Author: Thana

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரைக்கு இணங்க, பாராளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்குதல்) எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளது. இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய சபாநாயகர், குறித்த சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணாக அமையவில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார். அதன்படி, இந்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாகச் சபாநாயகர் மேலும் சுட்டிக்காட்டினார்

Read More

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் 1.9 பில்லியன் ரூபா டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதுடன், இதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் ஏற்கனவே குறித்த மாவட்ட செயலாளர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, ஒவ்வொரு மாணவருக்கும் 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதில் 15,000 ரூபா திறைசேரியில் இருந்தும், 10,000 ரூபா ஜனாதிபதி நிதியத்தினாலும் வழங்கப்படும். அதன்படி, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, மொனராகலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதுடன், ஏனைய மாவட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கும்…

Read More

ஹட்டனில் எழுச்சியுடன் நடைபெற்ற ‘மக்கள் மாநாடு’: மலையக மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க சூளுரை! ஹட்டன்: “மலையக தமிழ் மக்களே, விட்டுக்கொடுக்காமல் போராடுவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ், மலையக மக்களின் காணி, வீட்டுரிமை மற்றும் அடிப்படை சிவில் உரிமைகளை வலியுறுத்தி பாரிய மக்கள் மாநாடு ஒன்று நேற்று (பெப்ரவரி 04) ஹட்டனில் நடைபெற்றது. ஹட்டன் கிருஷ்ண பவன் கலாச்சார மண்டபத்தில் காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்த மாநாட்டில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். மாநாட்டின் முக்கிய கோரிக்கைகள் (பிரகடனம்): இந்த மாநாட்டில் 11 அம்சங்களைக் கொண்ட முக்கிய பிரகடனம் வெளியிடப்பட்டது. தேசிய இன அங்கீகாரம்: மலையகத் தமிழர்களை இந்நாட்டின் ஒரு தேசிய இனமாக அங்கீகரித்து, அவர்களின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தல். காணி மற்றும் வீட்டுரிமை: ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது 20 பேர்ச்சஸ் காணி மற்றும் தனிவீடு…

Read More

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பிப்பதற்கான இணையவழி (Online) முறைமை இன்று (05) முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு 9.00 மணி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளிடமிருந்தும் (ஆண், பெண் இருபாலாரும்) இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான இணையவழி முறைமை பெப்ரவரி 20 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகி, மார்ச் 05 ஆம் திகதி முற்பகல் 9.00 மணியுடன் நிறைவடையும். மேலதிக விபரங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் வெளியிடப்பட்டுள்ளன. இணையத்தளத்தில் உள்ள “Our Services” பிரிவின் கீழ்…

Read More

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Read More

சட்ட விரோத பணப் பரிமாற்றத்தைத் தடுத்தல் தொடர்பான மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டிற்கு இலங்கை தயார் ” அரசாங்கம் என்ற வகையில், நாம் முதலாவதாக சிறந்த ஆட்சியை உருவாக்க அர்ப்பணிப்புடன் உள்ளோம்” – ஜனாதிபதி சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான (AML/CFT) சர்வதேச தரநிலைகள் குறித்து இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு (3rd Mutual Evaluation) தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. அரசாங்கம் என்ற வகையில், வெளித் தரப்பினருக்கு நமது தூய்மையை எடுத்துக் காட்டுவதற்கு முன், நாம் நமக்குப் பொறுப்பாகவும், சிறந்த ஆட்சியை நிலைநிறுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்காக நிறுவன மட்டத்தில் நமக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவோம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான உலகளாவிய கொள்கைகளை…

Read More

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த 7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தங்களை உடனடியாக ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு கோரி, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் கடந்த 9 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பான வழக்கின் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்றில் இடம்பெற்றிருந்த நிலையில் தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. 2020 தொடக்கம் 2021 வரை மூன்று தடவைகள் குற்றம் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 27 வயதுடைய நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் சகேதரியின் கணவர் என்பதுடன் அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். அத்துடன் குற்றவாளிக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த அபராதத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 6 மாத கால சாதாரண சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, இன்று செவ்வாய்க்கிழமை (03) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். ஏற்கெனவே அழைப்பாணை விடுக்கப்பட்டது. இதன்போது, அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால், மற்றுமொரு திகதியை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இன்று செவ்வாய்க்கிழமை (03) அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

Read More

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக கடந்த 27 ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு வருகை தருமாறு அவருக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அன்றைய தினம் தம்மால் வருகை தர முடியாது எனவும், அதற்காக இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறும் ஷிரந்தி ராஜபக்ஷ சட்டத்தரணி ஊடாக பொலிஸாருக்கு அறிவித்திருந்தார்.

Read More