Author: Thana

தெற்கு அதிவேக வீதியில் வெலிப்பன்ன பகுதிக்கு அருகில், முன்னால் பயணித்த கெண்டைனருடன் பின்னால் வந்த லொறி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (06) முற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்தார். தொடாங்கொடை மற்றும் வெலிப்பன்ன ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட 40 ஆவது மைல்கல் அருகே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தைத் தொடர்ந்து மாத்தறை நோக்கிய திசையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Read More

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று (6) காலை 8 மணியுடன் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறு அந்த சங்கம் கோரியிருந்தது. இந்நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை (09) பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று அறிவித்திருந்தார். உலக சுகாதார அமைப்பின் மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காகத் தாம் இன்று இந்தியா புறப்படவுள்ளதாகவும், மீண்டும் நாடு திரும்பியதும் குறித்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் நேற்று அத தெரண செய்திகளுக்கு தெரிவித்தார். இதனையடுத்து தமது சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Read More

தெஹியோவிற்ற தமிழ் மகா வித்தியாலயம்: 2024/2025 கல்வி ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், தெஹியோவிற்ற தமிழ் மகா வித்தியாலய (KG/DEHI / DEHIOWITA TAMIL MAHA VIDYALAYA) மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். வெளியாகியுள்ள பெறுபேறுகளின் முக்கிய சிறப்பம்சங்கள் வருமாறு: கலைப்பிரிவு (Arts) கலைப்பிரிவில் மாணவர்கள் மிகச்சிறந்த அடைவுகளைப் பதிவு செய்துள்ளனர்: எஸ். சச்சினி கிரிஷானி (S. SACHINI KRISHANI) என்ற மாணவி 1.7923 என்ற உயர் Z-புள்ளியைப் பெற்று, மாவட்ட மட்டத்தில் 78 வது இடத்தையும் அகில இலங்கை மட்டத்தில் 1508 வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். எஸ். செனுலி லக்மினி (S. SENULI LAKMINIE) என்ற மாணவி 1.3983 Z-புள்ளியுடன் அகில இலங்கை மட்டத்தில் 6296 வது இடத்தைப் பெற்றுள்ளார். மேலும் எஸ். ரேனோஷியா (1.542 Z-புள்ளி), கே. சிதுர்ஷிகா (1.1667 Z-புள்ளி) போன்றோரும் சிறந்த தரவரிசைகளைப் பெற்றுள்ளனர். கலைப்பிரிவில்…

Read More

இன்றைய தலைமுறைக்கான அரசியல் அமைப்பாக தொழிலாளர் தேசிய முன்னணி மறுசீரமைக்கப்பட்டு வருகிறது-பிரதி பொதுச் செயலாளர் சுப்பையா கமலதாசன். இன்றைய தலைமுறைக்கான அரசியல் அமைப்பாக தொழிலாளர் தேசிய முன்னணி மறுசீரமைக்கப்பட்டு வருகிறது என பிரதி பொதுச் செயலாளர் சுப்பையா கமலதாசன் தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்திற்கான அமைப்பாளர்களுக்கு நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே தெரிவித்துள்ளார். அவர் மேலும் உறையாற்றும்போது, நுவரெலியா மாவட்டத்திற்கு அடுத்ததாக மலையக மக்கள் அதிகமாக வாழும் மாவட்டம் பதுளை மாவட்டமாகும். அதனடிப்படையில் தொழிலாளர் தேசிய முன்னணி பதுளை மாவட்டத்தில் அரசியலுக்கு நுவரெலியா போன்றே பதுளைக்கும் சம வாய்ப்பு வழங்கியுள்ளது. கட்சி பதிவுக்கு முன்பதாகவே அரசியல் உயர்மட்ட குழுவில் பதுளை பிரதிநிதித்துவப்படுத்தி வாய்ப்பு வழங்கியது. அதன்பின்னர் ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் அதற்கான முக்கியத்துவத்தினை வழங்கியது. ஆனால் பதுளை மாவட்டத்திற்கான மக்கள் பிரதிநிதி உங்களில் இருந்து வர வேண்டுமே தவிர இறக்குமதி செய்யப்படகூடாது என்பதே தலைவரின் எதிர்ப்பார்ப்பாகும். அதற்கான முயற்சிகளையே கட்சியாகவும், கூட்டணியாகவும்…

Read More

கினிகத்தேனை கெனில்வத்தை தோட்டத்தில் மீன்பிடி சிறுத்தை ஒன்று சடலமாக மீட்பு. கினிகத்தேனை கெனில்வதை தோட்ட பகுதியில் உயிரிழந்த நிலையில் மீன்பிடி பூனை சிறுத்தை (Fishing Cat) ஒன்றின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத்தில் பணியாற்றி கொண்டிருந்த வேளையில் குறித்த சிறுத்தையின் சடலத்தைக் கண்டு உரிய அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர். உயிரிழந்த சிறுத்தையின் உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்பதுடன், மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது குறித்து கினிக்கத்தேன பொலிசார் நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலயில் , சம்பவம் நடந்த இடத்திற்கு நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரி ஆர் எம் பி ரத்நாயக்க குழுவினர் சென்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுத்தையின் உடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல மிருக வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மஸ்கெலியா நிருபர்

Read More

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். சூரியனின் தோற்ற வடதிசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம்…

Read More

இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் “உயிர்த்த ஞாயிறு” (Easter Sunday) பெருவிழா இன்று (05) உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. முக்கிய அம்சங்கள்: மீட்பின் விழா: மனித குலத்தைப் பாவத்திலிருந்து மீட்பதற்காகச் சிலுவையில் உயிர் நீத்த இயேசு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை இவ்விழா பறைசாற்றுகிறது. தவக்காலம் நிறைவு: கடந்த 40 நாட்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த தவக்காலம் இன்றைய தினத்துடன் நிறைவுக்கு வருகின்றது. நள்ளிரவு ஆராதனைகள்: ‘அல்லேலூயா’ சனிக்கிழமை ஆராதனைகள் நேற்று நள்ளிரவு நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் நடைபெற்றன. கொழும்பு மறைமாவட்ட ஆயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் புனித லூசியா கதீட்ரலில் விசேட ஆராதனை இடம்பெற்றது. விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்: உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களுக்கு பலத்த பொலிஸ் மற்றும் முப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த தேசிய கத்தோலிக்க மக்கள்…

Read More

இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பதற்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன மற்றும் இரத்தினபுரி ஆகிய இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலாம் கட்டத்தின்  கீழ் ‘அவதானத்துடன் இருக்குமாறு’ அறிவுறுத்தப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல், இன்று (04) மாலை 5.00 மணி முதல் நாளை மாலை 5.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Read More

நோர்வூட் கெசல்கமு ஓயாவில் மாணவன் நீரில் மூழ்கி மாயம். காசல்ரி நீர்த்தேக்கத்தில் நீரை வழங்கும் பிரதான கங்கையான கெசல்கமுவ ஓயாவில் நீராட சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் . இவ்வாறு காணாமல் போன சிறுவன் நோர்வூட் தோட்டத்தை சேர்ந்த 16 வயது மாணவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று மதியம் கெசல்கமுவ ஓயாவில் உள்ள ‘சில்வர் வாலா’ என்ற இடத்தில் இடம் பெற்று உள்ளது. தனது நண்பர்கள் சிலருடன் குளிக்கச் சென்ற நிலையில் அங்கு அவர் நீரில் மூழ்குவதைக் கண்ட அவரது நண்பர்கள், அவரைக் காப்பாற்ற கடுமையாக முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் நண்பர்கள் வழங்கிய தகவலின் பேரில், நோர்வூட் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, உள்ளூர் மக்களின் உதவியுடன் காணாமல் போன மாணவரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். விடுமுறை நாளில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கச் சென்ற இந்த சிறுவனின் துரதிர்ஷ்டவசமான…

Read More

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படும் நீர்வெட்டு இன்றும் (04) தொடர்கிறது. நுகர்வோரின் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடையை 24 மணித்தியாலங்களில் இருந்து 18 மணித்தியாலங்களாகக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நேற்று (03) மாலை அறிவித்தது. அதன்படி, கால அட்டவணைக்கு அமைவாக எதிர்வரும் 10ஆம் திகதி வரை அந்தப் பகுதிகளில் அவ்வப்போது நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளது. பாதுக்கை, ஹோமாகம, பெலன்வத்தை மற்றும் பன்னிப்பிட்டிய உள்ளிட்ட சில பகுதிகளில் இந்தத் திட்டமிடப்பட்ட நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய முதற்கட்டத்தின் கீழ், பாதுக்கை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8.00 மணி முதல் நேற்று பிற்பகல் 2.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டது. இதேவேளை, ஹோமாகம பகுதியில் நேற்று (03) இரவு 8.00 மணி முதல் இன்று…

Read More