Author: Thana

1886 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆரம்பமான வரலாற்றுச் சிறப்புமிக்க தொழிலாளர் போராட்டத்தை நினைவுகூர்ந்து, இன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் தமது நன்மதிப்பை தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று வியர்வை, கண்ணீர் மற்றும் உயிர் தியாகங்களின் ஊடாக வென்றெடுக்கப்பட்ட எட்டு மணிநேர வேலை நேரமும், மனிதாபிமான சேவை நிபந்தனைகளும் தொழிலாளர் கௌரவத்தின் அடித்தளமாகும். அந்த வரலாற்று வெற்றி இன்றும் உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்களுக்கு அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழுவதற்கு பெரும் சக்தியை அளித்துள்ளது. இலங்கை வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போதும், நாட்டின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்கும் தொழிலாளர் வர்க்கம் தமது உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் செய்த அர்ப்பணிப்புகளை நாம் எப்போதும் கௌரவத்துடன் மதிப்பீடு செய்ய வேண்டும். இம்முறை மே தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில், இலங்கையின்…

Read More

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் தீர்மானமிக்கதொரு தருணத்தில், இலங்கையின் உழைக்கும் மக்கள் இம்முறை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றனர். அமெரிக்க தீர்வை வரி விதிப்பு, ‘டித்வா’ சூறாவளி, மத்திய கிழக்கு போர் போன்ற அண்மைக்காலப் பெரும் சவால்களுக்கு மத்தியிலும், எமது நாட்டின் தனித்துவமான மனிதாபிமானமிக்க அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையின் ஊடாக வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். ‘டித்வா’ போன்ற இயற்கை அனர்த்தங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு, 2025 ஆம் ஆண்டில் 1977 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பதிவான மிகக்குறைந்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையைப் பதிவு செய்தமை, 2007 ஆம் ஆண்டிற்குப் பிறகு நாட்டின் அதிகூடிய அரச வருமானத்தைப் பெற்றமை, முதன்மைக் கணக்கில் மேலதிக இருப்பைப் பேணியமை, பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி வருமானம் 17 பில்லியன் டொலர்களைத் தாண்டியமை, இலங்கை வரலாற்றில் அரச வருமான இலக்குகளை விஞ்சிய ஒரே ஆண்டு மற்றும்…

Read More

செ.திவாகரன் மே தின கூட்டங்களுக்கு ஆயத்தமாகும் தேசிய மக்கள் சக்தி – நுவரெலியாவில் நிகழ்வுகள் ஏற்பாடு நாளை கொண்டாடப்படவுள்ள தொழிலாளர் தினத்திற்காக பிரதான அரசியல் கட்சிகளுடன்,பல அமைப்புக்களும் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றனர். சர்வதேச தொழிலாளர் தினம் அல்லது மே தினம் நாளை (01) கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கு நிகராக தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டம் நுவரெலியாவில் நடைபெற உள்ளது இதில் பேரணிகள் மற்றும் கூட்டங்களை ஏற்பாடுகள் செய்துள்ளது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நுவரெலியா கிரகரி வாவி அருகாமையில் முதலாவது வாகனத்தரிப்பிடத்தில் நடைபெறவுள்ளதுடன் குறித்த பகுதியில் பிரம்மாண்டமான மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. “மக்கள் ஆட்சிக்கு பலம்” மே தினக் கூட்டம் என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் எனவும் இதில் ஆரம்ப நிகழ்வாக…

Read More

கொழும்பு புறநகர் ரயில்வே திட்டத்தின் (Colombo Suburban Railway Project) கீழ் மின்சார ரயில் சேவையை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கத் திட்டம் கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கொழும்பு புறநகர் ரயில்வே திட்டம் (Colombo Suburban Railway Project) குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் களனிவெளி ரயில் பாதையில் மருதானையிலிருந்து மாகும்புர, பிரதான ரயில் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து ராகம, கரையோர ரயில் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை வரை முதலாவது கட்டமாக செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வது மற்றும் திட்ட அமுலாக்கத்தின் போது எதிர்நோக்கக்கூடிய சவால்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. தற்போதுள்ள ரயில் சேவைக்கு இணையாக…

Read More

விசேட தேவையுடையோர் குடும்பத்தின் ஒரே தூண் சரிந்தது – பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள்.. யாழ்ப்பாணம்: கைபேசி ஊடாக ஒன்லைன் விளையாட்டுகளுக்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய மாணவர் ஒருவர், நேற்று அதிகாலை தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கொக்குவில் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த மாணவனின் குடும்பப் பின்னணி மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது. அவரது குடும்பத்தில் உள்ள ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் விசேட தேவையுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அக்குடும்பத்தின் ஒரே நம்பிக்கையாகவும், எதிர்காலத் தூணாகவும் பார்க்கப்பட்ட இந்த மாணவனின் இழப்பு அப்பகுதி மக்களை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. நீண்டகாலமாக கைபேசி விளையாட்டுகளுக்குத் தீவிரமாக அடிமையாகியிருந்த நிலையில், நேற்று அதிகாலை அவர் தனது உயிரை மாய்த்துள்ளார். சடலமாக மீட்கப்பட்ட…

Read More

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகார சபையை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார். மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகாரசபை ஒன்றை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த டித்வா சூறாவளியின் போது ஏற்பட்ட மண்சரிவுகளால் மத்திய மலைநாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதுடன், நாட்டின் இதயம் போன்ற மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார். அதன்படி, உயர் நீரேந்துப் பிரதேசங்களில் நிலவும் சுற்றாடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கும் எனத் தனியான அதிகாரசபை ஒன்றை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இந்தச் செயல்முறை தொடர்பான முன்னேற்றம் மற்றும் சட்ட ஏற்பாடுகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன், அது தொடர்பான முன்மொழிவுகளும் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. அந்த அனைத்து முன்மொழிவுகளையும் ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு, இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு…

Read More

நாவலப்பிட்டி: கிரேக்ஹெட் (Craighead Estate) தோட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வழங்குவதில் இடம்பெற்ற பாரிய ஊழல் முறைகேடுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினால் தகுதியற்ற 07 பேர் நீக்கப்பட்டு, உண்மையான பயனாளிகளுக்கு நீதி கிடைத்துள்ளது. இந்தத் தோட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 17 வீடுகளைப் பகிர்ந்தளிப்பதில் தோட்ட அதிகாரிகள் தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தகுதியற்றவர்களுக்கு வீடுகளை வழங்க முற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இதனை எதிர்த்து தோட்ட மக்கள் கண்டி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை: ஆணைக்குழுவின் அதிகாரி திருமதி ஜே. மயூரி முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், தோட்ட நிர்வாகம் தயாரித்த பெயர் பட்டியல் தவறானது என்பது உறுதி செய்யப்பட்டது. புதிய பட்டியலைத் தயாரிக்குமாறு உத்தரவிடப்பட்ட போதிலும், தோட்ட நிர்வாகமும் பொறியியலாளரும் மீண்டும் பழைய பட்டியலுக்கே புள்ளிகளைச் சேர்த்து மோசடி செய்ய முயன்றனர். இதற்கு கிராம நிலதாரி…

Read More

‘எஹிபஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைபயணம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வண, பஞ்ஞாகர தேரர் ஜனாதிபதியை சந்தித்தார் உலக மக்களுக்கு அமைதியின் செய்தியைப் பகிர்ந்து, பௌத்த தர்மத்தின் பாரம்பரியத்தை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், இலங்கையில் 07 நாட்களாக நடைபெற்ற ‘எஹிபஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைபயணம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வண, பஞ்ஞாகர தேரர் நேற்று (28) இரவு ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார். எஹிபஸ்ஸிகோ” அமைதிக்கான நடைபயணத்தை இலங்கையில் மிகவும் வெற்றிகரமாக நடத்துவதற்கு வழங்கப்பட்ட அரச அனுசரணைக்கு தனது நன்றியைத் தெரிவித்த வண, பஞ்ஞாகர தேரர், இது உண்மையிலேயே ஊக்கமளிக்கும் ஒரு அனுபவம் என்று குறிப்பிட்டார். இலங்கைக்கும் உலகிற்கும் இடையில் ஒரு பாலமாகச் செயற்படும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ‘தம்மசேதிய’ திட்டத்திற்காக, புனித ஜய ஸ்ரீ மகா போதியின் கன்றைப் பரிசாக வழங்கியமைக்கும், அமெரிக்காவின் ‘ஹங் தாவோ விபஸ்ஸனா தியான மையத்தில்’ நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் விழாவின் போது, புனித தந்த…

Read More

சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார் வசதியை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது சிவனொளிபாத மலை உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய பல இடங்களில் கேபிள் கார் திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் இன்று (28) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சுற்றுலா செயலணிக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. சிவனொளிபாதமலையை மையப்படுத்தி கேபிள் கார் திட்டமொன்றை ஆரம்பிக்குமாறு நீண்டகாலமாக பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக கிகிலியாமான, எல்ல உள்ளிட்ட மேலும் சில சுற்றுலாத் தலங்களும் இவ்வாறான கேபிள் கார் திட்டங்களை ஆரம்பிக்கக்கூடிய இடங்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது. இவ்விடங்களில் அந்தத் திட்டத்தை ஆரம்பிப்பது குறித்த சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், அதற்குத் தேவையான ஆரம்பகட்ட அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதற்கும், அது தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கைகள் குறித்து ஆராய்வதற்கும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. மே மாதம் 25ஆம் திகதி முதல் 40…

Read More

ஜனாதிபதிக்கும் மூன்று பீடங்களின் மகா சங்கத்தினருக்கும் இடையில் விசேட சந்திப்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் பிக்குகள் சிலர் கைது செய்யப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைகள், அதனால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் மூன்று பீடங்களின் மகா சங்கத்தினரின் தலைமையில் (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. தற்போது போதைப்பொருள் அச்சுறுத்தல் ஒரு தேசிய பேரழிவாக மாறியுள்ளதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்துடன் அனைவரும் வலுவாக கைகோர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். நாட்டைப் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக புதிய மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்லும் பயணத்தில், பௌத்த சாசனத்தையும் அதனுடன் கட்டியெழுப்பப்பட்டுள்ள விழுமியங்களையும் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்து செயற்படுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். முழுச் சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மற்றும் தற்போதைய நிலை…

Read More