Author: Thana

(அந்துவன்) கொட்டகலை நகர பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இத்தீ விபத்து 05.03.2023 அன்று இரவு 09.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் பசார் பகுதியில் வீதிக்கு அருகாமையில் உள்ள ஒரே கட்டிடத்தில் அமையப்பெற்றுள்ள தளபாட கடை மற்றும் வீடு ஆகியன முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. திம்புள்ள பத்தனை பொலிஸார், மற்றும் பிரதேச பொது மக்கள், நுவரெலியா மாநகர சபையினரின்  தீயணைப்பு பிரிவினர், கொட்டகலை இராணுவத்தினர், இராணுவத்தின் தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 4 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்பு படையினர் விரைந்து வந்திருந்தால் இந்த பாரிய அனர்த்தத்தை கட்டுப்படுத்திருக்கலாம். சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அண்மித்த பகுதியில் கொட்டகலை பிரதேச சபையில், தீயணைப்பு வாகனம் இல்லை என்பதால்,…

Read More

ஸ்ரீ சத்தியா சாய் வித்யாநிலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் மாணவய்களுக்கான பட்டமளிப்பு விழாவும் நேற்றைய தினம் (05) தலவாக்கலை கதிரேசன் ஆலய கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. வித்யா நிலயத்தின் அதிபரான கே.உமாதர்ஷினி, குறித்த கல்வி நிலைய இயக்குநரான வைத்தியர் கருணை தாசன் ஆகியோர் தலைமை தாங்கிய இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அரவிந்தகுமார் கலந்துக்கொண்டார். மாணவர்களின் அணிவகுப்போடு ஆரம்பமான இந்நிகழ்வில் வித்யாநிலைய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மேலும் குறித்த பரிசளிப்பு நிகழ்வில் அரங்கேற்றப்பட்ட ஆசிரியர்களின் நாட்டிய நாடகம் பலரையும் கவர்ந்ததோடு சிறப்பு விருந்தினரால் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. இந்நிகழ்வில் சத்ய சாய் பாபா ஆலயத்தின் அம்மையார் அவர்களும், சென்மேரிஸ் தேவால அருட்சகோதரி, தொழிலதிபர்கள், அதிபர் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். ஸ்ரீ சத்யா சாய் வித்யாநிலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி இராஜாங்க…

Read More

கொட்டகலை நகரிலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கின்றார், தளபாட விற்பனை நிலையங்களிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது. இந்த தீயானது ஏனைய வர்த்தக நிலையங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு, இதுவரை தீயணைப்பு வாகனங்கள் வரவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பிரதேச மக்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

Read More

டி சந்ரு நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுக்கலை பகுதிக்கு மரக்கறி ஏற்றச் சென்ற லொறி கொண்டக்கலை பகுதியில் பாரிய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. https://youtu.be/kTYvzLf22W8 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 14 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் இவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஐவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார் . நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்து லபுக்கலை பகுதிக்கு மரக்கறி வகைகளை அறுவடை செய்து ஏற்றச்சென்ற லொறி வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்ததாகவும் இதனைத் தொடர்ந்து லொறியில் பின் பகுதியில் அமர்ந்து பயணித்தோர் அதிலிருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் 18 வளைவு வீதி நேற்று (04) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பாறைகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்ததன் காரணமாகவே குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தனர். சீரற்ற காலநிலை காரணமாக வீதியின் 13 மற்றும் 14 ஆவது வளைவுகளுக்கு இடையிலான பகுதியில் மண் மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், குறித்த வீதியின்  போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதன்படி அந்த வீதியை பயன்படுத்தும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கிச் செல்லும் வாகனங்கள் ரன்தெனிகல – பதுளை வீதி அல்லது ராஜ மாவத்தை தெண்ணேகும்புர மணிக்கூட்டு கோபுரச் சந்திக்கு அருகில் வந்து சந்தி 21 இல் இடப்புறமாகத் திரும்பி பதுளை – மஹியங்கனை வீதியில் மஹியங்கனை நகரை அடையலாம். இதேவேளை, வீதியில் சரிந்து வீழ்ந்த மண் அகற்றும் பணி இன்று காலை முன்னெடுக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தேசிய…

Read More

உடப்பு – கட்டகடுவ பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி ஒன்றரை வயது குழந்தையை இறால் தொட்டியில் தள்ளிய தாய் தொடர்பில் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். குறித்த இறால் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளி ஒருவரின் மனைவி, தனது பெண் குழந்தை இறால் தொட்டிக்குள் தள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார். சிறுமி குருநாகல் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தற்போது குணமடைந்து வருவதாக குருநாகல் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சண்டமாலிசமரகோன் தெரிவித்துள்ளார். கணவரை பலிவாங்கும் நோக்கில் குழந்தையை இறால் வளர்ப்பு தொட்டிக்குள் தள்ளியதாக கூறப்படும் 20 வயதுடைய தாய் சந்தேகத்தின் பேரில் உடப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி தொட்டியில் விழுந்ததாக சந்தேக நபர் முதலில் பொலிஸாரிடம் தெரிவித்த போதிலும், இறால் பண்ணையின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த போது, சந்தேகநபர் குறித்த சிறுமியை பிடித்து அவளை தொட்டிக்குள் தள்ளும் காட்சி தெளிவாகத் தெரிந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி…

Read More

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னுகை தோட்டம் 3 ம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சட்ட விரோதமாக முறையில் அனுமதி பத்திரம் இன்றி மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபடுவதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் ஸ்தானத்திற்கு விரைந்து சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போது சட்ட விரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 42 வயதுடைய அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து மாணிக்க கல் அகழ்விற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களை பசறை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சந்தேக நபரை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா

Read More

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இதழ்கஸ்ஹின்ன பகுதியில் புகையிரத பாதையில் நடந்து சென்ற 50 வயதுடைய நபர் ஒருவர் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டுயிருந்ந ரயிலில் மோதி பலியாகியுள்ளனர் குறித்த நபர் உடுபில்தன்ன இதழ்கஸ்ஹின்ன எனும் ஊரைச் சேர்ந்த நபர் என ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர் இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது சடலம் தற்போது தியத்தலாவ வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் ராமு தனராஜா

Read More

மைஹியங்கன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அலுகாடியா பகுதியில் நபர் ஒருவர் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி வைத்து இருப்பதாக மைஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் ஸ்தானத்திற்கு விரைந்து தேடுதலை மேற்கொண்ட போது மறைத்து வைத்திருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அத்துடன் அலுகாடியா மாபகாதேவாவ பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் ஒருவரும் மையாங்கன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேக நபரை மைஙியங்கனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மைஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா

Read More

ஜனாதிபதி செயலகத்தின் மலையக கல்வி பிரிவின் மேற்பார்வை பொறுப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி கனகராஜ் தொழிற்சங்க பிரிவின் மேற்பார்வை பொறுப்பாளராக முன்னாள் மத்திய மாகாண சபை தலைவர் துரை மதியுகராஜா நியமனம்! ஜனாதிபதி செயலகத்தின் மலையக கல்வி பிரிவின் மேற்பார்வை பொறுப்பாளராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தொழிற்சங்க பிரிவின் பொறுப்பாளராக மத்திய மாகாண சபையின் முன்னாள் தலைவர் துரை மதியுகராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளார். மலையக பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சனைகளை இனங்கண்டு தீர்வு காண்பதற்காகவும், தொழிற்சங்க ரீதியாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More