Author: Thana

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: விறுவிறுப்பான வாக்குப்பதிவு! காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள் சென்னை | ஏப்ரல் 23, 2026 தமிழகத்தின் 16-வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முக்கியத் தகவல்கள்: ஒரு பார்வை தமிழக தேர்தல் களத்தில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் புள்ளிவிவரங்கள் இதோ: விவரம் எண்ணிக்கை மொத்த தொகுதிகள் 234 களத்தில் உள்ள வேட்பாளர்கள் 4,023 மொத்த வாக்காளர்கள் 5.73 கோடி முதல்முறை வாக்காளர்கள் 14.59 லட்சம் மொத்த வாக்குச் சாவடிகள் 75,064 Export to Sheets சிறப்பு வாக்குச் சாவடிகள் வாக்காளர்களை ஊக்குவிக்கவும், தடையற்ற வாக்குப்பதிவை உறுதி செய்யவும் தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு வாக்குச் சாவடிகளை அமைத்துள்ளது: மாதிரி வாக்குச் சாவடிகள்: 249 அனைத்து மகளிர் வாக்குச்…

Read More

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர, கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிப்பு. நுவரெலியாவில் நபரொருவருக்கு துப்பாக்கி முனையில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாக, நுவரெலியா காவல்துறையினரால் (21) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர, (22)  புதன்கிழமை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி புஷ்பிக ஜெயதாச முன்பும் ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேக நபருக்கு ரூ. 10 லட்சம் தனிநபர் பிணையும், ரூ. 25,000 ரொக்கப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேக நபருக்கு வெளிநாட்டு பயணத்தடை உத்தரவையும் பிறப்பித்தார். முன்வைக்கப்பட்ட அனைத்து சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை பிணையில் விடுவித்து உத்தரவிட்டதுடன் இந்த வழக்கு செப்டம்பர் மாதம் (14) ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் நீதவான் அறிவித்தார் அதுவரை துப்பாக்கியை வழக்குப் பொருளாக நீதிமன்றக் காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார் அத்துடன் சந்தேக நபரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் அவர்…

Read More

மஸ்கெலியாவில் பிரதேச செயலகம் அமைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் ! – பிரதேச சபைத் தலைவரைச் சந்தித்து  மலையக அரசியல் அரங்கத்தினர் வேண்டுகோள் பிரதேச செயலக , கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் எல்லை மீள்நிர்ணய குழு அமைக்கப்படவுள்ள நிலையில் ஏற்கனவே உடன்பட்டதன்படி மஸ்கெலியா பிரதேச செயலகத்தை அமையப் பெறுவதை வலியுறுத்தும் வகையில் மஸ்கெலியா பிரதேச சபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுங்கள் எனும் கோரிக்கையை மலையக அரசியல் அரங்கம் விடுத்துள்ளது. மலையக அரசியல் அரங்கத்தினருக்கும் மஸ்கெலியா பிரதேசசபைத் தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு குறித்து மலையக அரசியல் அரங்கம் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2016 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரைரணையில் அம்பகமுவ பிரதேச செயலகத்தை நோர்வுட், அம்பகமுவ, மஸ்கெலியா என மூன்றாகப் பிரிக்க வேண்டும் என முன் மொழிவு செய்யப்பட்டது. எனினும் அப்போது நடைமுறையில் இருந்த 2012 ஆம் ஆண்டு எல்லை மீள்நிர்ணயம் தீர்மானத்துக்கு…

Read More

காவத்தை சம்பவம் மிலேட்சத்தனமானது என்று கூறினார் முன்னாள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம். காவத்தை நீலகாமம் தோட்டம் இலக்கம் ஒன்று பிரிவில் பெருந்தோட்ட மலையக குடியிருப்பொன்றினை காடையர் மர்ம கும்பல் சென்று தாக்கி உடைத்துள்ளது. இந்த செயல் காவத்தை சம்பவம் மிலேட்சத்தனமானது என்று கூறினார் முன்னாள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ பழனி திகாம்பரம். காவத்தை நீலகாமம் தோட்டம் இலக்கம் ஒன்று பிரிவில் பெருந்தோட்ட மலையக குடியிருப்பொன்றினை காடையர் மர்ம கும்பல் சென்று தாக்கி உடைத்துள்ளது. இந்த செயல் மிலேட்சத்தனமானது. இதனை வன்மையாக கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது முதல் முறையல்ல.இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாகவே இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன. சம்பவம் நடக்கின்றபோது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுவதும் பின்னர் கிடப்பில் போடப்படுவதும் வழமை. முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன்…

Read More

காவத்தை, நீலகமாம் தோட்டப் பிரதேசத்தில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை உடைத்து, அதில் வசித்தவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் கறுப்பு ஆடை அணிந்த கும்பலைச் சேர்ந்த ஒன்பது பேர் காவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் உடனடியாக செயல்பட்ட பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபரை தொடர்புகொண்டு உரையாடியதனை தொடர்ந்து கைது நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவும், பெருந்தோட்டப் பகுதிகளில் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுக்கவும் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

இலங்கை அரசாங்கம் வெளிநாடு ஒன்றிற்கு வழங்க வேண்டிய கடன் தவணைப் பணமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர், சைபர் ஹேக்கர் (Hacker) ஒருவரின் கைக்குச் சென்றுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார். பின்னணி என்ன? அரசாங்கம் குறிப்பிட்ட ஒரு நாட்டிற்கு 22.9 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைச் செலுத்த வேண்டியுள்ளது. இதற்கான கடன் தவணையாக 2025 டிசம்பர் முதல் 2026 ஜனவரி 31 வரையான காலப்பகுதிக்குள் 2.5 மில்லியன் டொலர் தொகையை திறைசேரி செலுத்தியுள்ளது. இருப்பினும், இந்தத் தொகை உரிய கடன் வழங்குநருக்குச் சென்றடையாமல், இடைநடுவில் கணினி ஹேக்கர் ஒருவரால் திசைதிருப்பப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. விசாரணைகள் தீவிரம் இந்த பாரிய நிதி முறைகேடு தொடர்பாக நிதி அமைச்சின் வெளிநாட்டு…

Read More

டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார். டித்வா சூறாவளியால் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்த வீடுகளில் வசித்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை கையளிக்கும் பணிகள் தொடர்பாக (22) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். முழுமையாக சேதமடைந்த வீடுகளில் வசித்தவர்களுக்குப் புதிய வீடொன்றை வழங்குவது அல்லது வீடொன்றை கொள்வனவு செய்வதற்காக 50 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை வழங்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. அந்த இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இன்னமும் முகாம்களில் வசித்து வரும் மக்களுக்கு, புதிய வீடுகள்…

Read More

மலையகத்தின் பல்வேறு இடங்களில் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்டைந்துள்ளது. நேற்று 21 ம் திகதி மதியம் ஆரம்பித்த கன மழை காரணமாக ஹட்டன் ,நோர்வூட் ,போர்ட்டைஸ் ,எல்பியன் போன்ற பகுதிகளில் வெள்ளப்பெறுகினால் லயன் குடியிருப்புக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு ,நாவலப்பிட்டி நகரிலும் வெள்ளநீர் நிரம்பியதால் பயணிகள்பாதிப்புக்குள்ளாகினர் மேலும் பசறை பகுதியில் தற்போது நிலவி வரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பாக மாலை மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக தோட்ட பகுதிகளில் வடிகால் அமைப்புகளை தோட்ட நிர்வாகம் சரியாக சீரமைக்கத்தாதன் காரணகமாக மழை வெள்ளம் வீடுகளுக்குள் வருவதை தவிர்க்கமுடியாத விடயமாக இருக்கின்றது என தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர் .

Read More

ஈரான் மீதான தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு. பாகிஸ்தானின் மத்தியஸ்த கோரிக்கையை ஏற்று, போர்நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது. உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறைக்கவும், உயிர்ச்சேதங்களைத் தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Read More

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, களுத்துறை, வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு  வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Read More