Author: Thana

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒட்டோ டீசல் 22 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 303 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன், லங்கா சுப்பர் டீசல் 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 353 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது. அதேநேரம், ஒக்டேன் 92 ரக பெட்ரோல், 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 317 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது. ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 365 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது. மண்ணெண்ணெய் 13 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 195 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

Read More

கிளங்கன் மருத்துவமனை சர்ச்சை: யுவதியின் உடலம் அவமரியாதை செய்யப்பட்டமைக்கு ஆதாரங்கள் இல்லை – விசாரணைக் குழு தகவல்! டிக்கோயா: நுவரெலியா – டிக்கோயா, கிளங்கன் ஆதார மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதி ஒருவரின் உடலம் அவமரியாதை செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை என மருத்துவமனை அத்தியட்சகர் மொஹமட் பாரூக் மொஹமட் பஷீல் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி உயிரிழந்த யுவதி ஒருவரின் உடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த போது, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மூவர் உடலத்திற்கு அவமரியாதை இழைத்ததாகப் பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய மருத்துவமனை நிர்வாகத்தினால் ஒரு குழுவும், மாகாண சுகாதார சேவைகள் பணிமனையினால் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மருத்துவ அத்தியட்சகர்: “சி.சி.ரி.வி (CCTV)…

Read More

இலங்கை மின்சார சபை இன்றுடன் கலைப்பு: 6 புதிய நிறுவனங்கள் உதயம் – வரலாற்று மாற்றம்! கொழும்பு: இலங்கையின் மின்சக்தித் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், 56 ஆண்டுகள் பழமையான ‘இலங்கை மின்சார சபை’ (CEB) இன்று (09) நள்ளிரவுடன் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக 6 புதிய அரச நிறுவனங்கள் இன்று முதல் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றன. மின்சார சபையை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் கீழ், 1969-ஆம் ஆண்டின் 17-ஆம் இலக்க இலங்கை மின்சார சபைச் சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மின் உற்பத்தி, மின் கடத்துகை (Transmission), விநியோகம் மற்றும் கட்டமைப்பு இயக்கம் ஆகிய பணிகள் பிரிக்கப்பட்டு பின்வரும் 6 நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன: தன்னார்வ ஓய்வுபெறும் திட்டத்தை (VRS) தேர்வு செய்தவர்களைத் தவிர ஏனைய ஊழியர்கள் அனைவரும் இந்த 6 நிறுவனங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான புதிய நியமனக் கடிதங்கள் நாளை (10) முதல் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மின்சக்தித் துறையில்…

Read More

 உலகச் சந்தையில் மசகு எண்ணெய் (Crude Oil) விலை, கடந்த 2022-ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. இந்தத் திடீர் விலை உயர்வு உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விவாதிக்க G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வுக்குத் தீர்வாக, G7 நாடுகள் தங்களின் வசமுள்ள அவசரகால எரிபொருள் இருப்புகளை (Emergency Fuel Reserves) சர்வதேச சந்தையில் வெளியிடுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. இந்த முன்மொழிவுக்கு அமெரிக்கா ஏற்கனவே தனது உத்தியோகபூர்வ ஆதரவைத் தெரிவித்துள்ளது.  G7 நாடுகளின் இந்த அதிரடித் திட்டம் மற்றும் அவசரக் கூட்டம் குறித்த செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலையில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. முன்னதாக ஒரு பீப்பாய் 117.65 அமெரிக்க டொலராகக் காணப்பட்ட விலை, தற்போது 104 டொலராகக் குறைந்துள்ளதாக…

Read More

வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான போரை எப்போது முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கலந்துரையாடி, ஒரு பரஸ்பர (Mutual Decision) முடிவு எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தொலைபேசி வாயிலாக டைம்ஸ் ஆப் இஸ்ரேல் இதழுக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் இருவரும் இது குறித்து ஆலோசித்து வருகிறோம். சரியான நேரத்தில் நான் ஒரு முடிவை எடுப்பேன்” என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். போரின் கால அளவு குறித்து தற்போது எந்தவொரு காலக்கெடுவையும் அவர் விதிக்கவில்லை. அமெரிக்கா தனது தாக்குதல்களை நிறுத்தினால், இஸ்ரேல் மட்டும் போரைத் தொடர முடியுமா என்ற கேள்விக்கு, “அத்தகைய சூழல் உருவாக வாய்ப்பில்லை. அதற்கான அவசியம் ஏற்படும் என்றும் நான் நினைக்கவில்லை” என பதிலளித்தார். ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) நியமிக்கப்பட்டது குறித்து கேட்டபோது, “என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” எனக் கூறி…

Read More

வீதியில் மோட்டார் சைக்கிளை கவனக்குறைவாக செலுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து அதனை செலுத்திய நபர் இவ்வாறு கைதாகியுள்ளார். இரு இளைஞர்கள் வீதியில் பயணிப்பவர்களுக்கும் ஏனைய வாகனங்களுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையிலும், விபத்து ஏற்படும் வகையிலும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய சம்பவம் தொடர்பான காணொளியின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். குறித்த மோட்டார் சைக்கிள் ஆனமடுவ பகுதியை நோக்கிச் செலுத்தப்பட்டமை இதன்போது கண்டறியப்பட்டது. அதன்படி, நேற்று (08) மாலை நவகத்தேகம பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால், இந்த கைது இடம்பெற்றுள்ளது. இதன்போது அவர் செலுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது. சந்தேகநபர் இன்று ஆனமடுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், நவகத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

20க்கு-20 உலகக் கிண்ணம்: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்! அஹமதாபாத்: சர்வதேச கிரிக்கெட் சபையினால் நடத்தப்பட்ட இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, இந்திய அணி சம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. அஹமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இந்த இறுதிப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இந்திய அணிக்கு பணிக்கப்பட்டது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியாவின் இமாலய ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 255 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய வீரர்கள் விபரம்: சஞ்சு சாம்சன்: 89 (46 பந்துகள்) இஷன் கிஷன்: 54 (25 பந்துகள்) அபிஷேக் ஷர்மா: 52 (21 பந்துகள்) ஷிவம் டுபே: 26* (08 பந்துகள்) ஹர்திக் பாண்டியா: 18 (13 பந்துகள்) நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜேம்ஸ் நீஷம்…

Read More

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கிகள் மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது எரிபொருள் தாங்கிகள் தீக்கிரையாகியுள்ளன. குவைத் சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள எரிபொருள் தாங்கிகள் மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குவைத் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று அதிகாலை வானூர்தி நிலைய வளாகத்தில் உள்ள எரிபொருள் களஞ்சிய முனையத்தை இலக்கு வைத்து இந்த ஆளில்லா விமான தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தாக்குதலினால் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக குவைத் அரசாங்கம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. அதேநேரம், இந்தத் தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Read More

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கோட்டே தீயணைப்புப் பிரிவின் 04 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Read More

உலகெங்கிலும் உள்ள பெண்களைக் கொண்டாடும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். “அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக: உரிமைகள். நீதி. செயல்” எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வாண்டு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்ற இவ்வேளையில், நம் நாட்டிலுள்ள இலட்சக்கணக்கான பெண்களை ஒரு புதிய கோணத்தில் பார்ப்பதற்கான முயற்சியை நாம் மேற்கொள்வது அவசியமாகும். கடந்த காலங்களில், தகைமையும் ஆளுமையும் பெரும்பாலும் பால்நிலைசார் பங்குபாத்திரங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் ஒரு சமூகமாக நாம் இருந்தோம். எவ்வாறாயினும், வாய்ப்புகள் உருவாகும்போது பெண்ணாக இருப்பது ஒரு தடையாக அமையாத ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு தற்போது நாம் பல சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். போக்குவரத்து மற்றும் நடமாட்டம்(Mobility), சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை, உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகள் போன்ற துறைகளில் இன்று பெண்களின் வளர்ந்து வரும் பங்களிப்பானது, சமூகத்தின் பார்வைகள் பாரம்பரிய எல்லைகளுக்கு அப்பால் விரிவடைந்துள்ளதை எடுத்துக் காட்டுகின்றது. இருப்பினும், நமது அன்றாட…

Read More