Author: Thana

ஹட்டன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலையொன்றின் வகுப்பறைக்குள் மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் இந்த மாணவர்கள் நேற்று (28) கைது செய்யப்பட்டதாக ஹற்றன் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். தரம் 10 இல் கல்வி பயிலும் இரு மாணவர் குழுக்களிடையே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணமாகும். ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்த மோதலில் அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இருப்பினும், இச்சம்பவம் பாடசாலையிலேயே சமரசம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான தாக்குதல் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனையடுத்து, தாக்குதலுக்குள்ளான மாணவனின் தாயார் நேற்று (28) ஹற்றன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அம்முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். காயமடைந்த மாணவன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில்…

Read More

புதிய பேருந்து கட்டணப் பட்டியல் கட்டாயம்: மீறினால் அனுமதிப்பத்திரம் ரத்து! திருத்தப்பட்ட புதிய பேருந்து கட்டணப் பட்டியலைப் பயணிகள் தெளிவாகப் பார்க்கும் வகையில் பேருந்துகளுக்குள் காட்சிப்படுத்துவது கட்டாயம் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பயணிகள் சேவை அனுமதிப்பத்திர நிபந்தனை 16 (A) இன் படி, இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணப் பட்டியலைக் காட்சிப்படுத்தத் தவறும் பேருந்துகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அதிகாரசபை எச்சரித்துள்ளது. இதன்படி: பேருந்து அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும். தொடர்புடைய பேருந்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். புதிய கட்டண உயர்வு தொடர்பான முறைகேடுகள் அல்லது மேலதிக கட்டணம் வசூலிப்பது குறித்து பயணிகள் பின்வரும் இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு முறைப்பாடு அளிக்கலாம்: மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை: தொலைபேசி: 011 2860860 வட்ஸ்எப் (WhatsApp): 070 2860860…

Read More

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் நிறுத்தப்படுவதன் காரணமாக, நாளை (29) தெஹிவளை – கல்கிசை மாநகர சபைக்குட்பட்ட பல பகுதிகளில் 5 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை களுபோவில, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவ, ராவத்தாவத்தை மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.

Read More

இலங்கை வான்படை 75ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய தகவல் தொழில் நுட்ப ஆய்வகம் மாணவர்களுக்கு ஒப்படைப்பு. இலங்கை வான்படை தனது 75ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, எதிர்கால தலைமுறையின் தகவல் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தும் நோக்கில் முக்கிய பங்களிப்பாக, பாடசாலை மாணவர்களின் தகவல் தொழில் நுட்ப அறிவை உயர்த்தும் பொருட்டு ரூபாய் 75 இலட்சத்திற்கு மேற்பட்ட செலவில் நவீன வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப (IT) ஆய்வகமொன்றை நிறுவி மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளது. அதன்படி, அம்பாறை மங்களாராம மகா வித்தியாலயம் மற்றும் மட்டக்களப்பு கொட்டாய்முனை கனிஷ்ட வித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்ப ஆய்வகங்கள் இரண்டை மாணவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன் இரண்டாம் கட்டமாக, நுவரெலியா நானுஓயா பிரதேசத்தில் அமைந்துள்ள டெஸ்ஃபோர்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப ஆய்வகம் 2026 மார்ச் 27ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. வான்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்…

Read More

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற இராஜதந்திர பேச்சுவார்த்தையின் ஒரு கட்டமாக, நாளை (28) இலங்கைக்குப் பெருமளவிலான எரிபொருள் கிடைக்கவுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பெறுபேறாக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ள கப்பலில் பின்வரும் எரிபொருள் கையிருப்புகள் காணப்படுகின்றன: டீசல்: 20,000 மெட்ரிக் தொன் பெட்ரோல்: 18,000 மெட்ரிக் தொன் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அறிவிப்பு இலங்கையின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் மற்றுமொரு கட்டமாக இந்த எரிபொருள் கையிருப்பு அமைந்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. “அண்டை நாட்டுக்கு முன்னுரிமை” (Neighborhood First) என்ற கொள்கையின் அடிப்படையில், இலங்கையின் பொருளாதார மற்றும் சக்திவள ஸ்திரத்தன்மைக்காக இந்தியா முன்னின்று உழைப்பதாக அந்த அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த எரிபொருள் வருகையானது…

Read More

செ.திவாகரன் கினிகத்தேன பகுதியில் காட்டுக்கு தீ வைப்பு. ஹட்டன் வன அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப் பகுதியில் இன்று (27) மதியம் இனம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, ஏதேனும் ஒரு குழுவினர் தொடர்ந்து காடுகளுக்கு தீ வைத்து வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன. ஹட்டன் வன அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளும் இனைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் . தொடர்ந்து காடுகளுக்கு தீ வைப்பது குற்றச்செயலாகும், எனவே தீவைப்போர் இனங்காணப்படும் பட்சத்தில், அவர்களுக்கெதிராக தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கினிகத்தேன பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் மிக விரைவில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்தெரிவிப்பு _______ இன்றைய தினம்(27/03/2026) இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவலகள் அமைச்சர் ஆனந்த விஜயபால தலைமையில் சபரகமுவ மாகாண பொலிஸ் மா அதிபரின் அவர்களின் பங்குபற்றுதலுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றிருந்தது இக் கலந்துரையாடலில் பெருநதோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்பிரதீப் அவர்களும் கலந்து கொண்டிருந்தார். இதன் போது பிரதி அமைச்சர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில். மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் வெகு விரைவில் தமிழ் அதிகாரிகளை நியமிக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்த நிலையிலே அமைச்சர் ஆனந்த் விஜயபால அவர்கள் இப் பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் அதிகாரிகளை வெகு விரைவில் பெற்று தருவதாக உறுதியளித்திருந்தார். அத்தோடு மலையக பகுதியில் உள்ள சட்ட விரோத மதுபானங்கள், மதுபான உற்பத்திகளை…

Read More

இலங்கையில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் இறுதி வரை தொடர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன இன்று (27) கருத்துத் தெரிவிக்கையில், தென்மேல் பருவக்காற்று மே மாத இறுதியில் ஆரம்பமாகும் வரை தற்போதைய வெப்பமான சூழலில் பெரிய மாற்றம் இருக்காது என சுட்டிக்காட்டினார். ஏப்ரல் மாதத்தில் உச்சகட்ட வெப்பம் தற்போதைய நிலவரப்படி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படும். குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சூரியனின் நேரடித் தாக்கம் காரணமாக கடும் வெப்பம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நிலவும் முதலாவது இடைப்பருவப் பெயர்ச்சிக் காலத்தில் காற்றின் வேகம் மிகக் குறைவாக இருப்பதும், மேகமூட்டம் இன்றி சூரியன் இலங்கைக்கு நேர் உச்சியில் காணப்படுவதும் வளிமண்டலம் மேலும் வெப்பமடைவதற்குக் காரணங்களாக அமைந்துள்ளன. பொதுமக்களுக்கான அவசர அறிவுறுத்தல்கள் வெப்ப…

Read More

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று (27) தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவரது தனிப்பட்ட பணத்தில் இருந்து 75 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் சுகாதார அமைச்சின் அன்றைய செயலாளர் ஜனக்க சந்திரகுப்த, மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ்.டி. ஜயரத்ன ஆகியோர் தலா 50 மில்லியன் ரூபாயைச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர மற்றும் மருத்துவ வழங்கல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் துசித சுதர்சன ஆகியோர் 50 மில்லியன் ரூபாவை…

Read More

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும். மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், வவுனியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Read More