Author: Thana

உலக அமைதியை வேண்டி நடைபெற்ற “எஹிபஸ்ஸிகோ” அமைதிக்கான நடைபயணத்தின் அரச நிறைவு விழா ஜனாதிபதியின் பங்கேற்புடன் புனித தந்ததாது மற்றும் ஜய ஸ்ரீ மகா போதியின் கன்று, ஜனாதிபதியின் கைகளினால் உத்தியோகபூர்வமாக வண. பஞ்ஞாகர தேரரிடம் கையளிப்பு இலங்கையை அமைதி மற்றும் மனிதநேயத்தின் தீவாக மாற்றுவோம் — ஜனாதிபதி இலங்கை மக்கள் காட்டிய மரியாதை, முகங்களில் தென்பட்ட புன்னகை மற்றும் அவர்கள் மனமுவந்து வழங்கிய பாதுகாப்பு என்பன உண்மையான வலிமை என்ன என்பதை உணர்த்துகின்றன. அமைதியான ஒரு தேசம் என்பது இதுதான். இதற்காக எனது சார்பாகவும், சமாதான நடைப்பயணக் குழுவினர் மற்றும் இப்பயணத்தை அனுபவித்த அனைவர் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குள் அமைதியை ஏற்படுத்திக்கொண்டால், குடும்பங்கள் அமைதியாகும், சமூகம் அமைதியாகும், நாடுகள் அமைதியாகும், அப்போது ஒட்டுமொத்த உலகமே அமைதியடையும். அமைதி என்பது வெளியிலிருந்து உள்ளே வருவதல்ல, அது உள்ளிருந்து வெளியே உருவாவதாகும். – வண. பஞ்ஞாகர…

Read More

மொரட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றின் சாரதிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபக்கத்திற்குத் தாவியதுடன் அங்கிருந்த வீடொன்றின் மீது மோதி நின்றுள்ளது. இந்த விபத்தில் பேருந்திலிருந்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. இருப்பினும், வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது பேருந்து மோதியதில், அதில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா (Shammi Silva) உள்ளிட்ட அனைத்து உத்தியோகபூர்வ அதிகாரிகளும் இன்று (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவுடன் இணைந்து, அதன் ஏனைய உத்தியோகபூர்வ அதிகாரிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் கூட்டாகத் தமது பதவிகளைத் துறந்துள்ளனர். இந்தத் தீர்மானம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் பதவி விலகல் குறித்த விபரங்கள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோருக்கு உத்தியோகபூர்வமாக எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக மாற்றங்கள் அல்லது அரசாங்கத்தின் புதிய கொள்கை முடிவுகள் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டகாலமாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் நிலவி வந்த பல்வேறு சர்ச்சைகள்…

Read More

சக மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் புகைப்படங்களைச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாகச் சித்தரித்துப் பகிர்ந்த குற்றச்சாட்டில், உடுத்துறை பகுதியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், உடுத்துறைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் அண்மையில் சாதாரண தரப் பரீட்சை (O/L) எழுதி முடித்த ஆறு மாணவர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் சாதாரண புகைப்படங்களைச் சேகரித்து, ‘AI’ தொழில்நுட்பம் மூலம் அவற்றை ஆபாசமான முறையில் மாற்றியமைத்துள்ளனர். இவ்வாறு மாற்றப்பட்ட படங்களைச் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்து வந்துள்ளனர். இது குறித்துத் தெரியவந்ததையடுத்து, பாடசாலை அதிபர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். நீதிமன்ற உத்தரவு: முறைப்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், முதற்கட்டமாக 17 வயதுடைய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (28) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதவான் பொன்னுத்துரை கிருஷாந்தன்,…

Read More

போதை அரக்கனின் வெறிச்செயல்: பணம் தராத தாயின் இரு கால்களையும் அடித்து உடைத்த மகன்!  போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம் தராத ஆத்திரத்தில், பெற்ற தாய் என்றும் பாராமல் தடியால் அடித்து அவரின் இரு கால்களையும் முறித்த மகனின் கொடூரச் செயல் கேகாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேகாலை, தேவலகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவன், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை போதைப்பொருள் வாங்குவதற்காகத் தனது தாயிடம் ரூபாய் 5,000 பணம் கேட்டுள்ளார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என தாய் மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த இளைஞன், வீட்டிற்கு அருகில் கிடந்த தடியை எடுத்துத் தாயின் இரு கால்களிலும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்தக் கொடூரமான தாக்குதலில் அந்தப் பெண்ணின் இரு கால்களும் முறிந்துள்ளன. வலியால் அலறிய தாயின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு உடனடியாக கேகாலை பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு…

Read More

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/26 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழகப் பிரவேச விண்ணப்பங்கள் இன்று (28) முதல் மே 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2025 உயர்தரப் பெறுபேறுகளின்படி, 176,527 மாணவர்கள் (62.64%) பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். கடந்த மார்ச் 31 ஆம் திகதி இரவு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்ட நிலையில், இம்முறை பரீட்சைக்கு 281,810 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இதற்கிடையில், 111 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 2025 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 30,000-க்கும் மேற்பட்டோர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இம்முறை உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தியைப் பெற்ற பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை 7,477 ஆகும், இது 3.38 சதவீதமாகும்.

Read More

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹேக்கர்களினால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட ‘நவ ஜனதா பெரமுன’ கட்சியின் ஆதரவாளர்கள் குழுவினர் இன்று (28) காலை பெலவத்தை, அகுரேகொட பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றிருந்தனர். அங்கு அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட சிலரது மீது சாணத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதோடு, நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

Read More

பொகவந்தலாவ: ராணிகாடு பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 34 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இன்று காலை 7.30 மணியளவில் ராணிகாடு – பொகவந்தலாவ பிரதான வீதியின் கெம்பியன் தோட்டப் பகுதியில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. பேருந்து பயணித்துக் கொண்டிருந்தபோது அதன் பிரேக் (Brake) தொகுதியில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. பேருந்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், மாணவர்களின் உயிரைக் காக்கும் முயற்சியாக சாரதி பேருந்தை வீதியோரத்திலிருந்த மண் திட்டில் மோதி நிறுத்த முற்பட்டுள்ளார். இதன்போதே மாணவர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த 34 மாணவர்கள் உடனடியாக பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே. ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில்: 34 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 10 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏனைய…

Read More

பலாங்கொடையில் பாடசாலை பேருந்து விபத்து: 34 மாணவர்கள் காயம். பலாங்கொடை – பொகவந்தலாவ பிரதான வீதியில் இன்று காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 34 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இன்று காலை 8.45 மணியளவில் பலாங்கொடைக்கும் பொகவந்தலாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற போதே எதிர்பாராத விதமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த 34 மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 மாணவர்களின் நிலைமை சற்று கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏனைய மாணவர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த பொகவந்தலாவ பொலிஸார், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வாகனத்தின் இயந்திரக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவா என்பது குறித்து…

Read More

“ஏஹி பஸ்ஸிகோ” (Ehi Passiko) சர்வதேச அமைதிக்கான நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும் (28). இன்று நண்பகல் 12.00 மணிக்கு களனி ரஜமஹா விகாரையில் ஆரம்பமாகும் இந்த அமைதிக்கான நடைபயணம், சுதந்திர சதுக்கத்தை நோக்கி பயணிக்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து, மாலை 4.00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் விசேட அரச விழா நடைபெறவுள்ளது. இதன்போது, வணக்கத்திற்குரிய பஞ்ஞாக்கர தேரர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிடம் ஸ்ரீ மகா போதியின் கன்று ஒன்றை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளார். சுதந்திர சதுக்கத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகும் நடைபயணம், கொழும்பு கங்காராம விகாரையை சென்றடைந்ததும் நிறைவு பெறவுள்ளது. உலகிற்கு அமைதிச் செய்தியை கொண்டு செல்லும் நோக்கில் கடந்த 22ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமான இந்த “ஏஹி பஸ்ஸிகோ” சர்வதேச அமைதிக்கான நடைபயணம், நேற்று யக்கலையிலிருந்து களனி ரஜமஹா விகாரை வரை வந்தடைந்தது. இதேவேளை, நடைபயணம் காரணமாக இன்று கொழும்பு…

Read More