Author: Thana
போதைப்பொருள் விநியோகத்தை முடக்குதல் மற்றும் பாவனையைக் குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1000 க்கு மேற்பட்டோர் கைது
பொலிஸ் அதிபரின் ஆலோசனையின் பேரில் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரக்கணக்கானோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று (07) வெளியிட்டுள்ள விசேட அறிக்கைகளின் படி, 2026 மார்ச் 06 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் விபரங்கள் வருமாறு: குற்றத்தடுப்பு விசேட நடவடிக்கை நாட்டின் அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது: சோதனை செய்யப்பட்ட நபர்கள்: 27,890 பேர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்: 520 பேர். பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள்: 452 பேர் (இதில் 276 தினசரி பிடியாணை மற்றும் 176 திறந்த பிடியாணை உத்தரவு உடையவர்கள் அடக்கம்). குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடையவர்கள்: 11 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்து விதிமீறல்கள் வீதி ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்…
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (07) அதிகாலை 05.30 மணிக்கு வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, நாடு முழுவதும் பிரதானமாக வரண்ட வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய விபரங்கள் பின்வருமாறு: மமூடுபனி எச்சரிக்கை நாட்டின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் மமூடுபனி மூட்டமான நிலை காணப்படலாம். குறிப்பாக பின்வரும் மாகாணங்களில் இவ்வாறான நிலை எதிர்பார்க்கப்படுகிறது: வட மாகாணம் வடமத்திய மாகாணம் மத்திய மாகாணம் சபரகமுவ மாகாணம் தென் மாகாணம் ஊவா மாகாணம் வடமேல் மாகாணம் கடல் பகுதிகளுக்கான முன்னறிவிப்பு நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான வானிலை நிலவரம்: மழை நிலை: நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் பிரதானமாக மழைற்ற வானிலையே நிலவும். காற்று: காற்றானது ஒரு குறிப்பிட்ட திசையிலிருந்து வீசாது, அவ்வப்போது மாறும் திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 20-30 கிலோமீட்டர் (kmph) வரை காணப்படும். கடலின் நிலை: நாட்டைச் சூழவுள்ள…
மூன்று மருத்துவமனை ஊழியர்கள் நான்கு முறை பிணவறைக்குச் சென்றது சிசிடிவி காட்சிகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது -மஞ்சுள சுரவீரMP
செ.திவாகரன். டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் யுவதியின் சடலத்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் – பிள்ளையின் தாயார் பொலிஸில் முறைப்பாடு. மூன்று மருத்துவமனை ஊழியர்கள் நான்கு முறை பிணவறைக்குச் சென்றது சிசிடிவி காட்சிகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி தெரிவிப்பு. டிக்கோயா ஆதார மருத்துவமனையின் பிணவறையில் இறந்த இளம் பெண்ணின் உடலை மூன்று மருத்துவமனை ஊழியர்கள் பிரேத அறையிலிருந்த யுவதியின் சடலத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தக் கோரி இறந்த இளம் பெண்ணின் தாயார் (06) ஆம் திகதி மதியம் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பல பொதுமக்களின் எதிர்ப்புகள் எழுந்தபோது, டிக்கோயா ஆதார மருத்துவமனையின் பணிப்பாளரைச் சந்திக்கச் சென்றபோது, மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவிலிருந்து காட்சிகள் அவருக்குக்…
யாழ். படகு விபத்துக்கான முழுமையான காரணங்களை கண்டறிவதற்குரிய அவசர விசாரணை முன்னெடுக்குமாறு கடற்படையினரும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ். படகு விபத்துக்கான முழமையான காரணங்களை கண்டறிவதற்குரிய அவசர விசாரணை முன்னெடுக்குமாறு கடற்படையினரும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் இது தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அமைச்சர் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார். துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கம் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். விபத்துக்குள்ளான படகு பயணத்திற்கு பாதுகாப்பான நிலையில் இருந்ததா, பயணிகளின் எண்ணிக்கை விதிமுறைகளுக்கு உட்பட்டதா, கடல் பயணத்திற்கான பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பன குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடமும், பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் அமைச்சர்…
இலங்கையில் போதைப்பொருள் விநியோகத்தை முற்றாக முடக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய விசேட நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 987 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபரின் நேரடி ஆலோசனையின் கீழ் 2025 அக்டோபர் 30 ஆம் திகதி முதல் இந்த மல்டி-டிசிப்ளினரி (Multi-disciplinary) அணுகுமுறை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த 24 மணித்தியால நடவடிக்கை (2026.03.05) இலங்கை பொலிஸார் மேற்கொண்ட தீவிர சோதனைகளின் போது, பெருமளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரங்கள் வருமாறு: கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்: ஐஸ் (Ice): 624 கிராம் ஹெரோயின்: 338 கிராம் கஞ்சா: 01 கிலோ 904 கிராம் மற்றும் 981 கஞ்சா செடிகள் குஷ் (Kush): 11 கிலோ 502 கிராம் மாவா (Mawa): 03 கிலோ 850 கிராம் போதை மாத்திரைகள்: 1,392 மாத்திரைகள் ஹஷிஷ்: 114 கிராம மொத்தச் சுற்றிவளைப்புகள்: ஒரே நாளில் நாடு…
ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை அமைப்புகளைக் குறிவைத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை தாக்குதல்
ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை அமைப்புகளைக் குறிவைத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உடனடியாக ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை மற்றும் பொலிஸாரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். அவர்கள் அவ்வாறு செய்தால் அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும், இல்லையெனில் அவர்கள் நிச்சயம் மரணத்தை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்துள்ளார். இதற்கிடையில், தமது நாடு தற்போது போரின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வௌியேறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இன்று வரை அந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய தூதரக ஊழியர்களுக்கு அங்குள்ள முக்கிய ஆவணங்களை மாற்றவும், ரகசிய தரவுக் கட்டமைப்பில் உள்ள தரவுகளை முற்றிலுமாகத் அழிப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தின் வான்வெளியில் ஊடுருவிய ஏவுகணைத் தாக்குதலைத் தங்கள் நாட்டு வான் பாதுகாப்புப் படை முறியடித்துள்ளதாக குவைத் இராணுவம் தெரிவித்துள்ள நிலையில், இந்த வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய் மற்றும் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு இந்தியாவிற்கு 30 நாட்கள் சலுகை காலத்தை அமெரிக்கா வழங்கியுள்ளது. அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் வெளிநாட்டு சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) இது தொடர்பான அதிகாரப்பூர்வ அனுமதியை வெளியிட்டுள்ளது.மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் எண்ணெய் உற்பத்தி பாதிப்புகளே அமெரிக்காவின் இந்தத் திடீர் முடிவுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் முக்கிய கடல்சார் பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் முற்றுகையிட்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தின் முக்கிய எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில், அமெரிக்கா வழங்கியுள்ள இந்தச் சலுகை இந்தியாவின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு தற்காலிக உந்துதலாக (Boost) அமையும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
சிவனொளிபாதமலை யாத்திரைக்காக வருகை தந்த இரு இளைஞர்கள், ‘ஹேஸ்’ என அழைக்கப்படும் போதைப்பொருளுடன் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா பொலிஸார் கடந்த புதன்கிழமை (4) மாலை மவுஸ்சாகலை நீர்த்தேக்கப் பகுதியில் விசேட வீதித் தடையை ஏற்படுத்தி, யாத்ரீகர்களின் வாகனங்களைச் சோதனையிட்டனர். இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த இரு இளைஞர்களிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. குறித்த சந்தேகநபர்கள் மாத்தளை, உக்குவலை பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்கள் என பொலிஸார் தேர்விக்கின்றனர்.இவர்களிடமிருந்து தலா 15 – 20 மில்லி கிராம் எடையுள்ள ‘ஹேஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று (5) மாலை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் என்பதால், யாத்திரிகர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கடத்தி வருபவர்களைக் கண்டறிய மஸ்கெலியா பொலிஸார் தொடர்ச்சியான சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புத்தளம் கடயமோட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை 05 பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர். மாணவர்கள் வீதியில் சென்றுக்கொண்டிருந்த போது லொறி ஒன்று மோதியதால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் பிரிதொரு மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .