Author: Thana

78 ஆவது சுதந்திர தின விழா ‘இலங்கையை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சுதந்திர தின பேரணிக்கான முன்னாயத்த ஒத்திகை நடவடிக்கைகள் ஜனவரி 30, 31 மற்றும் பெப்ரவரி 01, 02 ஆகிய திகதிகளில் நடைபெறும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா குறிப்பிட்டுள்ளார். 78 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்…

Read More

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரச சேவையை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு இணங்க, உள்ளக விவகாரப் பிரிவுகளை நிறுவ அறிவுறுத்தப்பட்டுள்ள 250 அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் (29) இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக, 106 அரச நிறுவனங்களில் உள்ளக விவகாரப் பிரிவுகள் நிறுவப்பட்டு, இதற்கு முன்னர் பயிற்சிகள் நடைபெற்றதுடன், இரண்டாவது கட்டமாக, மேலும் 250 அரச நிறுவனங்களில் உள்ளக விவகார பிரிவுகளை நிறுவ அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதன்படி, Clean Sri Lanka வேலைத் திட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்தால் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் தரவரிசையில் இலங்கை உயர் இடத்தில் இருந்தாலும், 2024 ஊழல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில் உள்ளதுடன், இது ஏனைய துறைகளில் தரவரிசையில்…

Read More

“தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை நடைமுறைப்படுத்த பெருந் தோட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம்” ___ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட 2025 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, அரச மற்றும் தனியார் துறை சம்பள உயர்விற்கு இணையாக தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 1,700/- ரூபா வரை அதிகரிக்க முன்மொழியப்பட்டது. அந்த முன்மொழிவுக்கு அமைய, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன , பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து பெருந் தோட்ட நிறுவனங்களுடன் (RPC) பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்த அதே வேளை பேச்சுவார்த்தைகளின் பெறுபேறாக, மலையக தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்கான சம்பள உயர்வை உறுதிப்படுத்த முடிந்தது. அதன்படிப்படையில், 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, கௌரவ ஜனாதிபதி அவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1,750/- ரூபா வரை…

Read More

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது மற்றும் தடை செய்வது குறித்து அரசாங்கம் தீவிர அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான ஆரம்பகட்டக் கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசிப் பயன்பாட்டை முழுமையாக நிறுத்த வேண்டும் என அரசாங்கம் ஏற்கனவே கொள்கை ரீதியான முன்மொழிவை முன்வைத்துள்ளது. இதற்கு இணையாக, தற்போது வளர்ந்து வரும் டிஜிட்டல் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் சமூக ஊடகப் பயன்பாட்டையும் தடை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. உலகின் பல நாடுகள் ஏற்கனவே பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகத் தடையை சட்டப்பூர்வமாக்கியுள்ளன. அந்த நாடுகளின் முன்னுதாரணங்களைப் பின்பற்றி இலங்கையிலும் இவ்வாறான சட்டங்களைக் கொண்டுவருவது குறித்து அமைச்சர் சுட்டிக்காட்டினார். “பிள்ளைகள் இணையத்துடன் இணைவதன் மூலம் பல்வேறு ஒழுக்கக்கேடான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, சமூக ஊடகங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது காலத்தின்…

Read More

2026 கல்வி ஆண்டு: புதிய சீர்திருத்தங்களுடன் முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் தேசிய விழா இன்று! கொழும்பு: இலங்கையில் 2026-ஆம் கல்வியாண்டிற்காக பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் தேசிய விழா இன்று (ஜனவரி 29) நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெறுகின்றது. புதிய கல்விச் சீர்திருத்தம் அமுல் இந்த ஆண்டு முதல் முதலாம் தரத்திற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் புதிய பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. மாணவர்களின் கற்றல் சுமையைக் குறைத்து, ஆளுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. தேசிய விழா மாணவர்களை வரவேற்கும் பிரதான தேசிய விழா, அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது. கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதன்போது முதலாம் தரத்தில் இணையும் மாணவர்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை விடுத்துள்ள பிரதமர் பின்வரும் முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்: வளமான கல்வி: “வளமான நாட்டிற்குள்…

Read More

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பதுளை, காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. களுத்துறையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடல் நிலை: களுத்துறையிலிருந்து கொழும்பு மற்றும்…

Read More

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More

பெருந்தோட்ட சமூகத்தின் வீட்டுக் கனவை நினைவாக்கும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காவது கட்டம் விரைவு படுத்தப்பட்டது இலங்கையின் தோட்டத்துறையில் ஈடுபட்டுள்ள மக்கள் எதிர்கொள்ளும் வீடு மற்றும் கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிலை பெறான தீர்வு ஒன்றை வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் “இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காவது கட்டம்” தொடர்பான விசேட கலந்துரையாடல் (26) வீடமைப்பு, நிருமாணம் மற்றும் நீர் விநியோக அமைச்சர் வைத்தியர் எச் எம் சுசில் ரணசிங்க மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் அலுவலகத்தில் இடம் பெற்றது. 2025 ஆம் ஆண்டில் 2,026 பயனாளிகளுக்காக வெற்றிகரமாக வீட்டு உரிமை வழங்குவதற்கு முடிந்தவுடன் 2026 ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை மற்றும் பயனாளிகளை தெரிவு செய்வதற்காக உரிய காலப் பகுதியுடனான திட்டம் மற்றும் அச்செய்பாடு தொடர்பான ஆரம்பக் கலந்துரையாடல் இதன் போது…

Read More

திட்வா” புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுவாழ்வு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பிற தரப்பினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் காணும் நோக்கில் கண்டி மற்றும் கம்பளை பகுதிகளில்  (26) கண்காணிப்பு பயணமொன்று மேற்கொள்ளப்பட்டது. “Rebuilding Sri Lanka” தேசிய வேலைத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் இக்கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் இணைந்துக் கொண்டனர். மேல் கலஹா மற்றும் கெலிஓயா ஆகிய பகுதிகளில் அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்குத் தேவையான நிலங்களை ஒதுக்குதல் மற்றும் அனர்த்த நிவாரணங்களை முறையாக வழங்குதல் உள்ளிட்ட அனர்த்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இங்கு அவதானிக்கப்பட்டன. கெலிஓயா பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புகளும், கலஹா மேல் பகுதியில் தோட்டப் புற மக்களின் குடியிருப்புகளும் இதன் போது கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது. இதன் போது அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற அனர்த்த நிவாரணங்கள்…

Read More