நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் கைப்பற்ற பட்டுள்ளதாகவும் குறித்த நால்வரும் வெளிமடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர். ராமு தனராஜா
ரிதிமாலியெத்த பிரதேச சபைக்கு சொந்தமான UP PS 5483 கெப் ரக வாகனத்தில் ரிதிமாலியெத்த பிரதேச சபை தவிசாளர் நிஷாந்த ஜயசுந்தர ஆந்தா உல்பத சந்தனாராமய விகாரைக்கு அருகாமையில் வாகனத்தை நிறுத்தி விட்டு விகாரைக்கு வழிபாட்டில் ஈடுபட்டு வாகனத்துக்கு அருகாமையில் வரும் போது நான்கு நபர்களால் குறித்த வாகனத்திற்கு கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டதாக ரிதிமாலியெத்த பொலிஸ் நிலையத்தில் தவிசாளரினால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் எவருக்கும் சேதங்கள் ஏற்படாத போதிலும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை மேலதிக விசாரணைகளை ரிதிமாலியெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா
பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எலபெத்த கும்புர தகுன கெபிலேவெல பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் பெண்ணின் தாயும் பண்டாரவளை நகருக்கு வருகை தரும் போது குறித்த பெண்ணின் காதலனாகிய கல்கடபதன ஒத்த கடை பண்டாரவளை பகுதியை சேர்ந்த ஏழாவது இராணுவ பொறியியலாளர் பிரிவில் கடமை புரிந்து தற்போது இராணுவத்திற்கு செல்லாது தலைமறைவாகி இருந்த 23 வயதுடைய நபர் ஒருவரினால் அஸிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அஸிட் தாக்குதலுக்கு இலக்கான பெண்ணின் தாய் பதுளை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு குறித்த பெண்ணுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. 23 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் பண்டாரவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபரை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். ராமு தனராஜா
வீரகெட்டிய பகுதியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல். வீரகெட்டிய – அத்தனயால பகுதியில் பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கலாக 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேசவாசிகளை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த தருணத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது. மோதலில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்றெகுலர்ஸ் கங்கா விளையாட்டு கழகம் நாடாத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஹென்போல்ட் ரீடர் வெற்றி
சென்றெகுலர்ஸ் கங்கா விளையாட்டு கழகம் நாடாத்திய அணிக்கு எட்டுப்பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி சென்றெகுலர்ஸ் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த மூன்று நாட்களாக (4,5,6 மார்ச் 2023)நடைபெற்றது. போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் பிரதேச சபைத் தலைவர் திரு.சதாசிவம், அக்கரபத்தனை பிரதேச சபை உறுப்பினர் புஷ்பராஜ், அமைப்பாளர்களான பிரதீப்,ரமேஷ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட 16 அணிகள் பங்கு பற்றி சிறப்பித்த இந்தப் போட்டியில் ஹென்போல்ட் “RIDER”(ரைடர்) அணி முதாவது இடத்தையும் கலிடோனியா”KOD”இரண்டாவது இடத்தையும் நல்லதண்ணி ஜெயசக்தி அணி மூன்றாவது இடத்தையும் பெற்றது. போட்டியில் ஆட்ட நாயகன்,சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர், சகலதுறை வீரருக்கான கிண்ணங்களும் வழங்கப்பட்டது. (அ.ரெ.அருள்)
ACT அமைப்பின் 2023 ஆண்டுக்கான கன்னி தலைமைத்துவ பயிற்சி பட்டறை. ACT Canada பூரண அனுசரணையுடன் ACT Sri Lanka அமைப்பின் ஏற்பாட்டில் ஹப்புத்தளை மத்திய கல்லூரி மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பட்டறை 05.03.2023 காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை தரம் 09 -12 வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இப்பயிற்சி பட்டறை ஹப்புத்தளை மத்திய கல்லூரி அதிபர் திரு. சந்திரமோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக் கருத்தரங்கினை ACT Sri Lanka அமைப்பின் உப.தலைவர் மற்றும் ஆலோசகர் இரா.சிவயோகன் அவர்களுடைய வழிகாட்டலுடன் வளவாளர்களாக ACT Sri Lanka ஊடகத்துறை பொருப்பாளர் ப.பவித்ரா MPhil, Phd® அபிவிருத்தி உத்தியோகத்தர், பேராதெனிய இந்து கல்லூரி, ACT Sri Lanka செயலாளர் செல்வி. இரா. திவ்யா BA, MPPG, Phd® MEAL Coordinator @ world Vision Lanka ஆகியோரினால் மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி அளிக்கப்பட்டதுடன் மாணவர்கள் மிக ஆர்வமாக இக்கருத்தரங்கில்…
ஹட்டனை சேர்ந்த இளம் யுவதி தன்னை 60 வயது மதிக்கத்தக்க வீட்டு எஜமான் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக மொரட்டுவ போலீஸ் நிலையத்தில் நேற்று (05/03/23) இரவு 11 மணி அளவில் முறைப்பாறொன்றை குறித்த வீட்டில் இருந்து தப்பிய நிலையில் பதிவு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு குறித்த 20 வயது மதிக்கத்தக்க யுவதி நோர்வூட்டை சேர்ந்த வீட்டு தரகர் மூலம் வீட்டு பணிக்காக அமரத்தப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியா சந்தேகநபரான வீட்டு உரிமையாளர் அவ்வப்போது அடிப்பதும் ,உடலை தட்டுவதுமாய் இருந்துகிறார் ,மேலும் குறித்த வீட்டில் உள்ள ஏனைய குடும்ப அங்கத்தவர்கள் வெளியில் பயணம் செய்திருந்த நிலையில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் குறித்த பெண்ணை மோசமான முறையில் பாலியல் ரீதியிலான் துன்புறுத்தல்களில் ஈடுபட்டு வந்த நிலையில் பெண் வீட்டில் இருந்து தப்பிய நிலையில் பாதையில் சென்ற ஒருவரின் உதவியுடன் பொலிசில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளளார். சம்பவம் தொடர்பில் சந்தேக…