Author: Thana
கட்டிட வரைபடத்திற்கு சட்டவிரோத அனுமதி: நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது முறையற்ற விதத்தில் கட்டிட வரைபடம் ஒன்றிற்கு அனுமதி வழங்கியமை மற்றும் விண்ணப்பதாரர் ஒருவருக்கு சட்டவிரோத அனுகூலங்களைப் பெற்றுக்கொடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். **விசாரணையும் கைது நடவடிக்கையும்:** சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல், சட்டவிரோதமான முறையில் கட்டிடத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியதாக தவிசாளருக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றிருந்தன. இது தொடர்பாக நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்ட இரகசிய விசாரணைகளைத் தொடர்ந்தே இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தவிசாளர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, வரம்புகளை மீறி விண்ணப்பதாரர் ஒருவருக்கு சாதகமாக செயற்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அரச விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள தவிசாளரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு…
ஹட்டனில் அதிரடிச் சோதனை: சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்தோருக்கு எதிராக வழக்கு!
ஹட்டனில் அதிரடிச் சோதனை: சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்தோருக்கு எதிராக வழக்கு! சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஹட்டன் நகர் பகுதிகளில் மக்கள் புத்தாண்டு கொள்வனவுகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இன்று (07) விசேட அதிரடிச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அம்பகமுவ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் சுகாதாரப் பிரிவினர் இணைந்து இந்த திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்தனர். இதன் பொது சுகாதார விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. நகரில் உள்ள சிற்றுண்டிச்சாலைகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பேக்கரி உணவகங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் போது, மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறிய வகையில் உணவுப் பொருட்களைக் கையாண்ட பல வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டன. குறிப்பாக கலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை. * சுற்றுச்சூழல் மற்றும் சமையலறைகள் அசுத்தமாக…
“ஈரானை ஒரே இரவில் தரைமட்டமாக்கும் வல்லமை அமெரிக்காவிடம் உள்ளது” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைவதை முன்னிட்டு அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இன்று இரவு 8 மணி: இறுதி எச்சரிக்கை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், ஈரானுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (ஏப்ரல் 07) இரவு 8:00 மணியுடன் நிறைவடைவதாகக் குறிப்பிட்டார். “இன்று இரவு 8:00 மணிக்குள் எங்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உடன்படிக்கைக்கு ஈரான் வரத் தவறினால், அந்த நாட்டின் மீது மிகக்கடுமையான மற்றும் அழிவுகரமான தாக்குதல்கள் நடத்தப்படும். நள்ளிரவுக்குள் ஈரானின் பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் முழுமையாக அழிக்கப்படும். ஈரான் மீண்டும் கற்காலத்திற்குத் தள்ளப்படும்,” என அவர் எச்சரித்தார். இன்றைய காலக்கெடுவுக்குப் பிறகு ஈரானுக்கு மீண்டும் எந்தவொரு அவகாசமும் வழங்கப்பட மாட்டாது என்றும், இந்தப்…
சித்திரப் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட பேருந்து சேவை
சித்திரப் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட பேருந்து சேவையை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் இந்த பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தூர இடங்களுக்காக நாளொன்றுக்கு மேலதிகமாக சுமார் 250 பேருந்துகள் வரை சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை குறிப்பிட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, பயணிகளின் தேவைக்கேற்ப மேலும் பல பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்தவும் தயார் நிலையில் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை இந்த விசேட பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படும் அதேவேளை, சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் புத்தாண்டு…
இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 தொடர்பான இறுதி அறிக்கையை, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எம்.டி.எஸ்.டி. கருணாரத்ன , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். இந்தத் தொகை மதிப்பு இலங்கையின் 15 ஆவது குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பாகும் . தேசிய அளவிலான தரவுச் சேகரிப்பிற்காக முதல்முறையாக டெப்லெட் கணினிகள் மற்றும் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டமை இதன் விசேட அம்சமாகும். அதன்படி, 15,000 டெப்லெட் கணினிகள் மற்றும் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தித் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இதன் மூலம் தரவுச் சேகரிப்பை விரைவுபடுத்தவும், பிழைகளைக் குறைக்கவும், பெறப்பட்ட தரவுகளை நேரடியாகத் திணைக்களத்தின் சேர்வர் கணினிகளுக்குப் பதிவேற்றவும் முடிந்தது. அதனைத் தொடர்ந்து தரவுப் பகுப்பாய்வு மற்றும் அறிக்கை தயாரிப்புப் பணிகள் வினைத்திறனாக மேற்கொள்ளப்பட்டன. இலங்கையில் அரச நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும்…
மஸ்கெலியா, சியம்பலாண்டுவ மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். சூரியனின் தோற்ற வடதிசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.…
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி இந்தியாவில் உயிர்மாய்ப்பு இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி சென்னை போரூர் அருகே உள்ள பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள தனது அறையில் உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. நடிகை உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த பொலிஸார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நடிகை சுபாஷினி உயிர்மாய்ப்பு செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கணவருடன் காணொளி தொலைபேசி அழைப்பில் பேசிய பிறகு அவர் உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இதனால், குடும்பத்தகராறு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் இந்த விபரீத முடிவை எடுத்தாரா? என்றும் பொலிஸார் விசாரித்து வருகிறார்கள். பெங்களூரில் கணவருடன் வசித்து வந்த நடிகை சுபாஷினி படப்பிடிப்புகாக வந்த இடத்தில் உயிர்மாய்ப்பு செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை…
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த புனித நாளில், நம் உள்ளங்களிலும், குடும்பங்களிலும் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் சமாதானம் நிறைந்திருக்கட்டும்
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த புனித நாளில், நம் உள்ளங்களிலும், குடும்பங்களிலும் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் சமாதானம் நிறைந்திருக்கட்டும். பழைய சோகங்களையும் கடந்துவிட்டு, புதிய ஒளியையும் நம்பிக்கையையும் வாழ்வில் காண்போம். உங்கள் வாழ்க்கையில் சாந்தியும் ஆரோக்கியமும் நிரம்பி, இந்த ஈஸ்டர் உங்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்கட்டும். – ரெவ். பாஸ்டர் சிமியோன் அலெக்ஸாண்டர் ✨
டி.சந்ரு செ,திவாகரன் நுவரெலியா கிரகரி வாவியில் மிதக்கும் இனந்தெரியாத சடலம். நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியில் இனம்தெரியாத ஒருவரின் சடலமொன்று இனம்காணப்பட்டுள்ளது என நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் சடலமொன்று மிதப்பதாக இன்று (06) திங்கட்கிழமை காலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். தொடர்ந்து, நுவரெலியா மாவட்ட நீதவான் ஸ்தலத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், சடலம் வாவியில் இருந்து மீட்கப்படும் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபர் வாவியில் பாய்ந்து உயிரிழந்தாரா? அல்லது அந்த நபரை எவராவது கொலை செய்து வாவியில் எறிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மேலும், மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு விலைகள் அதிரடியாக உயர்வு! கொழும்பு: நாட்டில் நிலவும் தற்போதைய சந்தை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) மற்றும் லாஃப்ஸ் (Laugfs) நிறுவனங்கள் தமது சமையல் எரிவாயு விலைகளை அதிகரித்துள்ளன. லிட்ரோ (Litro Gas) எரிவாயு விலை விபரம்: லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, எரிவாயு கொள்கலன்களின் புதிய விலைகள் பின்வருமாறு: 12.5 கிலோ கிராம்: ரூ. 775 அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூ. 4,765. 5 கிலோ கிராம்: ரூ. 308 அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூ. 1,910. 2.3 கிலோ கிராம்: ரூ. 140 அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூ. 890. லாஃப்ஸ் (Laugfs Gas) எரிவாயு விலை விபரம்: அதேபோல், லாஃப்ஸ் கேஸ் பிஎல்சி நிறுவனமும் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் விலைத் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. கொழும்பு மாவட்டத்திற்கான…