Author: Thana

இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் வாழும் எமது சகோதரிகளுக்கும் சிறுமிகளுக்கும், இந்த சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐக்கிய நாடுகள் சபையினால் இம்முறை சர்வதேச மகளிர் தினத்திற்கான உலகளாவிய கருப்பொருளாக, “Rights. Justice. Action. For ALL Women and Girls ” (அனைத்துப் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் உரிமையும் நீதியும் கிடைப்பதற்கான செயற்பாடு) எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைச் சமூகத்தினதும் பொருளாதாரத்தினதும் உண்மையான உயிர்நாடியாக எமது பெண்களே விளங்குகின்றனர். குடும்பத்திலும் சமூகத்திலும் அவர்கள் ஆற்றும் பணி, இன்று ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தீர்க்கமான காரணியாக மாறியுள்ளது. எமது அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக, பெண்களை வெறும் பயனாளிகளாக மாத்திரம் கருதாமல், நாட்டின் அபிவிருத்தியின் செயல்திறன்மிக்க பங்காளிகளாகக் கருதி, அவர்களுக்குரிய கௌரவத்தையும் வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். எமது கொள்கைத் திட்டத்தில் பெண்களுக்காக…

Read More

மனித கடத்தல் வியாபாரம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வொன்று திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்றது. குறித்த நிகழ்வானது தேசிய மனித கடத்தல் தொடர்பிலான பணிக் குழுவின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய இடம்பெற்றது. மனித கடத்தல் வியாபாரத்தை தடுக்கும் நோக்கில் குறித்த பணிக்குழு ஊடாக பல்வேறு விழிப்புணர்வுகள் இடம்பெற்றன. சர்வதேச புலம்பெயர்தலுக்கான அமைப்பின் பிரதிநிதிகள் நிகழ் நிலை ஊடாக இணைந்து மனித கடத்தல் தொடர்பாக தெளிவூட்டினர். மனித கடத்தலுக்கு எதிரான செயற்திட்டம் ஊடாக குறித்த நிகழ்வு இடம்பெற்று வருகிறது. வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக புலம்பெயர்தலின் போது சட்ட ரீதியாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஊடாக பதிவு செய்து செல்லுதல்,ஏமாற்று நடவடிக்கைகளில் இருந்து பணிப் பெண்களை பாதுகாத்துக் கொள்ளல் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. மனித வியாபாரமானது பல்வேறு வடிவங்களில் இடம்பெற்று வருகின்றது. இதனால் பல…

Read More

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பெய்யக் கூடிய மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் திகதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கையில், பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியாக பெண்களின் வகிபாகம் தனித்துவமானது. இந்தத் துறைகள் அனைத்திலும் பெரும் பொறுப்பைச் சுமக்கும் பெண்களின் அந்த வகிபாகத்தை பாராட்டி, பெண்களின் உரிமைகள், சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை இந்நாளில் குறிப்பாக நினைவுகூர்ந்தாலும், அதனை ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தப்பட முடியாது என்பதை நாம் நம்புகிறோம். இந்நாட்டின் மக்கள் தொகையில் 52% பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் தலைமுறை, இன்று நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது இரகசியமல்ல. ஊதியம் பெறாத இல்லத்தரசிகள் என்ற வகையில் அவர்கள் மேற்கொள்ளும் வகிபாகத்திற்கு மேலதிகமாக, ஆடைக் கைத்தொழில், பெருந்தோட்டத் தொழிற்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் சேவைத் துறைகளில் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்கிறார்கள். கடந்த 2025 ஆம் ஆண்டில் ஒரு நாடாக நாம் அடைந்த…

Read More

டுபாய் விமான நிலையம் அருகில் இன்று (07) வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து வான்பரப்பில் புகைமூட்டம் காணப்பட்டதாகவும் வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. விமானங்களைக் கண்காணிக்கும் Flightradar24 இணையதளத் தரவுகளின்படி, டுபாய் விமான நிலையத்திற்கு மேலாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் வட்டமடித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

கட்டார் தனது வான்பரப்பை மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விமானப் பயணங்களுக்காக பகுதி அளவில் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, போர் ஆரம்பமாகி ஒரு வாரத்தின் பின்னர் முதற்தடவையாக மட்டுப்படுத்தப்பட்ட விமானச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அத்தியாவசியப் பொருட்கள் போக்குவரத்துக்காக (Cargo) மட்டுமே இவ்வாறு வான்பரப்பு திறக்கப்படுவதாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கட்டாரின் பிரதான சர்வதேச விமான நிலையமான ஹமாட் (Hamad) விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் நாட்களில் பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற் கொண்டு ஏனைய விமானச் சேவைகள் குறித்து தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் ஈரான் தரப்பிலிருந்து கட்டார் விமான நிலையத்தை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்ட போதிலும், அதனை முறியடிக்ககட்டாருக்கு முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

நிலவும் மோதல் நிலைமை காரணமாக, இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் தமது பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினால் நடத்தப்படும் ஏவுகணைத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.வடக்கு இஸ்ரேல் பிராந்தியத்தில் 9,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணிபுரிந்து வருவதால், அந்நாட்டு பாதுகாப்புப் படைகள், அரச ஊடகங்கள், PIBA நிறுவனம் மற்றும் தூதரகம் வழங்கும் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் தாக்குதலின் போது இஸ்ரேலிய எம்புலன்ஸ் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், நீங்கள் இருக்கும் இடத்தை (Location) குறிப்பிட்டு 101 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் அச்சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் என இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. தேவையான மேலதிக அறிவுறுத்தல்களுக்கு தூதரகத்தின் WhatsApp இலக்கமான 00972-559305731 ஊடாக வாரத்தின் 7 நாட்களும் தொடர்புகொள்ள…

Read More

மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பணிக்குழாமையும், இலங்கையின் பொறுப்பில் உள்ள இரண்டாவது ஈரானிய கப்பலில் உள்ள பணிக்குழாமையும் மீண்டும் ஈரானுக்கு அனுப்ப வேண்டாம் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக ரொயிட்டர்ஸ் (Reuters) செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி அந்தச் சேவை இதனைத் தெரிவித்துள்ளது. பொறுப்பேற்கப்பட்டுள்ள பணிக்குழாமை ஈரானின் பரப்புரை நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கும், அத்தகைய முயற்சிகளைக் குறைப்பதற்கும் அமெரிக்கா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த புதன்கிழமை (04) காலிக்கு அப்பால் 19 கடல் மைல் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் வைத்து IRIS Dena எனும் ஈரானியப் போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலொன்றினால் மூழ்கடிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் ஏராளமான பணிக்குழாமினர் உயிரிழந்ததுடன், உயிர் தப்பிய 32 பேர் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் கரைக்குக் கொண்டு வரப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Read More

ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், தொழிற்சங்கங்களுடன் முன்னெடுக்கப்பட்ட விரிவான கலந்துரையாடல்களின் பின்னர் அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நேற்று (06) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, கல்வித் துறையில் நிலவும் வெற்றிடங்கள் குறித்த புள்ளிவிபரங்களை முன்வைத்த பிரதமர், தற்போதைய நிலையை பின்வருமாறு விளக்கினார், இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) 903 வெற்றிடங்கள். இலங்கை அதிபர் சேவை (SLPS) 3,790 வெற்றிடங்கள். இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2021 ஆம் ஆண்டு முதல் நடாத்தப்பட்ட பரீட்சைகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமனங்களைப் பொறுப்பேற்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு, 2026 மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் நேர்முகத் தேர்வுகளை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.…

Read More

இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் வான் சாகசங்கள் மற்றும் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார். இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் நேற்று (06) பிற்பகல் ரத்மலானை, இலங்கை விமானப்படை தளத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. விமானப்படைத் தளத்திற்கு வருகை தந்த முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, விமானப்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்ட ஜனாதிபதி, வான் சாகசங்களையும் கண்டுகளித்தார். விமானப்படை அருங்காட்சியகத்தில் ஜனாதிபதி சிறப்பு நினைவுக் குறிப்பை இட்டதுடன், இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நினைவுப் பரிசையும் வழங்கினார். இலங்கை விமானப்படையின் 75 ஆண்டுகால சிறப்புமிக்க சேவையை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில்…

Read More