Author: Thana

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு எனும் கவர்ச்சி சொல்லாடலுக்கு பின்னால் பெரும் இன அழிப்பு அரசியலும் மறைந்திருப்பதாகவே தோன்றுகின்றது. மக்கள் அதிகரித்ததாக எதிர்பார்த்திருக்கும் ரூபாய் நானூறு இலக்கத்தினை பார்த்துக்கொண்டிருக்க அவர்கள் மீது சுமத்தப்படும் தொழில் சுமை மற்றும் நாம் புறந்தள்ளப்படுகின்றோம் எனும் உளவியல் தாக்கம் காரணமாக தொழிலாளர்கள் தொழிலை விட்டும் தொழிலிடத்தை விட்டும் சுயமாகவே தூர விலகிச் செல்வது மேலும் தீவிரமடையலாம். இது இன அழிப்பின் மாற்று வடிவம் என்பதை மலையக சமூக ஆய்வு மையம் தெளிவாக கூறுவதோடு, இத்தகைய வன்கொடுமையை பெருந்தோட்ட நிறுவனங்களும் அரசாங்கமும் உடன் நிறுத்தி மலையக உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கை பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், மலையக மக்களின் பெரும்பான்மை வாக்குகளாலும் பதவியில் அமர்த்தப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமும் இரத்த வியர்வையின் இலாபத்தை அள்ளும் பெருந்தோட்ட நிறுவனங்களிடமும் மலையக சமூக ஆய்வு மையம் கோரிக்கை விடுக்கின்றது. இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளம் மற்றும்…

Read More

அம்பாறை: அம்பாறை மாவட்டம் தெஹியத்தகண்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் இரு உயர் அதிகாரிகள் 50,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் நேற்றைய தினம் (10)கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹியத்தகண்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது தனிப்பட்ட கோரிக்கை ஒன்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தை நாடியுள்ளார். இதன்போது, அந்த வேலையை முடித்துக் கொடுப்பதற்காக அங்கிருந்த அதிகாரிகள் அவரிடம் இலஞ்சம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் கொழும்பிலுள்ள இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார். சுற்றிவளைப்பு மற்றும் கைது: குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக, நேற்று (10) செவ்வாய்க்கிழமை மாலை இலஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெஹியத்தகண்டிய பகுதியில் விசேட சோதனையை மேற்கொண்டனர். இதன்போது:தெஹியத்தகண்டிய வலயக் கல்விப் பணிப்பாளர்,வலயக் கல்வி அலுவலகத்தின் ஆசிரியர் ஆலோசகர் ஆகிய இருவரும், 50,000 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட…

Read More

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது இன்று (11) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், பரீட்சைக்கான மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், பரீட்சை வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்களில் விளம்பரப்படுத்துதல் அல்லது அவற்றை வைத்திருத்தல் என்பனவும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன. எவரேனும் ஒரு நபரோ அல்லது நிறுவனமோ இந்தச் சட்டங்களை மீறினால், அது குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

போதைப்பொருள் ஒழிப்புக்கான “முழு நாடும் ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் மத்திய மாகாண வேலைத்திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (11) நுவரெலியாவில் நடைபெறவுள்ளது. மலையக மக்கள் எதிர்கொண்டுள்ள பிரதான சமூகப் பிரச்சினையாகப் போதைப்பொருள் பாவனை அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்த விரிவான விழிப்புணர்வுப் பொறிமுறையின் ஊடாக, அம்மக்களை அப்பழக்கத்திலிருந்து மீட்டு, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக அவர்களை உயர்த்துவதே இதன் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களில் சிறப்பாகச் செயற்பட்ட 62 பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் இதில் இடம்பெறவுள்ளது.

Read More

கொழும்பு: இலங்கையில் தற்போது நிலவி வரும் வரட்சியான வானிலையில் நாளையிலிருந்து (பெப்ரவரி 12) மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (பெப்ரவரி 11) அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி நாட்டின் பல பாகங்களில் நிலவும் வானிலை குறித்த விபரங்கள் வருமாறு: மாவட்ட ரீதியான வானிலை முன்னறிவிப்பு மழை பெய்யக்கூடிய இடங்கள்: அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் சிறிதளவான மழை பெய்யக்கூடும். சீரான வானிலை: நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பனிமூட்டமான நிலை: மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும். கடல் பிராந்தியங்களுக்கான அறிவிப்பு நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான வானிலை நிலவரம் பின்வருமாறு கணிக்கப்பட்டுள்ளது: மழை நிலை: ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில்…

Read More

இலங்கை சினிமா வரலாற்றில் புதிய சாதனை! இசைஞானி இளையராஜா இசையமைக்கும் ‘அந்தோனி’ – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! இலங்கைத் தமிழ் திரையுலகை உலகத் தரத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு மைல்கல்லாக, இசைஞானி இளையராஜா முதல்முறையாக இசையமைக்கும் ஈழத்துத் திரைப்படம் ‘அந்தோனி’ (Anthany) படத்தின் முதல் பார்வை (First Look) தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர் துல்கர் சல்மான், தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் ஆகியோர் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 🎥 படக்குழுவினர் விவரம்: தயாரிப்பு: ஓசை பிலிம்ஸ் (Osai Films) தயாரிப்பாளர் – கலைவளரி சக சத்தியநாதன் ரமணதாஸ் & சுகந்தினி இயக்கம்: சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் முதன்மைப் பாத்திரங்கள்: ‘கயல்’ வின்சென்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ புகழ் டி.ஜே. பானு (TJ…

Read More

இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கி இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரினால் வெளியிடப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றுக்கொள்வதாக சட்டமா அதிபர் இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குறித்த தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த ரீட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த மனுவை மேலதிக பரிசீலனைக்காக மார்ச் மாதம் 04ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read More

க.கிஷாந்தன் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல தோட்டத்தின் மேற்பிரிவில் உள்ள தேயிலை தோட்டத்தில் மரத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி, நன்கு வளர்ந்த ஒரு சிறுத்தைப்புலியின் உடல் இன்று (10) ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டதாக நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளை சிறுத்தைப்புலியிடமிருந்து பாதுகாப்பதற்காக, தேயிலை தோட்டத்தில் நடமாடிய சிறுத்தைப்புலியை பிடிக்கும் நோக்கில் இந்த கம்பி வலை அமைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுத்தைப்புலி (09) ஆம் திகதி இரவு கம்பி வலையில் சிக்கியதாகவும், தப்பிக்க முயன்ற போது அதன் கழுத்துப் பகுதி கம்பியில் இறுகப் பட்டு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி ஒன்று உயிரிழந்துள்ளதாக தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகம் மூலமாக நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தை பரிசோதித்த பொகவந்தலாவ பொலிஸார், அதே பகுதியிலேயே தேயிலை தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மேலும் பல கம்பி…

Read More

1750 ரூபா சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து தோட்டப்புறங்களில் மகிழ்ச்சி கொண்டாட்டம் க.கிஷாந்தன் ஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள் செய்து மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நோர்வூட் எல்படை தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1550 ரூபா அடிப்படை சம்பளமாகவும், வரவுக்கான கொடுப்பனவாக 200 ரூபாவும் வழங்கப்படுவதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நோர்வூட் எல்படை தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி பூஜைகள் செய்ததுடன், பாற்சோறு சமைத்து நன்றியை தெரிவித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த தொழிலாளர்கள், கடந்த காலங்களில் சம்பள உயர்வுக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், ஆனால் இந்த முறை எந்தவித போராட்டமும் இன்றி, மக்களை வீதிக்கு இறக்காமல், ஜனாதிபதி உறுதியளித்தபடி சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதற்காக ஜனாதிபதிக்கும் பெருந்தோட்டத் துறை…

Read More

யாழ்ப்பாணம்: அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பம் தொடர்பில் தெரிவதாவது : இன்று (10) அதிகாலை அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டினர். எனினும், வேன் நிறுத்தப்படாமல் மண்டைதீவு நோக்கித் தப்பிச் சென்றது. துப்பாக்கிச் சூடு: தொடர்ந்து தப்பிச் சென்ற வேனை நிறுத்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வாகனம் முயற்சித்தது. எச்சரிக்கை துப்பாக்கிச் சூட்டையும் மீறி வேன் சென்றதால், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அதன் சாரதி படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கைது மற்றும் விசாரணை: குறித்த வேனில் பின் இருக்கைகள் அகற்றப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாணப்…

Read More