Author: Thana

தமிழக சட்டமன்றத் தேர்தல்- விஜய் இல்லத்தில் போலீஸ் குவிப்பு – நீலாங்கரையில் பலத்த பாதுகாப்பு! சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, திங்கட்கிழமை) நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அவர்களின் சென்னை நீலாங்கரை இல்லத்தில் பாதுகாப்பு உச்சகட்டமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 23-ம் தேதி தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவைத் தொடர்ந்து, தேர்தல் முடிவுகள் வெளிகி வரும் நிலையில் விஜயின் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்தும் முன்னனிலையில் இருந்து வருகின்றது. தற்போது வரை தவெக கட்சிக்குச் சாதகமான முடிவுகளைக் காட்டி வருவதால், அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில் முடிவுகள் வெளியாகும் போது, மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், தலைவரைச் சந்திக்கவும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் நீலாங்கரை இல்லத்தில் பெருமளவில் குவியக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் சென்னை…

Read More

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஹபராதுவ, கொக்வத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது மின்னல் தாக்கியதில் அங்கிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்தில் ஹபராதுவ, கொக்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்ட இரு பெண்களும் அப்பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவர்கள் எனவும், அவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்த போதே மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தில் காயமடைந்த மற்றைய பெண் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

எரிபொருள் விலைத் திருத்தங்களை லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. எரிபொருள் விலையில் மாற்றம்: ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்களின் முக்கிய அறிவிப்பு! அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, 92 ரக பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கமைய மாற்றியமைப்பதாக லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. எனினும், ஏனைய எரிபொருட்களின் விலைகளை எந்தவித மாற்றமுமின்றி, பழைய முறைப்படியே பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன

Read More

“எதிரணி உறுப்பினர்கள் ஐந்து அல்லது பத்து பேர் வீதிக்கு இறங்குவதால் இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட முடியாது. இது மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம்; அடுத்த பல வருடங்களுக்கு இதனை யாராலும் அசைக்க முடியாது,” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் (01) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மலையக மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளான காணி மற்றும் வீட்டுரிமை தொடர்பில் இதன்போது ஜனாதிபதி முக்கிய வாக்குறுதிகளையும் வழங்கினார். ஜனாதிபதியின் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: மலையக மக்களுக்கான காணி மற்றும் வீட்டுரிமை மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்குரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நீண்டகாலமாக நிலவும் காணிப் பிரச்சினையைத் தீர்த்து, முறையான காணி மற்றும் வீட்டு உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி திகழும் என உறுதியளித்தார். மலையகத் தோட்டங்களில் பாட்டன் மற்றும்…

Read More

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தன்சல்களை பதிவு செய்யும் பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டங்களில் இப்பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்தச் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார். தன்சல்களை நடத்துவது தொடர்பான விசேட வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு தற்போது வெளியிட்டுள்ளதாகவும், இது குறித்து பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் வினவி மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, நேற்றைய பௌர்ணமி தினத்தை முன்னிட்டும் நாடளாவிய ரீதியில் 382 தன்சல்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தகவல் கிடைத்துள்ளதாக சமில் முத்துகுட குறிப்பிட்டார். அந்தத் தன்சல்களும் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். இந்த ஆண்டின் மே மாதத்தில் இரண்டு பௌர்ணமி தினங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் நேற்று (1) வெசாக் பௌர்ணமி தினமாக முன்னதாகக் கருதப்பட்டது. இருப்பினும், மூன்று பீடங்களின்…

Read More

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (02) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் இன்று (02) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Read More

ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB) ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) தற்போது கொள்கையளவில் ஒன்றிணைந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார். கொழும்பு மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரம்மாண்ட மே தினப் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தமைக்குத் தனது நன்றியைத் தெரிவித்த சஜித் பிரேமதாச, அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு விடயத்தை மறுத்தார். இரு கட்சிகளும் இணைந்து பயணிப்பதற்குக் குழுக்களை அமைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ஏனெனில் இரு கட்சிகளும் ஏற்கனவே ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கிவிட்டன என்றும் அவர் குறிப்பிட்டார். “அத்தகைய குழுக்களில் உள்ள சில நபர்கள் இந்த இணைப்பைச் சீர்குலைக்க முயற்சி செய்கிறார்கள். இனி அத்தகைய சதித் திட்டங்களுக்கு நான் இடமளிக்கப் போவதில்லை,” என அவர் எச்சரிக்கை விடுத்தார். …

Read More

பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு, மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவ, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். காலை வேளையில் தெற்கு மாகாணம், களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும், கடலோரப் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும். காலை வேளையில் மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் பொலன்னறுவ மாவட்டங்களிலும் சில இடங்களில் பனிமூட்டமான சூழல் நிலவக்கூடும். இடியுடன் கூடிய மழையால் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 02 மே 2026-ஆம் நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு 02 மே 2026 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

Read More

நாவலப்பிட்டியில் சோகம்  லொரியில் சிக்குண்டு இளைஞன் பலி -சாரதி கைது நாவலப்பிட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள  ஃபூட் சிட்டி  கிளைக்கு பொருட்கள் ஏற்றி வந்த லொரியின் பின் பகுதியில் சிக்குண்டு, அதன் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது: குருநாகல் பகுதியிலிருந்து நாவலப்பிட்டியவிலுள்ள food சிட்டி கிளைக்கு உணவுப் பொருட்களை ஏற்றி வந்த கனரக லொரி ஒன்று, இன்று (01) காலை பொருட்களை இறக்குவதற்காக பிரதான சாலையிலிருந்து பின்னோக்கி (Reverse) சென்றுள்ளது. அப்போது, லொரியின் பின்புறத்திற்கும் அங்கிருந்த கிடங்குச் சுவருக்கும் இடையிலான குறுகிய இடைவெளியில் லாரியின் உதவியாளர் எதிர்பாராத விதமாக சிக்குண்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர் சுமார் 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் லொரியின் சாரதியை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். சாரதியின் கவனக்குறைவே இந்த…

Read More

உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நியாயமான, பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்க உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் தொழிலாளர் வரலாறு என்பது, பல தசாப்தங்களாகத் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக இரத்தமும், கண்ணீரும், வியர்வையும் சிந்திய பெருமைமிக்க போராட்டத்தின் கதையாகும். 1893ஆம் ஆண்டு அச்சுத் தொழிலாளர் வேலை நிறுத்தத்திலிருந்து இந்நாட்டின் உழைக்கும் மக்கள் ஒரு ஒழுங்கமைந்த சக்தியாக எழுந்து நின்றனர். ஏ.ஈ. குணசிங்கவின் தலைமையில் ஆரம்பமான தொழிற்சங்க இயக்கத்தின் வழிவந்த தொழிலாளர் குரல், அரசியல் ரீதியாகப் பலம்பெற்றது. 1923ஆம் ஆண்டின் ரயில்வே வேலைநிறுத்தம், 1947ஆம் ஆண்டின் அரச சேவை வேலைநிறுத்தம் போன்ற தீர்க்கமான திருப்புமுனைகள், இந்நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தின் “முன்னோடிகள்” உழைக்கும் மக்களே என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தின. அன்று தொட்டு இன்று வரை தோட்டத்துறை, துறைமுகம், ரயில்வே…

Read More