Author: Thana

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாளானது, இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமழான் நோன்பு, உலக ஆசைகளில் இருந்து விடுபட்டு, அர்ப்பணிப்பு மற்றும் எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றது. ரமழான் நோன்பு முழு உலக சமூகத்திற்கும் மிக முக்கியமான மனிதாபிமான மற்றும் சமூகச் செய்திகள் பலவற்றை ஏந்தி வருகின்றது. பக்தர்களின் உள்ளங்களில் சகவுணர்வை விதைப்பதே ரமழானின் உன்னதமான நோக்கமாகும். அதாவது, மற்றவர்களின் பசி மற்றும் அதன் வலியைத் தனது சொந்த அனுபவமாக உணர்ந்து, சகோதரத்துவ உணர்வுடன் மற்றவர்களை அரவணைக்கத் தயங்காத ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதாகும். இக்காலப்பகுதியில் ரமழானின் ஏனைய விழுமியங்களான…

Read More

உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் ரமழான் மாத நோன்பை நிறைவு செய்யும் இந்த தருணத்தில், இஸ்லாம் நமக்கு கற்றுத் தரும் மானுட தர்மங்களை இன்னும் ஆழமாக சிந்திப்பது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு முஸ்லிம் நிறைவேற்ற வேண்டிய ஐந்து கடமைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவையாவன: நம்பிக்கை, ஐவேளை தொழுகை, ரமழான் மாத நோன்பு, ஸகாத் அதாவது ஏழை வரி செலுத்துதல் மற்றும் ஹஜ் யாத்திரை ஆகியனவாகும். இந்த ஐந்து கடமைகளிலும் முஸ்லிம்களுக்கு சுட்டிக்காட்டப்படுவது, அமைதியும் நல்லிணக்கமும் நிறைந்த சமூகத்திற்கு வழிகாட்டும் ஒரு வாழ்க்கை முறையின் அவசியமாகும். ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் நோன்பு, அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் ஆன்மீகத் தூய்மை பற்றிய பல பாடங்களை கற்றுத் தருகிறது. இந்தத் தருணத்தில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாழும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தோன்றியுள்ள போர்ச் சூழலுக்கு தீர்வு காண்பதற்கான முக்கியமான…

Read More

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Read More

புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, இறைவணக்கத்தில் ஈடுபட்ட இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்கள் இன்று (21) தமது புனித நோன்புப் பெருநாளை (ஈதுல் பித்ர்) உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய வாசகர்களுக்கும் எமது தளம் தனது மனமார்ந்த பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. பெருநாளின் பின்னணியும் முக்கியத்துவமும் இஸ்லாமிய மார்க்கத்தில் ஈதுல் பித்ர் (நோன்புப் பெருநாள்) மற்றும் ஈதுல் அழ்ஹா (தியாகத் திருநாள்) என இரண்டு பெருநாட்கள் மட்டுமே உள்ளன. அறியாமைக் காலத்தில் மதீனா மக்கள் கொண்டாடிய நாட்களுக்குப் பதிலாக, அவற்றை விடச் சிறந்த இவ்விரு நாட்களை இறைவன் வழங்கியுள்ளதாக நபிமொழிகள் குறிப்பிடுகின்றன. புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்ற அடியார்கள், அதில் ஏற்பட்ட குறைகளை நீக்கிக்கொள்ளவும், ஏழைகளும் மகிழ்ச்சியுடன் பெருநாளைக் கொண்டாடவும் ‘ஸதக்கத்துல் ஃபித்ர்’ எனும் பெருநாள் தர்மம் கடமையாக்கப்பட்டுள்ளது. இது பெருநாள் தொழுகைக்கு முன்பே வழங்கப்பட வேண்டிய ஒன்றாகும். நபி…

Read More

 எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில், லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 100 வகையான பொருட்களுக்கு விசேட விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். இன்று (20) முற்பகல் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் சந்தையில் நிலவும் கட்டுப்பாட்டு விலையை விடவும் குறைந்த விலையில் லங்கா சதொசவில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்தார். விலை விபரங்கள் (ஒரு கிலோகிராம்): வெள்ளை நாடு: ரூ. 217 வெள்ளைப்பச்சை அரிசி: ரூ. 203 கோதுமை மா: ரூ. 254 பருப்பு: ரூ. 264 பெரிய வெங்காயம்: ரூ. 150 – 160 நெத்தலி: ரூ. 1,050 நிபந்தனைகள் மற்றும் கொள்வனவு வரம்பு இந்த விலைக்கழிவுச் சலுகையானது சாதாரண நுகர்வோரைச் சென்றடைவதை உறுதிப்படுத்தும்…

Read More

நாடு தழுவிய விசேட பொலிஸ் நடவடிக்கை: 24 மணித்தியாலங்களில் 448 பேர் கைது; 4000க்கும் மேற்பட்ட போக்குவரத்து வழக்குகள்! பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு விபரங்களை பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. முக்கிய கைதுகள் மற்றும் சோதனைகள் நேற்று (மார்ச் 19) முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 26,844 நபர்கள் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் பெறப்பட்ட தரவுகள் பின்வருமாறு: கைது செய்யப்பட்டவர்கள்: சந்தேகத்தின் பேரில் 448 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள்: பாரிய குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 16 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள்: நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 414 பேர் (நாள் பிடியாணை – 253, திறந்த பிடியாணை – 161) இதன்போது…

Read More

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் விடுத்த இராணுவ ரீதியான கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்திய ஜனாதிபதி, சர்வதேச விவகாரங்களில் இலங்கை எவ்வித பக்கச்சார்புமின்றி, தனது வெளியுறவுக் கொள்கையில் உறுதியான நடுநிலைமையைப் பேணி வருவதாகக் குறிப்பிட்டார். ஜனாதிபதி தனது உரையில் பின்வரும் முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்: ஈரான் கோரிக்கை: ஈரானுக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருவதற்கு அனுமதி கோரியிருந்தன. அமெரிக்கா கோரிக்கை: அமெரிக்கா தனது இரண்டு போர் விமானங்களை (Fighter Jets) மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு அனுமதி கோரியிருந்தது. இந்த இரண்டு கோரிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. “இதன் மூலம் நாம் எமது நாட்டின் இறையாண்மையையும் நடுநிலைத் தன்மையையும் சர்வதேச ரீதியில் நிரூபித்துள்ளோம்,” என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சபையில் தெரிவித்தார்.…

Read More

பதிவு: மார்ச் 20, 2026 | 12:45 PM மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கியத் துறைமுக நகரான ஹைஃபாவில் (Haifa) அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் நேற்று அதிரடி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. பழிவாங்கும் நடவடிக்கை? கடந்த 20 நாட்களாக நீடித்து வரும் இந்தப் போரில், நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் தெற்கு பார்ஸ் (South Pars) எரிவாயு வயல் பலத்த சேதமடைந்தது. உலகின் மிகப்பெரிய எரிவாயு வயலான இது, ஈரானின் உள்நாட்டு எரிசக்தித் தேவையில் முதுகெலும்பாகக் கருதப்படுகிறது. இதற்குப் பழிவாங்கும் வகையிலேயே, இஸ்ரேலின் எரிசக்தி மையமான ஹைஃபா மீது ஈரான் இந்தத் தாக்குதலைத் தொடுத்துள்ளதாகத் தெரிகிறது. தாக்குதலின் பின்னணி வியாழக்கிழமை (மார்ச் 19) இரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குள்ளான ஹைஃபா பகுதியில் பெரும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதுடன், வானத்தை…

Read More

ஹம்பாந்தோட்டை, கட்டுவெவ சல்மல்யாய பகுதியில் சுமார் 500 லீற்றர் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 480 லீற்றருக்கும் அதிகமான டீசல் மற்றும் சுமார் 20 லீற்றர் பெற்றோல் ஆகியன மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Read More

உலக முடிவில் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்த மாணவி பாதுகாப்பாக மீட்பு! மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்ட மாணவி. உலக முடிவில் (World’s End) ஒரு திகில் ‘செல்பி’ விபரீதம். நுவரெலியா ஹோட்டன் சமவெளியின் புகழ்பெற்ற ‘உலக முடிவு’ (World’s End) பகுதியில் இன்று ஒரு மயிர்க்கூச்சரியும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், உலக முடிவின் அந்த பிரம்மாண்டமான விளிம்பில் நின்று ‘செல்பி’ எடுக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி சுமார் 40m அதிகமான ஆழமான பள்ளத்திற்குள் சரிந்து விழுந்துள்ளார். ​மாணவி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த சக நண்பர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உடனடியாக பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் வழங்கினர். அடுத்த சில நிமிடங்களிலேயே இராணுவத்தினர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் களத்தில் குதித்தனர். ​சுமார் 4,000 அடி ஆழம் கொண்ட அந்த செங்குத்தான மலைச்சரிவில், கடும் பனிமூட்டத்திற்கு மத்தியில்…

Read More