Author: Thana
மலையக மக்களின் காணி உரிமையை வலியுறுத்தி பதுளையில் ஆர்ப்பாட்டம் பதுளை மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் (02) பதுளையில், ஊவா மாகாண சபை முன்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான சிவில் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மலையக மக்களுக்கு நிலையான காணி உரிமை வழங்க வேண்டும் எனவும், மாடி வீடுகள் அல்லாது தனி வீடுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை முன்வைத்தனர். அத்துடன், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு மக்களை மீண்டும் அனுப்ப வேண்டாம், தற்காலிக முகாம்களில் தங்கி வரும் பெண்கள் மற்றும் சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று மாகாண ஆளுநரின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்டத்தில் இன்று நிலவிய சீரற்ற வானிலை மற்றும் பலத்த மழை காரணமாக, நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லபுகலை கீழ்பிறிவு தோட்டத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று மாலை நுவரெலியா பகுதியில் கடும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதன்போது, மாலை 4 மணி அளவில் லபுகலை கீழ்பிறிவு தோட்டப்பகுதியில் இருந்த பெரிய மரம் ஒன்றின் மீது பலத்த இடி மின்னல் தாக்கியுள்ளது. இதனால் அந்த மரம் வேரோடு சாய்ந்து அருகில் இருந்தவர்கள் மீது விழுந்துள்ளது. மரம் முறிந்து விழுந்த போது அதன் கிளைகளுக்குள் சிக்கி, அந்த இடத்தில் இருந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். உடனடியாக செயற்பட்ட தோட்ட மக்கள் மற்றும் அங்கிருந்தவர்கள், காயமடைந்த இருவரையும் மீட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நுவரெலியா…
நுவரெலியா மேல் நீதிமன்றம் நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை. நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் கொலை குற்றம் சுமத்தப்பட்டிருந்த மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நுவரெலியாமேல் நீதிமன்றத்தில் மிக நீண்ட விவாதத்திற்கு பின் உயர் நீதிமன்ற நீதிபதி நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மூன்று வழக்குகளில் குற்றச்சாட்டுகளுக்கும் அனைத்து பிரதிவாதிகளும் குற்றவாளிகள் எனக் கண்டறிந்து நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய (02) வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். அதன்படி 1998-ஆம் ஆண்டு நானுஓயா டெஸ்போட் பகுதியில் வைத்து டிக்கோயா பகுதியைச் சேர்ந்த 57 வயது நபர் ஒருவரை கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கும்போது லிந்துலை மெரயா தோட்டத்தை சேர்ந்த பொன்னம்பலம் சதீஷ் என்ற 47 வயது குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் 2009-ஆம் ஆண்டு பட்டிபொல பொலிஸ் பிரிவில் தனது தாய், மனைவி மற்றும் குழந்தையைக் கொலை செய்த குற்றத்திற்காக…
கொத்தமலைல பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட இரம்பொடை கேரண்டி எல்லா பகுதியில் 150 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம். குறித்த சம்பவம் நேற்று இரவு 12:00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது இச்சம்பவத்தில் ஐவர் காயமடைந்த நிலையில் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன குறித்த நபர்கள் வெளிமடை வைத்தியசாலைக்கு சென்று மீண்டும் ரம்பொட பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய நிலையில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் தாய் தந்தை மற்றும் சிறு குழந்தைகள் இருவர் மேலும் ஒருவர் மொத்தமாக 5 பேர் காயம் அடைந்துள்மை குறிப்பிட தக்கது. விபத்து சம்பந்தமான மேலதிக மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர். கௌசல்யா.
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பழைய உடப்புசல்லாவ வீதியில் வனப் பாதுகாப்புத் துறை (Forest Department) காரியாலயத்திற்கு அருகில் இன்று (01) மாலை குப்பை லொறி ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றின் மதில்சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த லொறி நுவரெலியா மாநகரசபைக்கு சொந்தமான குப்பை அகற்றும் லொறியொன்று எனவும் தெரியவந்துள்ளது. இதன் போது லொறியின் சாரதியும் நடத்துனர் இருவரும் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து காரணமாக வீட்டு மதில்சுவர் மற்றும் வீட்டிற்கும் பலத்த சேதமேற்பட்டுள்ளதுடன் லொறியின் முன்பகுதியும் கடுமையாக சேதமடைந்துள்ளது. விபத்து தொடர்பாக நுவரெலியா போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்,
2ம் திகதி நாளை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு சந்தித்து உரையாட உள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரவுக்கும், கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் சமீபத்தில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்ய பட்டுள்ளதாக தெரிய வருகிறது. கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம் எம்பி, வே. இராதாகிருஷ்ணன் எம்பி மற்றும் கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர்கள் சிலரும் இந்த சந்திப்பில் பங்கு பெறுவார்கள் எனவும், மலையக மக்கள் தொடர்பான அவசர பிரச்சினைகள் மற்றும், நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் ஆகியவை தொடர்பில் உரையாட உள்ளதாக மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
தித்வா புயலால் முழுமையாக பாதிப்படைந்த மலையக மக்களுக்கு ரூ. 50 இலட்சம் பெறுமதியான வீடுகளும் காணிகளும் வழங்கப்படும்!
தித்வா புயல் பாதிப்பு: மலையக மக்களுக்கு ரூ. 50 இலட்சம் பெறுமதியான வீடுகளும் காணிகளும் வழங்கப்படும்! கொழும்பு: தித்வா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு 50 இலட்சம் ரூபாவிற்கும் குறையாத பெறுமதியைக் கொண்ட வீடுகள் மற்றும் காணிகள் வழங்கப்படும் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி உறுதியளித்துள்ளார். மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவின் (Civil Society Coalition for Hill Country Reconstruction) பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியாகும் எனத் தெரிவித்த ஆணையாளர் நாயகம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் உரிய முறையில் காணி உரிமத்துடன் கூடிய வீடுகள் வழங்கப்படுவதை உறுதி செய்யப்போவதாகக் குறிப்பிட்டார். இதேவேளை, மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவின் அங்கத்தவர்கள் பிரதமரையும் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது, மலையக மக்களுக்கான…
வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய, பேருவளைக்கு அப்பால் ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகிலிருந்து 300 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்று (01) காலை குறித்த மீன்பிடிப் படகு திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டு முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது, படகிலிருந்த 298 உரப் பைகளில் இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட தெரிவித்தார். குறித்த படகு இலங்கைக்குச் சொந்தமான பலநாள் மீன்பிடிப் படகு எனவும், அதிலிருந்த 6 சந்தேகநபர்களும் தொடர்பாடல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் சட்டத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படைத் தளபதி மேலும் குறிப்பிட்டார். கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் தொகையின் பெறுமதி சுமார் 6,000 மில்லியன் ரூபா என கடற்படை தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை ஏப்ரல் 02 ஆம் திகதியிலிருந்து மாற்றம் அடையக் கூடிய சாத்தியம்
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை ஏப்ரல் 02 ஆம் திகதியிலிருந்து மாற்றம் அடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மின்சார கட்டண உயர்வுக்கு இணையாக, பிரைட் ரைஸ் (Fried Rice) மற்றும் கொத்து (Kottu) ஆகியவற்றின் விலைகளை 30 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும், இந்த புதிய விலை மாற்றம் செவ்வாய்க்கிழமை (31) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் கூறுகையில், சிற்றுண்டிகளின் (Short eats) விலைகள் 10 ரூபாவினாலும், ஒரு கோப்பை ‘பிளேன் டீ’ மற்றும் பால் தேநீரின் விலைகள் 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். உணவகங்கள் நடத்தப்படும் அனைத்து இடங்களிலும் மாதாந்த மின்சார பயன்பாடு 180 அலகுகளை தாண்டுவதாகவும், இத்தகைய சூழலில் பாரிய மின்சார கட்டணத்தை சுமக்க வேண்டியுள்ளதால், இந்த தொழிலை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்காகவே இவ்வாறான விலை அதிகரிப்பு தீர்மானத்தை எடுத்ததாக ஹர்ஷன ருக்ஷான் மேலும் தெரிவித்தார். இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் கூறுகையில், சிற்றுண்டிகளின் (Short eats) விலைகள்…