Author: Thana
இலங்கை மின்சார சபையைக் (CEB) கலைப்பதற்கான தீர்மானத்தை அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்தால், எவ்வித முன்னறிவிப்புமின்றி பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மின்சார சபையை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் கீழ் அதனைப் பல நிறுவனங்களாகப் பிரிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான 8 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து 24 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தன. கடந்த ஒரு மாத காலமாகத் தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து முறையான பதில் கிடைக்காத நிலையில், நேற்று (பெப்ரவரி 09) அமைச்சருக்கு மற்றுமொரு அவசரக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட 24 தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கையொப்பமிட்டுள்ளனர். மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதி வர்த்தமானி மூலம் வெளியிடப்படுவதற்கு முன்னர் ஊழியர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கப்பட…
சிகிரியா: சார்ஜ் போட்டிருந்த மொபைல் போன் திடீரென வெடித்துச் சிதறியதில் ஏற்பட்ட தீ விபத்தில், இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவி ஒருவரின் புத்தகங்கள் மற்றும் உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளன. சிகிரியா, கலகொட்டுவ பகுதியைச் சேர்ந்த தம்புள்ளை மத்திய கல்லூரியில் உயர்தரப் பிரிவில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கே இந்தத் துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சிகிரியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நடந்தது என்ன? நேற்று மதியம் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், மின்சாரம் வந்தவுடன் தனது மொபைல் போன் மற்றும் மடிக்கணினி (Laptop) ஆகியவற்றை புத்தக மேசையில் வைத்து சார்ஜ் செய்துள்ளார். பின்னர் மாணவியும் அவரது தாயாரும் அருகில் உள்ள வீட்டிற்குச் சென்றுள்ளனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, மொபைல் போன் திடீரென வெடித்ததில் தீப்பொறி பரவி மேசையிலிருந்த புத்தகங்கள் மற்றும் ஆடைகளில் தீ பிடித்துள்ளது. வீட்டிலிருந்து புகை வருவதைக்…
டி20 உலகக் கிண்ணம் 2026: அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி! கொழும்பு: 2026 டி20 உலகக் கிண்ணத் தொடரின் குரூப் பி (Group B) பிரிவில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், அயர்லாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ஆட்டத்தின் சுருக்கம்: இலங்கை: 163/6 (20 ஓவர்கள்) அயர்லாந்து: 143 (19.5 ஓவர்கள்) முடிவு: இலங்கை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன்: கமிந்து மெண்டிஸ் (இலங்கை) மெண்டிஸ் சகோதரர்களின் அதிரடி ஆட்டம் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்பம் சற்று தடுமாற்றமாக இருந்தது. ஒரு கட்டத்தில் 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறிய நிலையில், குசல் மெண்டிஸ் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஜோடி அணியை மீட்டெடுத்தது. குசல் மெண்டிஸ்: 43 பந்துகளில் 56* ரன்கள் (5 பவுண்டரிகள்) எடுத்து இறுதிவரை…
பொகவந்தலாவை, பெருந்தோட்ட கம்பனிக்குற்பட்ட ஒஸ்போன் குரூப் காசல்ரி தோட்ட தொழிலாளர்களின் நாள் சம்பளமாக 1,750 ரூபா என்ற அடிப்படையில் ஜனவரி மாதத்திற்கான சம்பத்தை பெற்றுள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பற்றுசீட்டில் நாள் சம்பளம் 1,550 ரூபாஎன்ற அடிப்படையிலும் அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் வரவு கொடுப்பனவு வேலை நாட்களின் அடிப்படையில் தோட்ட காரியாலயத்தில் சம்பளம் கடந்த 07 ஆம் திகதி வழங்கப்பட்டதாகவும், மேலும் 27 வருட சேவை காலத்தில் போராட்டமின்ற 400 ரூபா அதிகரித்த சம்பளத்தை முதன்முறையாக கரங்களால் பெற்றுக்கொண்டுள்ளதையடுத்து வாக்குறுதி அறித்தமைக்கு அமைய சம்பள அதிகரிப்பை பெற்றுத்தந்த ஜனாதிபதிக்கு நன்றியினை தெரிவித்துள்ளனர். இதேவேலை தோட்ட நிர்வாகம் சம்பள உயர்வு கிடைத்ததையடுத்து அதிக கொழுந்து பறிக்கவேண்டும் என்ற அழுத்தம் ஏதும் இதுவரையில் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் இன்று முதல் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இந்தப் புதிய கட்டணங்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் எனவும் தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பொது மற்றும் வணிக கடித சேவைகளுக்கான அடிப்படை எடை வகுப்பு 20 கிராமில் இருந்து 30 கிராமாக திருத்தப்பட்டுள்ளதாகவும், துண்டுப்பிரசுரம் அல்லது துண்டுப்பிரசுரங்களின் தொகுப்பின் அதிகபட்ச எடை 100 கிராமில் இருந்து 120 கிராமாக திருத்தப்பட்டுள்ளதாகவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொண்டு நிறுவனங்கள், சமூக சேவைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனுப்பும் கடிதங்களுக்கு முன்னர் வசூலிக்கப்பட்ட 30 ரூபா கட்டணம் தற்போது 50 ரூபாவாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அமைச்சகங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் ஊடாக அனுப்பப்படும் தபால் பொருட்களுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் 110 ரூபாயில் இருந்து 130 ரூபாவாகவும், ஒரு அஞ்சல் அட்டையின் விலை 20…
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் பதுளை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
அண்மையில் ஏற்பட்ட திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட கேகாலை பிரதேச செயலகப் பிரிவில் ஆபத்தான வீடுகளுக்காக வாடகை கொடுப்பனவு வழங்கும் திட்டம் (07) கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாகரிக்கா அதாவுட, கேகாலை பிரதேச சபையின் தலைவர் சரத் ரணசங்க உட்பட கேகாலை பிரதேச செயலாளர் எம் எம் பி பிரியங்கனி பெதன்கொட ஆகியோரின் பங்கு பெற்றலில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்காக 25,000/= ரூபா வீதம் 60 மாதங்களுக்காக இந்தக் கொடுப்பனவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் போது அனர்த்த பிரிவின் உத்தியோகத்தர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு குறித்து கொடுப்பனவுகள் கையளிக்கப்பட்டன.
களுத்துறை மலையகத் தமிழர்களை நேரில் சந்தித்தது மனித உரிமை ஆணைக்குழு: வரலாற்றில் முதல் முறை! மத்துகம: இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் வரலாற்றில் முதல் தடவையாக, களுத்துறை மாவட்ட மலையகத் தமிழ் மக்களை ஆணைக்குழுவின் உயர்மட்டக் குழுவினர் நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் சிறுபான்மையாக வாழும் மலையகத் தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அடிப்படை மனித உரிமை மீறல்கள், தோட்டக் கம்பனிகளின் அத்துமீறல்கள் மற்றும் சமகால சமூகப் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும். உயர்மட்டக் குழுவின் பங்கேற்பு மத்துகம பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த விசேட அமர்வில், மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான திரு. நிமல் புஞ்சிஹேவா, திரு. தனராஜ், பணிப்பாளர் கபிலன் மற்றும் உபகுழு உறுப்பினர் ஜீவரத்தினம் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள், சமயத் தலைவர்கள் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எனப் பலரும்…
மதுகம வாழ் மலையக மக்கள் தொடர்பான மனித உரிமை சார் பிரச்சனைகளை கேட்டறியும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட மக்கள் சந்திப்பு
மதுகம வாழ் மலையக மக்கள் தொடர்பான மனித உரிமை சார் பிரச்சனைகளை கேட்டறியும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட மக்கள் சந்திப்பு: பிரதேச செயலக மண்டபத்தில் நாளை இடம்பெறுகின்றது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) மதுகம பிரதேச பெருந்தோட்ட மக்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இந்த சந்திப்பு மதுக பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்த்தில் நாளை காலை -2026 பெப்ரவரி 07 ஆம் திகதி சனிக்கிழமை. காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இடம்பெறவுள்ளது. இந்த மக்கள் சந்திப்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர். மதுகம பிரதேச மக்களின் மனித உரிமை சார்ந்த பிரச்சினைகளை கேட்டறிவதே இதன் முக்கிய நோக்கமாகும். குறித்த நிகழ்வை இன்ஸ்டிட் போர் பீப்பல் எங்கேஜ்மென்ட் நெட்வொர்க்கிங் நிறுவனம் (iPEN) & பெருந்தோட்ட மக்கள் குரல் அமைப்பு…
கொழும்பு பல்கலைக்கழக லியோ கழகம் “அபிமானி” திட்டத்தின் கீழ் பெண்கள் அதிகாரமளிப்பு முயற்சியான “சுவர்யா” திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
கொழும்பு பல்கலைக்கழக லியோ கழகம், தனது பெண்கள் அதிகாரமளிப்பு முயற்சியான “அபிமானி” திட்டத்தின் முதல் கட்டமாக “சுவர்யா” திட்டத்தை 2026 ஜனவரி 30ஆம் திகதி வட்டவiள தமிழ் மகா வித்தியாலயத்தில் வெற்றிகரமாக நடத்திaது. “அபிமானி” திட்டம் பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களை விழிப்புணர்வு, கல்வி மற்றும் அடிப்படை வளங்களுக்கான அணுகல் மூலம் சமாளிக்க நோக்கமுடைய பெண்கள் அதிகாரமளிப்பு திட்டமாகும். இதன் முதல் கட்டமாக அமைந்த “சுவர்யா” திட்டம், பள்ளி மாணவிகளிடையே மாதவிடாய் சுகாதாரமும் மரியாதையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது. இந்த நிகழ்ச்சியின் போது மாணவிகளுக்கு சுகாதார நப்கின்கள் மற்றும் மாதவிடாய் கழிவுகளை அகற்றுவதற்கான தூக்கி எறியும் தொட்டிகள் வழங்கப்பட்டன. அதனுடன், பெண்கள் சுகாதாரத்தைப் பற்றிய விழிப்புணர்வு அமர்வு ஒன்றும் நடத்தப்பட்டு, மாதவிடாய் ஆரோக்கியம், தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொதுவான தவறான நம்பிக்கைகள் குறித்து முக்கியமான தகவல்கள் வழங்கப்பட்டன. இந்த முயற்சியில் 35க்கும் மேற்பட்ட லியோ உறுப்பினர்கள் செயற்பாட்டுடன் பங்கேற்று, தலைமைத்துவம், குழு பண்பு மற்றும் சமூக பொறுப்புணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்தினர்.…