Author: Thana

சமூகத்தில் இருந்து போதைப்பொருள் அபாயத்தை ஒழிக்கும் ‘ரடம எகட’ தேசிய திட்டத்திற்கு இலங்கை கடற்படை வழங்கும் பங்களிப்புக்கு பாதுகாப்பு பிரதியமைச்சர் பாராட்டு அரசின் கொள்கைக்கு அமைவாக ஒவ்வொரு குடிமகனுக்கும் ‘மரியாதையான வாழ்க்கை – பாதுகாப்பான நாடு’ என்பதைக் உறுதிப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் முன்னோடி முயற்சியான ‘ரடம எகட’ தேசிய வேலைத்திட்டத்திற்கு முழுமையான வலுசேர்க்கும் அடிப்படையில், நாட்டை சூழ்ந்துள்ள போதைப்பொருள் அபாயத்தை சமூகத்திலிருந்து முற்றிலும் ஒழிக்க இலங்கை கடற்படை மிகுந்த அர்ப்பணிப்புடன் தனது செயற்பாட்டு பங்களிப்புக்களை வழங்கி வருகிறது. குறிப்பாக, நாட்டின் எதிர்கால தலைமுறையை இந்த ஆபத்தான அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கும் உயரிய நோக்குடன், கடற்படை தமது அனைத்து வளங்களையும் மனிதவளத்தையும் திறம்பட முகாமைதத்துவம் செய்து , நாட்டை சுற்றியுள்ள கடல் எல்லைகளையும் நிலப்பரப்புகளையும் உள்ளடக்கிய விரிவான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கை வலையமைப்பை செயல்படுத்தி வருகிறது. இந்த தேசிய பணியில் கடற்படை வழங்கும் ஒப்பற்ற பங்களிப்பை கண்காணித்து, அதனை புதிய பரிமாணத்தில் முன்னெடுக்க தேவையான…

Read More

பின்தங்கிய கிராமத்திலிருந்து ஒரு மாணவன் பல்கலைக்கழகம் தெரிவானால், அது அந்தக் கிராமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வித்திடும் –  வடக்கு மாகாண ஆளுநர் தனியார் கல்வி நிறுவனங்களை நாடாமல், போதிய ஆசிரியர் வளங்களற்ற வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பாடசாலைகளில் உயர்தர விஞ்ஞானத்துறையில் (உயிரியல், இணைந்த கணிதம்) பயிலும் பின்தங்கிய தமிழ் மாணவர்களுக்கு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆய்வுகூடங்களைப் பயன்படுத்தி மூன்று நாட்கள் தங்கியிருந்து கற்கும் அரிய வாய்ப்பை வழங்கிய அதிபர் இ.செந்தில்மாறன் உள்ளிட்ட பாடசாலைச் சமூகத்தினருக்கும், இதற்கு உறுதுணையாக நின்ற சங்காரவேல் நிதியத்துக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியுடன் இணைந்து சங்காரவேல் நிதியமானது, உயர்தர விஞ்ஞானத்துறையில் தனியார் வகுப்புகளுக்குச் செல்லாத தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. வசதி வாய்ப்பற்ற, உயர்தர விஞ்ஞானத்துறையில் ஆசிரியர் பற்றாக்குறையுள்ள பாடசாலைகளில் கணித,…

Read More

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப் படுகின்றார்கள்.

Read More

தனியார் வங்கி ஒன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்று போலி இணையதளத்தை உருவாக்கி, 1,000,024 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணினி குற்ற விசாரணை வடமேல் மாகாணப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நேற்று (20) குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு வாரியபொல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று (21) குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கணினி குற்ற விசாரணை பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. [10:49, 21/04/2026] Thana: தனியார் வங்கி ஒன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்று போலி இணையதளத்தை உருவாக்கி, 1,000,024 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணினி குற்ற விசாரணை வடமேல் மாகாணப்…

Read More

நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் போது ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி 86 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ​சம்பவம் குறித்து தெரியவருவதாவது: நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரொக்வூட் தோட்டத்தில் நேற்று (ஏப்ரல் 20) இரவு 7 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரொக்வூட் தோட்டத்தைச் சேர்ந்த கந்தன் ஆண்டி (86 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ​நேற்று மதியம் 2 மணி முதல் நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வந்தது. இதன் போது மின்னல் தாக்கத்திற்கு உள்ளான முதியவர் படுகாயமடைந்த நிலையில், ‘1990’ அவசர ஆம்புலன்ஸ் சேவை மூலம் உடனடியாக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ​எனினும், வைத்தியசாலையில் அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

டி சந்ரு.திவாகரன் இந்தியாவின் துணை ஜனாதிபதி சீ.பி.இராதாகிருஸ்ணன் இரண்டு நாட்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் இன்றைய தினம் (20.04.2026) காலை 11.00 மணியளவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். வுரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்த இந்திய துணை ஜனாதிபதி சீ.பி.இராதாகிருஸ்ணனை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆலய அறங்காவலர் சபை தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து ஆலயத்தின் பிரதம குருக்கள் விசேட பூஜை வழிபாடுகளை முன்னெடுத்ததுடன் துணை ஜனாதிபதிக்கு ஆசீர்வதமும் வழங்கப்பட்டது.இந்திய துணை ஜனாதிபதியின் சீதையம்மன் ஆலய விஜயத்தை முன்னிட்டு ஆலய நிர்வாக சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்…

Read More

இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதி அவர்களை நுவரெலியாவில் பிரதி அமைச்சர் பிரதீப் அவர்கள் வரவேற்றார் . இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் நுவரெலியாவில் உத்தியோகபூர்வமாக வரவேற்றார். இன்றைய தினம் (20/04) விஜயத்தினை மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி அவர்களும் பிரதி அமைச்சர் அவர்களும் இந்திய அரசின் நன்கொடையின் ராகலை லிடெஸ்டேல் சூரியகாந்தி தோட்ட பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டு திட்டங்களையும் பார்வையிட்டார்.

Read More

போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம் திரட்டும் நோக்கில், தனது மனைவியை அண்டை வீட்டார் ஒருவருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரையும், அந்தப் பெண்ணைத் துஷ்பிரயோகம் செய்த மற்றுமொருவரையும் கைது செய்ய அலவதுகொட பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மூன்று பிள்ளைகளின் தாயான 35 வயதுடைய குறித்த பெண், கணவனின் இச்செயலால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கண்டி ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதன்போது அங்கிருந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் அவர் காப்பாற்றப்பட்டு, அக்குரண பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காகப் பேராதனை போதனா வைத்தியசாலையின் மனநலப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், அங்கு வைத்தியர்களிடம் வழங்கிய வாக்குமூலத்திலேயே இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின்படி: போதைப்பொருளுக்கு அடிமையான அவரது கணவர், சில வருடங்களுக்கு முன்னர் தனது சிறுநீரகத்தை 11 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்து, அந்தப் பணத்தையும் போதைப்பொருளுக்கே செலவிட்டுள்ளார். தற்போது போதைப்பொருள் வாங்கப்…

Read More

ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவாட் மாகாணம் மற்றும் ஹொக்கைடோ பகுதிகளில் 3 மீற்றர் உயரம் வரையிலான அலைகள் தாக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளதுடன், அப்பகுதி மக்களை உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். பாதிப்புகள் குறித்து மதிப்பிட்டு வரும் அதிகாரிகள், நிலமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன் அவசர சேவைகளையும் தயார் நிலையில் வைத்துள்ளனர். ஜப்பான் விடுத்துள்ள ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுனாமி அலைகள் ஏற்கனவே கடலோரப் பகுதிகளை நெருங்கி வருகின்றன, இவை மீண்டும் மீண்டும் தாக்கக்கூடும். எனவே, மக்கள் தாமதமின்றி வெளியேறி, எச்சரிக்கைகள் விலக்கிக்கொள்ளப்படும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். அலைகள் கணிக்கப்பட்ட நேரத்தை விட முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ வரக்கூடும், மேலும் எதிர்பார்க்கப்பட்டதை விட உயரமாகவும் இருக்கலாம். கடலோரப் பகுதிகள் மற்றும் நீர் பெருக்கெடுத்து ஓடக்கூடிய ஆற்று…

Read More

செ,திவாகரன் நுவரெலியா கிரகரி வாவியில் (Gregory Lake) ஞாயிற்றுக்கிழமை (19) அன்று இரண்டு படகுகள் மோதியதில் ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் கவிழ்ந்த படகில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் நீரில் விழுந்து தத்தளித்த நிலையில் நுவரெலியா பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் உயிராபத்து எதுவும் இன்றி பாதுகாக்க சிறுசிறு காயங்களுடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த இரு படகுகளை இயக்கிய சாரதிகளை நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணையின் பின்னர் நாளை (20) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Read More