Author: Thana
பதுளை தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று முன்னணி சோசலிச கட்சியினரால் மின்சார கட்டணம் உயர்விற்கும் , வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து பொருட்களின் தட்டுபாட்டிற்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையை காணக்கூடியதாக இருந்தது. ராமு தனராஜா
சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள எரிஎரிபொருள் , விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக இன்று (02) முதல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக ,டோகன்கள் (குறி அட்டைகள்) வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் நெல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, சீன அரசாங்கத்தினால், 6.98 மில்லியன் லீட்டர் டீசல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு சிக்கல்கள் காரணமாக இந்த எரிபொருளை விவசாயிகளுக்கு விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றை விரைவாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சின் அதிகாரிகளுக்கும், விவசாய அபிவிருத்தித் திணைக்களத்திற்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த எரிபொருட்களை பகிர்ந்தளிப்பது குறித்து நேற்று (01) கமத்தொழில் அமைச்சரின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபணம், விவசாய அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இதற்கமைய, நாட்டின் 5 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் இலகுவாக எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் விவசாய அபிவிருத்தித் திணைக்களம் குறித்த டோகன்களை நேற்று…
நகர்ப்புற குடியிருப்புகளில் வாழும் குழந்தைகளின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சு மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், நகர்ப்புற குடியேற்றங்களில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சமூக ஒழுக்கக்கேடுகளை தடுக்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார். பத்தரமுல்லை செத்சிறிபாய கேட்போர் கூடத்தில் இன்று (2) நடைபெற்ற “சுவென் சிட்டிமு – லஸ்ஸன வெமு” மற்றும் “சுவதி தியனிய” ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது, நகர குடியேற்ற அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் நாடளாவிய ரீதியில் இயங்கும் நகரக் குடியிருப்புகளின் எண்ணிக்கை 22 ஆகும். கொழும்பு, கம்பஹா, கடுவெல, அனுராதபுரம், மஹியங்கனை ஆகிய…
இலங்கையில் உள்ள ரம்சா சதுப்பு நிலம் மற்றும் ஈரநில பூங்காக்கள் குறித்து இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு தெரிவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி….
இலங்கையின் ரம்சா சதுப்பு நிலங்கள் மற்றும் ஈரநிலப் பூங்காக்கள் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு தெரிவிக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை நகர அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள பபெத்தகான ஈரநில பூங்கா மற்றும் கோட்டே, கொட்டுபெம்ம ஈரநில பூங்கா ஆகியவற்றை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரம்சா சதுப்பு நில சுற்றுச்சூழல் பற்றி பள்ளி மாணவர்களுக்கு கற்பிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் தபிரசன்ன ரணதுங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த 100 சுற்றாடல் ஆர்வமுள்ளவர்களின் பங்குபற்றுதலுடன் சுற்றாடல் கண்காணிப்பு மற்றும் ஆய்வு நிகழ்ச்சி நேற்று (01) இந்த ஈரநில பூங்காக்களை மையமாக வைத்து நடைபெற்றது. கோட்டே ஆனந்த அகடமி, நுகேகொடை புனித ஜோசப் பெண்கள் உயர்தரப் பாடசாலை, நுகேகொட றோயல் சர்வியஸ்…
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்பிரிங்வெலி அம்பலம் சந்தியில் சுமார் 55வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இறந்தமைக்கான காரணத்தை கண்டறி முகமாக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் ராமு தனராஜா
மலையக சிறார்களுக்கான சத்துணவு வேலைத்திட்டம் ஆறு மாதங்களுக்கானது எனக் கூறப்பட்டாலும் அதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கே நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்கான திட்டங்கள் நிச்சயம் உருவாக்கப்படும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களுக்கு இலவசமாக சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (01.03.2023) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரனின் பங்குபற்றலோடு, பூண்டுலோயா பேர்லன்ஸ் தோட்டத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது. இதன்போத அமைச்சர் ஜீவன் தொண்டமான் காணொளி மூலமாக நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். அவர் கூறியவை வருமாறு, மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள ஆயிரத்து 300 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள…
இரண்டு வருடங்களாக முறையாக பராமரிக்கப்படாத பிலியந்தலை புதிய பஸ் நிலையத்தை கஸ்பேவ நகரசபைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். பிலியந்தலை நகர அபிவிருத்தித் திட்டம், பொது வர்த்தக நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் தொடர்பாக இன்று (01) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். இந்த கலந்துரையாடல் நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பிலியந்தலையில் புதிய பேருந்து நிலையம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் அதன் முகாமைத்துவம் மற்றும் பராமரிப்புப் பணிகளை இலங்கை போக்குவரத்து சபை மேற்கொண்டது. எவ்வாறாயினும், சுமார் இரண்டு வருடங்களாக பஸ் நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மலசலகூட அமைப்பில் உள்ள பிரச்சினைகள், முறையான பராமரிப்பு, பராமரிப்புப் பணிகள் சரியாக நடைபெறாமை, மின் விளக்குகள் சரியாக வேலை செய்யாமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லோகுகே மற்றும் கெஸ்பேவ…
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மழை நிலைமை : பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை அறவீட்டுத்தருமாறு ,தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து அவற்றில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவிடுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை, மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ரூ.21,000 கட்டணத்துடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. சஞ்சீவ மொராயஸ் மற்றும் பிராங்க் குணவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்களைக்கொண்ட அமர்வு இந்த உத்தரவை (01) பிறப்பித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , முன்னாள் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் , உத்தரவுபிறப்பித்தது. இந்த தாக்குதல் குறித்து புளனாய்வுப்பிரிவிக்கு ,முன்னரே தகவல் கிடைத்த போதிலும் தாக்குதலை தடுக்க தவறியமை தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி சிறிசேனாவை…
மத்திய மாகாணம்- கண்டி மாவட்டம் கண்டி நித்தவல – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் கண்டியிலே கோயில் கொண்ட மாரியம்மா எம் சுற்றமெல்லாம் பெருமைபெற துணையிரம்மா என்றும் அரவணைக்கும் முத்து மாரியம்மா ஏற்றவழி காட்டியெமக் கருளிடம்மா நித்தவல நல்லிடத்தில் கோயில் கொண்ட மாரியம்மா நிம்மதியை நிரந்தரமாய் பெற்றுவிட துணையிரம்மா என்றும் அன்பு செய்யும் முத்து மாரியம்மா ஏற்றவழி காட்டியெமக் கருளிடம்மா மலை சூழ்ந்த திருவிடத்தில் கோயில் கொண்ட மாரியம்மா மாண்புடனே நாம்வாழ துணையிரம்மா என்றும் எமைக் காத்தருளும் முத்து மாரியம்மா ஏற்றவழி காட்டியெமக் கருளிடம்மா கண்ணுச்சாமி ஆண்ட மண்ணில் கோயில் கொண்ட மாரியம்மா கவலையின்றி நாம் வாழத் துணையிரம்மா என்றும் எமக்கேற்றம் தரும் முத்து மாரியம்மா ஏற்றவழி காட்டியெமக் கருளிடம்மா மலையகத்தின் தலைநகரில் கோயில் கொண்ட மாரியம்மா வெற்றி பெற்று நாம் வாழத் துணையிரம்மா என்றும் வெற்றிதரும் முத்து மாரியம்மா ஏற்றவழி காட்டியெமக் கருளிடம்மா வளம் சூழ்ந்த பெருநிலத்தில் கோயில் கொண்ட…