Author: Thana
2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அதற்கு அடுத்த நாளான மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, முன்னதாக மே மாதம் 2ஆம் திகதி வழங்கப்படவிருந்த விடுமுறையைத் திருத்தம் செய்து இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானத்திற்கு இணங்க, இம்முறை வெசாக் வாரம் மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் குவைட் விமான சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளதாக குவைட் அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு இணங்க, குவைட்டின் தேசிய விமான சேவையான குவைட் எயார்வேஸ் மற்றும் தனியார் விமான சேவையான ஜசீரா எயார்வேஸ் ஆகியன தமது போக்குவரத்து நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கவுள்ளன. பத்துக்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளுக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குவைட் அரசாங்க தகவல் தொடர்பு நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குவைட் சர்வதேச விமான நிலையம் முழுமையாக திறக்கப்பட்டுள்ள நிலையில், விமான சேவைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (24) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை தற்போது ஒன்லைன் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும். இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் இதற்கான இணையத்தளம் செயலிழக்கப்படும் என்பதால், அதன் பின்னர் விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பம் கோரலுக்கான காலப்பகுதி எக்காரணம் கொண்டும் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதுவரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா ரயில் இன்று (24) காலை தடம்புரண்டுள்ளது. வாதுவை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் குறித்த ரயில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இதனால் கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காவத்தை நீலகாமம் முதலாம் இலக்கத் தோட்ட சம்பவம் “தோட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்”
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் முதலாம் இலக்கத் தோட்டத்தில், தோட்டத் தொழிலாளர் ஒருவரால் அமைக்கப்பட்ட வீட்டை மர்ம கும்பல் ஒன்று உடைத்து தரைமட்டமாக்கியுள்ளமைக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) தலைவர் செந்தில் தொண்டமான் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் , “தோட்டங்களில் பாதுகாப்புக் கடமைகளுக்கென பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் என கூறிக்கொண்டு வந்த சில இனந்தெரியாத நபர்களே, இவ்வாறு வீட்டை அடித்து உடைத்துள்ளனர் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் குறித்துக் காவத்தை தோட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ள செந்தில் தொண்டமான், அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறினால் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக இ.தொ.கா கடும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் எனவும் எச்சரித்துள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையில் முறைப்பாடு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க இ.தொ.கா வலியுறுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் முக்கிய உள்ளூர் T20 கிரிக்கெட் தொடரான லங்கா பிரீமியர் லீக் ( Lanka Premier League (LPL) ) 2026 போட்டிகள் ஜூலை 10 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. ஆறாவது தடவையாக நடைபெறவுள்ள இந்த போட்டித் தொடர் நான்கு முக்கிய மைதானங்களில் நடைபெறவுள்ளது: * கொழும்பு, எஸ்.எஸ். ஸி. மைதானம் (Singhalese Sports Club Ground) * கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானம் (R. Premadasa International Cricket Stadium) * கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் (Pallekele International Cricket Stadium) * தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானம் (Rangiri Dambulla International Cricket Stadium) இதற்கிடையில், வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்யும் இணையத்தளம் 4ஆம் திகதி திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடரானது, LPL-இன் உரிமையாளரான இலங்கை கிரிக்கெட் (SLC)…
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான தற்போதைய போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிப்பு -ட்ரம்ப்
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான தற்போதைய போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. வியாழக்கிழமை (23) அன்று அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய மற்றும் லெபனான் தூதர்களுக்கு இடையே நடைபெற்ற சந்திப்பு மிகவும் வெற்றிகரமாக அமைந்தது என்றும் அமெரிக்க அதிபர் சுட்டிக்காட்டினார். கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய 10 நாள் போர் நிறுத்தம், அடுத்த திங்கட்கிழமை முடிவடைய இருந்த நிலையில், இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் அதைத் தொடர முடிந்துள்ளது.
கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் இன்றும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும். நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். தென் மாகாண கரையோரப் பிராந்தியங்களிலும் அத்துடன் களுத்துறை மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. இதேவேளை, கடல் பிராந்தியங்களில் களுத்துறை தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில்…
லுணுகலை பகுதியில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 67 வயதுடைய, கங்கசறி புற ரெந்தபொல ஹொப்டன் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசறை–லுணுகலை பிரதான வீதியின் ரெந்தபொல 21வது கட்டைப் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. லுணுகலை பகுதியிலிருந்து ஹொப்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி, ரெந்தபொல 21வது கட்டை வளைவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து நேரத்தில் சாரதி மட்டும் வண்டியில் இருந்துள்ளார். கடுமையாக காயமடைந்த சாரதியை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு ஹொப்டன் வைத்தியசாலைக்கு அனுப்பினர். அங்கு முதற்கட்ட சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்துக்கான மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R.T.பசறை
குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (23) பிற்பகல் 4:00 மணி முதல் நாளை (24) பிற்பகல் 4:00 மணி வரை இந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அமுலில் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, பின்வரும் பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: குருநாகல் மாவட்டம்: ரிதிகம பிரதேச செயலகப் பிரிவு. இரத்தினபுரி மாவட்டம்: குருவிட்ட, கலவானை, இரத்தினபுரி, நிவித்திகலை, பெல்மதுளை மற்றும் எஹலியகொடை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.