Author: Thana
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார் இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான Sergio Gor மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும், மத்திய கிழக்கின் போர்ச் சூழல் குறித்த இலங்கையின் நிலைப்பாடு மற்றும் போர்ச் சூழல் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோருடன் Sergio Gor வுடன் வருகை…
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தலா 20 மில்லியன் வீதம் 3 முறை லஞ்சம் – சந்தேகநபர் வாக்குமூலம்
ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது லஞ்சமாகப் பெறப்பட்ட பணம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த பாரிய ஊழல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றில் சமர்ப்பித்த போதே ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. விசாரணையில் வெளியான முக்கிய தகவல்கள்: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2015 ஆம் ஆண்டு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, சந்தேகநபரான கபில சந்திரசேன என்பவரால் தலா 20 மில்லியன் ரூபாய் வீதம் மூன்று தடவைகளாக மொத்தம் 60 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் மகிந்த ராஜபக்சவின் பெலியத்த இல்லம் மற்றும் கார்டன் இல்லத்தில் வைத்து அவரிடம் நேரடியாகக் கையளிக்கப்பட்டதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதேவேளை, முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கும்…
செ.திவாகரன் தலவாக்கலையில் சட்டவிரோத மதுபானம் தயாரித்தவர் கைது தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் சாரதி அலுவல் இல்லத்தில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற சாரதி ஒருவரை இன்று (19) கைது செய்துள்ளதாக லிந்துலை பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் அதிகாரி பொறுப்பாளர், பொலிஸ் இன்ஸ்பெக்டர் பாலித நந்தசிறி தெரிவித்தார். சந்தேக நபர், அலுவல் இல்லத்தின் சமையலறையில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து நண்பர்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார் சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது 50,000 மில்லிலிட்டர் கோடா மற்றும் சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களையும் கைப்பற்றப்பட்டுள்ளன, சட்டவிரோத மது உற்பத்தி இடம்பெற்று வருவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 65 வயதான சந்தேக நபர் மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர் …
நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் பெரும் விபத்துத் தவிர்ப்பு: நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!
நுவரெலியா: நுவரெலியா – சீதா எலிய பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையில், அதிவேகமாக வந்த மோட்டார் வாகனத்தினால் ஏற்படவிருந்த பாரிய விபத்தொன்று நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது. நேற்று (18.03.2026) மாலை 05.02 மணியளவில், சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று பயணித்துக்கொண்டிருந்தது. இதன்போது, வலது திசையிலிருந்து மிக அதிவேகமாகவும், போக்குவரத்து விதிகளை மீறியும் வந்த மோட்டார் வாகனம் ஒன்று முச்சக்கர வண்டியை மோதவிருந்தது. எனினும், முச்சக்கர வண்டி ஓட்டுநரின் சாமர்த்தியத்தாலும் அதிர்ஷ்டவசத்தாலும் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினர். இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் (Dash Cam) மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கருத்து தெரிவிக்கையில், “மிகவும் மோசமான முறையில் அந்த வாகனம் செலுத்தப்பட்டது, ஒரு நொடி தாமதித்திருந்தாலும் பெரிய…
“கட்டாரில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி: ஜனாதிபதி அநுரவிடம் அமீர் விசேட வாக்குறுதி!”
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் எரிபொருள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி ஆகியோருக்கிடையில் முக்கிய தொலைபேசி உரையாடல் ஒன்று இன்று (19) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் போது, பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழல் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆராய்ந்தனர். தற்போதைய சவாலான சூழ்நிலையிலும் இலங்கைக்கு தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கு கட்டார் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அமீர் உறுதியளித்துள்ளார். கட்டாரில் வாழும் மற்றும் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து அமீர் இதன்போது ஜனாதிபதிக்கு விசேட உத்தரவாதத்தை அளித்தார். பிராந்திய அமைதியை நிலைநாட்ட சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, தற்போதைய நெருக்கடியான தருணத்தில் இலங்கையின் ஆதரவையும் ஒற்றுமையையும் கட்டாருக்குத் தெரிவித்தார். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான…
இலங்கையில் மீண்டும் QR முறை: வாகன இலக்கத் தகட்டின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் இன்று முதல் ஆரம்பம்!
கொழும்பு: இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்துவதற்காக மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள QR குறியீடு முறையின் கீழ், வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக இன்று (19) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச எரிபொருள் விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதாலும், உள்நாட்டில் எரிபொருளுக்கான தேவை சடுதியாக அதிகரித்துள்ளதாலும், நாட்டின் எரிபொருள் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. எரிபொருள் விநியோகிக்கப்படும் புதிய நடைமுறை: புதிய விதிமுறைகளின்படி, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தைக் கருத்திற்கொண்டு இரண்டு பிரிவுகளாக எரிபொருள் வழங்கப்படவுள்ளது: இரட்டை எண்கள் (Even Numbers): உங்கள் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 0, 2, 4, 6 அல்லது 8 ஆக இருந்தால், மாதத்தின் இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளில் (உதாரணமாக: 2, 4, 6… 18, 20) எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.…
அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில், காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனங்களைத் தரித்து வைப்பதற்காக அறவிடப்பட்டு வந்த கட்டணங்கள், இன்று (18) முதல் மறு அறிவித்தல் வரை முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டதாக கொழும்பு பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக எடுக்கப்பட்ட முடிவு தற்போதைய உலகளாவிய போர்ச் சூழல் மற்றும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் ஒரு முயற்சியாக இந்தத் தீர்மானம் முன்மொழியப்பட்டது. மாநகர சபையின் நிதிக்குழுவும் இந்த முன்மொழிவுக்கு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், குறித்த தீர்மானம் உடனடியாக அமுலுக்கு வருகின்றது. முக்கிய தகவல்கள்: முன்னைய நடைமுறை: காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கட்டணம் அறவிடப்பட்டு வந்தது. புதிய தீர்மானம்: அனைத்து வாகனத் தரிப்பிடக் கட்டணங்களும் முழுமையாக…
கொழும்பு: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடி செய்தவர்களிடமிருந்து, சுமார் 1,945 இலட்சம் ரூபாவிற்கும் (194.5 மில்லியன்) அதிகமான தொகை மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இந்த நிதியை மீண்டும் பெற்றுக்கொடுக்கத் தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. தீவிரமடையும் சட்ட நடவடிக்கைகள் அனுமதிப்பத்திரமற்ற வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட தனிநபர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட சட்ட ரீதியான வழக்குகளின் ஊடாகவே இந்த நிதி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாத காலப்பகுதியின் தரவுகள்: தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்: 244 கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்: 2,081 மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் (Raids): 19 கைது செய்யப்பட்டவர்கள்: 88 பேர் (இதில் 3 பேர் அனுமதிப்பத்திரம் பெற்ற முகவர் நிலையங்களைச் சேர்ந்தவர்கள்) சமூக ஊடகங்கள் வழி எச்சரிக்கை இஸ்ரேல், தென்கொரியா, ஜப்பான், ருமேனியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிக சம்பளத்துடன் வேலை பெற்றுத் தருவதாகக்…
தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையை கருத்திற் கொண்டு, அதற்கு முகங்கொடுக்கும் வகையில் இன்று (18) முதல் மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நிலையில் விசேட விடுமுறை தினம் காரணமாக, இன்றைய தினம் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் ரயில்கள் மாத்திரமே இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பிரதான மார்க்கத்தில் 29 ரயில் பயணங்களும், வடக்கு மார்க்கத்தில் 17 பயணங்களும் மற்றும் கடலோர மார்க்கத்தில் 33 பயணங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்துடன், களனிவெளி மார்க்கத்தில் 5 பயணங்களும், புத்தளம் மார்க்கத்தில் 9 பயணங்களும், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மார்க்கங்களில் 6 பயணங்களும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, நாடு முழுவதும் வழக்கம்போல பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. பேருந்துகள் இயக்கப்படும் கால அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர்…